சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| இரேகி | ஒன்றுபடு ; நற்பேறுடையவன்(ள்) ; கீழ்மகன்(ள்) . |
| இரேகித்தல் | ஒன்றுபடுதல் ; எழுதுதல் ; சேருதல் ; பழகுதல் . |
| இரேகுத்தி | ஒரு பண்வகை . |
| இரேகை | வரி ; கைகால் ; முகம் முதலியவற்றிலுள்ள வரை ; வரை ; எழுத்து ; சந்திரகலை ; அரசிறை ; தராசு , படி முதலியவற்றின் அளவு கோடு ; இடையறா ஒழுங்கு ; வஞ்சம் ; சித்திரம் . |
| இரேசககுணா | கடுகு . |
| இரேசகம் | பிராணாயாமம் ; காற்றை மூக்கால் புறத்தே கழிக்கை ; பேதிமருந்து . |
| இரேசகி | கடுக்காய் ; சீந்தில் . |
| இரேசகித்தல் | மூச்சுக் காற்றை வெளிவிடுதல் . |
| இரேசம் | இதள் , சூதம் , பாதரசம் . |
| இரேசன் | வெள்ளைப்பூண்டு ; அரசன் ; வருணன் ; திருமால் . |
| இரேசனம் | விரேசனம் ; குறைத்தல் ; மூக்கின் ஒரு தொளையிலிருந்து காற்றை வெளிவிடுதல் ; வெறுமையாக்கல் . |
| இரேசனி | சிவதை ; ஞாழல் ; நேர்வாளவித்து ; மனோசிலை என்னும் நஞ்சுவகை . |
| இரேசித்தல் | மூச்சை வெளியே விடுகை . |
| இரேசிதம் | குதிரை நடையுள் ஒன்று ; குதிரை வட்டமாய் ஓடல் ; நாட்டியவகை . |
| இரேசுதல் | செரியாமை . |
| இரேணு | துகள் ; பூந்துகள் ; பற்பாடகப் புல் . |
| இரேணுகை | காட்டுமிளகு ; தவிடு ; தக்கோலம் ; பரசுராமன் தாய் . |
| இரேதசு | விந்து , சுக்கிலம் . |
| இரேபன் | கொடியன் ; நிந்திக்கத்தக்கவன் |
| இரேயம் | காய்ச்சி வடித்த சாராயம் ; கள் . |
| இரேவடம் | சூறைக்காற்று ; வலம்புரிச் சங்கு ; மூங்கில் . |
| இரேவதி | ஒரு நட்சத்திரம் ; பலராமன் மனைவி . |
| இரேவற்சின்னி | நாட்டு மஞ்சட் சீனக்கிழங்கு ; மரவகை . |
| இரேவு | ஆயத்துறை ; இறங்குதுறை . |
| இரேவை | நருமதை ஆறு ; அவுரி . |
| இரை | ஒலி ; பறவை , விலங்கு முதலியவற்றின் உணவு ; உண்ட உணவு ; நாக்குப்பூச்சி ; பூமி ; நீர் ; கள் ; வாக்கு . |
| இரைக்குடல் | இரைப்பை . |
| இரைக்குழல் | உணவு செல்லுங்குழல் . |
| இரைகொள்ளி | இரையொதுக்கும் பறவையின் மிடறு ; பெருந்தீனி தின்போன்(ள்) . |
| இரைச்சல் | ஆரவாரம் , ஒலி . |
| இரைசல் | மாணிக்கக் குற்றவகை ; சுரசுரப்பு . |
| இரைத்தல் | ஒலித்தல் ; சீறுதல் ; மூச்சுவாங்குதல் ; வீங்குதல் . |
| இரைத்து | இரண்டு ; புலிதொடக்கி . |
| இரைதல் | ஒலித்தல் ; கூச்சலிடுதல் . |
| இரைதேர்தல் | உணவு தேடுதல் . |
| இரைதேறுதல் | உணவு செரியாமல் தங்குதல் . |
| இரைப்பற்று | செரியாத உணவு . |
| இரைப்பு | இரைச்சல் ; மூச்சு வாங்குகை ; இரைப்புநோய் ; மோகம் ; கரப்பான்பூச்சி . |
| இரைப்புமாந்தம் | மாந்தவகை . |
| இரைப்பூச்சி | நாக்குப்பூச்சி |
| இரைப்பெட்டி | பறவை இரையொதுக்கும் மிடற்றுப்பை ; பிச்சை வாங்கும் பெட்டி . |
| இரைப்பெலி | இழுப்புண்டாக்கும் எலி . |
| இரைப்பை | இரைக்குடல் . |
| இருவினையொப்பு | புண்ணிய பாவங்களை ஒரு தன்மையாகச் செய்துவிடுகை . |
| இருவீடு | ஒருவகை மரம் . |
| இருவுதல் | இருக்கச்செய்தல் . |
| இருவேம் | இருவராகிய நாம் . |
| இருவேரி | வெட்டிவேர் . |
| இருவேலி | வெட்டிவேர் . |
| இருவேல் | பர்மா நாட்டு மரவகை . |
| இருள் | அந்தகாரம் ; கறுப்பு ; மயக்கம் ; அறியாமை ; துனபம் ; நரகவிசேடம் ; பிறப்பு ; குற்றம் ; மரகதக்குற்றம் ; எட்டனுள் ஒன்றாகிய கருகல் ; மலம் ; யானை ; இருவேல் ; இருள்மரம் . |
| இருள்தல் | ஒளிமங்குதல் ; கறுப்பாதல் ; அறியாமை கொள்ளுதல் . |
| இருளுதல் | ஒளிமங்குதல் ; கறுப்பாதல் ; அறியாமை கொள்ளுதல் . |
| இருள்பாலை | ஏழிலைப் பாலை . |
| இருள்மரம் | ஒருவகைப் பெரிய மரம் . |
| இருள்வட்டம் | எழுநரகத்துள் ஒன்று . |
| இருள்வரை | கிரௌஞ்சமலை . |
| இருள்வலி | சூரியன் . |
| இருள்வாசி | காண்க : இருவாட்சி |
| இருள்வீடு | நூக்கமரம் ; சோதிவிருட்சம் . |
| இருள்வேல் | காண்க : இருவேல் . |
| இருளடித்தல் | இருளால் தீங்குண்டாதல் ; வெளிப்படாது மறைத்தல் . |
| இருளடைதல் | பொலிவின்றியிருத்தல் . |
| இருளல் | காண்க : இருள்(ளு)தல் . |
| இருளறை | ஆணவமலம் . |
| இருளன் | ஒருசார் வேடச் சாதியான் ; ஒரு சிறு தேவதை ; வரிக்கூத்துவகை . |
| இருளி | பன்றி ; கருஞ்சீரகம் ; இருசி , பூப்படையும் தன்மையில்லாப் பெண் ; நாணம் . |
| இருளுலகம் | நரகம் . |
| இருளுவா | அமாவாசை . |
| இருளை | நாணம் . |
| இருளோவியகரை | முத்தி . |
| இரேக்கு | தங்கத்தாள் ; பூவிதழ் ; ஒருவகைச் சல்லா . |
| இரேகம் | அச்சம் ; ஐயம் ; தவளை ; உடல் ; வயிற்றுக்கழிச்சல் . |
| இரேகழி | காண்க : இடைகழி . |
| இரேகாம்சம் | பூமியைத் தென்வடலாக 360 சமபங்குகளாய்ப் பிரிக்கப்பட்டவற்றுள் ஒரு பாகம் . |
|
|
|