சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இருபிறப்பாளன் | பார்ப்பனன் ; உபநயனத்திற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்புமாகவுள்ளவன் ; சந்திரன் ; சுக்கிரன் . |
| இருபிறப்பு | இரண்டு வகையான பிறப்பு ; பல் ; பார்ப்பனர் ; சந்திரன் ; பறவை . |
| இருபிறவி | இருசாதி சேர்ந்து பிறக்கும் உயிரினம் . |
| இருபுட்சன் | இடியேறு ; இந்திரன் ; துறக்கம் . |
| இருபுட்சி | இந்திரன் . |
| இருபுடைமெய்க்காட்டு | ஒன்றே இருவேறு வகையாகத் தோற்றுவது . |
| இருபுரியாதல் | மாறுபாடாதல் . |
| இருந்தும் | ஆகவும் . |
| இருந்தேத்துவார் | அரசனை உட்கார்ந்தே புகழ்வார் , மாகதர் . |
| இருந்தை | கரி . |
| இருநடுவாதல் | இடைமுரிதல் . |
| இருநா | பிளவுபட்ட நாக்கையுடையது ; உடும்பு ; பாம்பு . |
| இருநிதி | சங்கநிதி பதுமநிதி . |
| இருநிதிக்கிழவன் | சங்கநிதி பதுமநிதிக்கு உரியவன் குபேரன் . |
| இருநிதிக்கோன் | சங்கநிதி பதுமநிதிக்கு உரியவன் குபேரன் . |
| இருநியமம் | இருவேறு கடைகள் ; அல்லங்காடி நாளங்காடி . |
| இருநிலம் | பெரிய பூமி . |
| இருநிறமணிக்கல் | இரத்தினவகை . |
| இருநினைவு | இரண்டுபட்ட எண்ணம் . |
| இருநீர் | பெருநீர்ப்பரப்பு , கடல் . |
| இருப்பணிச்சட்டம் | வண்டியோட்டுவோன் இருத்தற்குரிய முகப்புச் சட்டம் . |
| இருப்பவல் | ஒரு மருந்துப் பூண்டு . |
| இருப்பன | நிலைத்திணைப் பொருள்கள் . |
| இருப்பாணி | இரும்பினால் செய்த ஆணி . |
| இருப்பிடம் | வாழும் இடம் ; இருக்கை ; பிருட்டம் . |
| இருப்பு | இருக்கை ; மலவாய் ; இருப்பிடம் ; குடியிருப்பு ; நிலை ; கையிருப்பு ; பொருண்முதல் . |
| இருப்புக்கச்சை | வீரர் அணியும் இருப்புடை . |
| இருப்புக்கட்டி | வரிவகை . |
| இருப்புக்கட்டை | சாவியின் தண்டு ; சுத்தியல் . |
| இருப்புக்கம்பை | வண்டி ஓட்டுபவனுக்கு வண்டியின்முன் அமைக்கப்பட்ட இருக்கை . |
| இருப்புக்காய்வேளை | இரும்புக்காய்வேளை என்னும் செடி . |
| இருப்புக்கிட்டம் | இரும்பு உருகிய கட்டி . |
| இருப்புக்கொல்லி | சிவனார்வேம்பு . |
| இருப்புக்கோல் | நாராசம் ; அறுவை மருத்துவனின் கருவியுள் ஒன்று . |
| இருப்புச்சட்டம் | காண்க : இருப்பணிச்சட்டம் . |
| இருப்புச்சலாகை | இரும்பினால் ஆன நீண்ட கோல் . |
| இருப்புச்சிட்டம் | காண்க : இருப்புக்கிட்டம் . |
| இருப்புச்சில் | சிறுவர் விளையாட்டுக் கருவி . |
| இருப்புச்சீரா | இரும்பினாலான சட்டை . |
| இருப்புச்சுவடு | இரும்பினாலான சட்டை . |
| இருப்புச்சுற்று | இரும்புப் பூண் . |
| இருப்புத்தாள் | இருப்புக்கோல் . |
| இருப்புத்திட்டம் | செலவு நீக்கி மீதியுள்ள தொகை . |
| இருப்புநகம் | வெற்றிலை கிள்ளும் கருவி . |
| இருப்புநாராசம் | ஓர் இரும்பு ஆயுதம் ; ஓலையில் கோக்கப்படும் இருப்புக்கோல் . |
| இருப்புநெஞ்சு | இரக்கமில்லாத நெஞ்சு , வன்மனம் . |
| இருப்புப்பத்திரம் | இரும்புத் தகடு . |
| இருப்புப்பாதை | இரயில் பாதை , தண்டவாளவழி . |
| இருப்புப்பாரை | குழி தோண்டுங் கருவி . |
| இருப்புப்பாளம் | இரும்புக்கட்டி . |
| இருப்புமணல் | இரும்பு கலந்த மண் . |
| இருப்புமுள் | தாறு ; யானை அல்லது குதிரையைக் குத்தும் கோல் . |
| இருப்புமுறி | செடிவகை . |
| இருப்புயிர் | நரகர் உயிர் . |
| இருப்புலக்கை | இரும்பாலான உலக்கை . |
| இருப்புலி | துவரை . |
| இருப்பூறல் | இரும்புக் கறை . |
| இருப்பூறற்பணம் | கலப்பு வெள்ளிநாணயம் . |
| இருப்பெழு | உழலை ; குறுக்காக இடும் இரும்புக் கம்பி . |
| இருப்பை | இலுப்பைமரம் . |
| இருப்பைப்பூச்சம்பா | நெல்வகை . |
| இருபது | இரண்டு பத்து . |
| இருபஃது | இரண்டு பத்து . |
| இருபன்னியம் | சேங்கொட்டை . |
| இருபால் | இருமை ; இம்மை மறுமை ; இரண்டு பக்கம் . |
| இருபாவிருபஃது | பிரபந்தவகை , வெண்பா அகவல் மாறிமாறி இருபது பாடல் அந்தாதியாய் வருவது ; மெய்கண்ட சாத்திரத்துள் ஒன்று . |
| இருபான் | இருபது . |
| இருதுவலி | இருதுகாலகுன்மம் என்னும் நோய் . |
| இருதுவாதல் | பெண் பூப்படைதல் . |
| இருந்த திருக்கோலம் | திருமாலின் வீற்றிருக்கும் இருப்பு . |
| இருந்ததேகுடியாக | எல்லாருமாக . |
| இருந்தாற்போல் | திடீரென்று . |
| இருந்தில் | காண்க : இருந்தை . |
| இருந்து | காண்க : இருந்தை ; ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு . |
| இருந்துபோதல் | செயலறுதல் ; கீழே அழுந்துதல் ; விலைபோகாது தங்குதல் . |
|
|
|