சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இருமுற்றிரட்டை | ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெதுகையாய் வருவது . |
| இருமுறி | இருப்புமுறி என்னும் செடி . |
| இருமை | பெருமை ; கருமை ; இருதன்மை ; இருபொருள் ; இம்மை மறுமைகள் . |
| இருலிங்கவட்டி | சாதிலிங்கம் . |
| இருவகை அறம் | இல்லறம் துறவறம் . |
| இருவகை ஏது | ஞாபகஏது காரகஏது . |
| இருவகைக் கூத்து | சாந்தி விநோதம் . |
| இருவகைத்தோற்றம் | இயங்கும்பொருள் இயங்காப் பொருள் , சரம் அசரம் . |
| இருவகைப்பொருவு | உறழ்பொருவு உவமைப் பொருவு . |
| இருவகைப்பொருள் | கல்விப்பொருள் செல்வப்பொருள் . |
| இருவணைக்கட்டை | வண்டியின் முகவணை . |
| இருவயிற்பற்று | அகப்பற்று புறப்பற்று . |
| இருவருந்தபுநிலை | எயிலின் அகத்தும் புறத்தும் நின்ற வேந்தரிருவரும் பொருது வீழ்ந்தமை கூறும் புறத்துறை . |
| இருவல் நொருவல் | இடிந்தும் இடியாதது ; நன்றாக மெல்லப்படாத உணவு . |
| இருவல் நொறுவல் | இடிந்தும் இடியாதது ; நன்றாக மெல்லப்படாத உணவு . |
| இருவாட்சி | கருமுகைச் செடி . |
| இருவாட்டித்தரை | மணலும் களியுமான நிலம் . |
| இருவாடி | காணக : இருவாட்சி . |
| இருவாம் | நாமிருவரும் . |
| இருவாய்க்குருவி | ஒருவகை மலைப்பறவை . |
| இருவாய்ச்சி | காண்க : இருவாட்சி . |
| இருவாரம் | மேல்வாரமும் குடிவாரமும் . |
| இருவி | தினை முதலியவற்றின் அரிதாள் ; வச்சநாபி என்னும் நச்சுப்பூண்டு . |
| இருவிக்காந்தம் | ஒரு நச்சு மூலிகை . |
| இருவில் | கரிய ஒளி . |
| இருவிள | பனையோலை ; வேணாட்டகத்து ஓர் ஊர் ; கருவூரினகத்து ஒரு சேரி . |
| இருவினை | நல்வினை தீவினைகள் . |
| இருபுலன் | மலசலங்கழிநிலை . |
| இருபுறவசை | வசைபோன்ற வாழ்த்து . |
| இருபுறவாழ்த்து | வாழ்த்துப்போன்ற வசை . |
| இருபுனல் | கீழ்நீர் மேல்நீர்கள் . |
| இருபூ | இருபோகம் , ஆண்டுக்கு இருமுறை பெறும் விளைச்சல் . |
| இருபூலை | பூலா ; வெள்ளைப் பூலாஞ்சி . |
| இருபெயரொட்டு | பொதுவும் சிறப்புமாக வரும் இரு பெயர்கள் 'ஆகிய' என்னும் பண்புருபு இடையே தொக்குநிற்ப இணைந்து வருவது . |
| இருபேருரு | இரு வேறு வடிவம் ஒருங்கிணைந்து காண்பது ; குதிரை முகமும் ஆள் உடலுங்கொண்ட சூரன் ; நரசிங்கன் ; ஆண்டலைப்புள் ; மாதொருகூறன் . |
| இருபொருள் | கல்வியும் செல்வமும் ; வெவ்வேறு வகையான இரண்டு கருத்து . |
| இருபோகம் | இருமுறை விளைவு ; நிலமுடையோனுக்கும் குடிகளுக்கும் உரிய பங்கு . |
| இருபோது | காலை மாலைகள் . |
| இரும் | இருமல் ; பெரிய ; கரிய . |
| இரும்பலி | செடிவகைகளுள் ஒன்று . |
| இரும்பிலி | செடிவகைகளுள் ஒன்று . |
| இரும்பன் | அகழெலி . |
| இரும்பாலை | பாலை மரவகை ; இரும்புத்தொழிற்சாலை . |
| இரும்பினீர்மை | இழிந்தநிலை . |
| இரும்பு | கரும்பொன் ; ஆயுதம் ; பொன் ; செங்காந்தள் ; கிம்புரி ; கடிவாளம் . |
| இரும்புக்காய்வேளை | வேளைவகை . |
| இரும்புக்கொல்லன் | கருங்கொல்லன் . |
| இரும்புச்சலாகை | அறுவைச் சிகிச்சைக் கருவிவகை ; இருப்பு நாராசம் . |
| இரும்புத்துப்பு | மண்டூரம் ; இருப்புக்கிட்டம் . |
| இரும்புத்துரு | மண்டூரம் ; இருப்புக்கிட்டம் . |
| இரும்புப்பெட்டி | உருக்கால் அமைந்த பேழை . |
| இரும்புப் பொடி | அரப்பொடி . |
| இரும்புயிர் | நரகருயிர் . |
| இரும்புலி | ஒருவகைச் செடி ; துவரை . |
| இரும்புள் | மகன்றில் பறவை . |
| இரும்புளி | மரவகை . |
| இரும்பை | காண்க : இருப்பை ; குடம் ; பாம்பு . |
| இரும்பொறை | மிகுந்த பொறுமை ; சேரர் பட்டப் பெயர்களுள் ஒன்று . |
| இருமடங்கு | இரட்டித்த அளவு . |
| இருமடி | இருமடங்கு ; இருவேறு முறையில் மாறிவருகை . |
| இருமடியாகுபெயர் | ஆகுபெயர்வகை ; 'கார்' என்னும் கருமையின் பெயர் முதலில் மேகத்தையும் , பின் அம் மேகம் மழை பொழியும் கார் காலத்தையும் உணர்த்துதல் போல்வது . |
| இருமடியேவல் | ஈரேவல் ; பிறவினையின்மேற் பிறவினை ; 'கற்பிப்பி ' என்றாற்போல வருவன . |
| இருமரபு | தாய்வழி தந்தை வழிகள் . |
| இருமருந்து | சோறும் தண்ணீரும் . |
| இருமல் | கக்கல் ; காசம் ; ஆட்டு நோய்வகை . |
| இருமனப்பெண்டிர் | பரத்தையர் . |
| இருமனம் | வஞ்சகம் ; துணிபின்மை . |
| இருமா | பத்தில் ஒரு பங்கு . |
| இருமாவரை | அரைக்கால் , எட்டில் ஒரு பங்கு . |
| இருமான் | எலிவகை . |
| இருமிமலைத்தகி | பூனைக்கண் குங்கிலியம் . |
| இருமு | இருமல் . |
| இருமுதல் | கக்குதல் |
| இருமுதுகுரவர் | பெற்றோர் . |
| இருமுதுமக்கள | பெற்றோர் . |
|
|
|