இலண்டம் முதல் - இலாகன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
இலவுகிகம் உலகியல் ; மரபு ; உலகப்போக்கை உணர்ந்து நடத்தல் .
இலளித பஞ்சகம் ஓர் இசை விகற்பம் .
இலளிதம் இச்சை ; பொருளின் தெளிவு ; அழகியது ; ஒரு பண் ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; விரும்பப்பட்டது .
இலளிதை பார்வதி ; ஒருவகை முத்தாரம் ; கத்தூரி ; முப்பத்திரண்டு பண்களுள் ஒன்று .
இலாக்கா ஆட்சிப்பிரிவு ; ஆட்சித்துறை .
இலாக்கிரி செம்மெழுகு .
இலாக்கை செம்பஞ்சு ; அரக்கு .
இலாகவம் திறமை ; உடல்நலம் ; கவனமின்மை ; எளிமை ; நிந்தனை ; சுருக்கம் ; விரைவு .
இலாகன் மீன்வகை .
இலம் இல்லம் ; இல்லறம் ; வறுமை .
இலம்பகம் நூலின் உட்பிரிவு ; மாலை ; தலைக்கோலம் என்னும் நுதலனி .
இலம்படுதல் வறுமையடைதல் .
இலம்படை இடுக்கண் ; வறுமை .
இலம்பம் தொங்கல் ; மாலை ; நிறுதிட்டம் ; வானநூலில் கூறும் ஒரு பாகை அளவு ; உயர்வு ; அகலம் ; கைக்கூலி .
இலம்பமானம் கழுத்தில் தொங்கும் தாழ்வடம் .
இலம்பனம் காண்க : இலம்பம் .
இலம்பாட்டோன் வறியவன் .
இலம்பாடி ஒரு சாதி ; வறியவன்(ள்) .
இலம்பாடு வறுமை ; துன்பம் .
இலம்பிகை அண்ணாக்கு , உள்நாக்கு .
இலம்பிலி மரவகை .
இலம்பு தொங்குகை .
இலம்பை வறுமை ; இடுக்கண் ; அவலநிலை .
இலம்போதரன் பெருவயிறன் ; விநாயகக் கடவுள் .
இலமலர் இலவமலர் .
இலயகாலம் அழியுங்காலம் , ஊழிக்காலம் .
இலயசக்தி அருவ சிவனின் சத்தி .
இலயசிவன் அறிவிலும் ஆற்றலிலும் கலந்திருக்கும் அருவ சிவன் .
இலயஞானம் சுருதி ஒப்புமை காணும் அறிவு ; கீத ஞானம் , இலய ஞானம் , சுருதி ஞானம் , தாள ஞானம் என்னும் நால்வகைக் கேள்விகளுள் ஒன்று .
இலயத்தானம் ஒடுங்குமிடம் .
இலயதத்துவம் ஊழிக் காலத்துத் தன் தொழில்கள் எல்லாம் ஒடுங்கிக் காரண மாத்திரையாய் நிற்கும் இறைவன் நிலை .
இலயம் அழிவு ; இரண்டறக் கலக்கை ; அறிவு மட்டுமே திருமேனியாக உள்ள கடவுள் நிலை ; ஒழிவு ; தாளவறுதி ; சுருதிலயம் ; கூத்து வேறுபாடு .
இலயமாதல் ஒன்றாதல் ; அழிதல் .
இலயமுத்தி பரம்பொருளொடு இரண்டறக் கலக்கையாகிய முத்தி .
இலயன் காண்க : இலயம் ; சிவன்
இலயி காண்க : இலயம் ; சிவன்
இலயித்தல் ஒடுங்குதல் ; இரண்டு பொருள் வேற்றுமையறக் கலத்தல் , ஒன்றாதல் ; அழிதல் .
இலயை தாளப் பிரமாணம் பத்தனுள் ஒன்று .
இலலாடம் நெற்றி .
இலலாடலிபி தலையெழுத்து .
இலலாடிகை சந்தன முதலியவற்றால் நெற்றியில் இடும் பொட்டு ; நெற்றியில் அணியும் சுட்டி .
இலலாமம் அடையாளம் ; அரசச்சின்னம் ; அழகு ; அணிகலன் ; இரேகை ; குதிரை ; கொடி ; கொம்பு ; தன் சாதியில் உயர்ந்தது ; நெற்றியணி ; நெற்றிக்குறி ; பிடர்மயிர் ; பெருமை ; வால் .
இலலிதபஞ்சமி ஒரு பண்வகை .
இலலிதம் அழகு ; அபிநயம் ; உபசாரம் ; ஒரு பண் விகற்பம் ; காமக்குறி ; பரிகாசம் ; மகளிர் விளையாட்டு ; இனிமை .
இலலிதை முப்பத்திரண்டு பண்களுள் ஒன்று ; பார்வதி ; பெண் ; மான்மதம் .
இலவங்கச் சுருட்பாக்கு பாக்குவகை .
இலவங்கச் சூர்ப்பாக்கு பாக்குவகை .
இலவங்கப் பட்டை கருவாப்பட்டை ; தாளிசபத்திரி .
இலவங்கப்பூ கிராம்பு ; காதணிவகை .
இலவங்கபத்திரி ஒரு மருந்திலை .
இலவங்கம் கிராம்பு ; கருவாமரம் .
இலவசம் விலையில்லாதது .
இலவயம் விலையில்லாதது .
இலவணம் உப்பு .
இலவண வித்தை மாயவித்தைகளுள் ஒன்று .
இலவந்தி இயந்திர வாவி ; வாவியைச் சூழ்ந்த வசந்தச் சோலை .
இலவந்திகை இயந்திர வாவி ; வாவியைச் சூழ்ந்த வசந்தச் சோலை .
இலவந்தீவு ஏழு தீவுகளுள் ஐந்தாவது .
இலவம் இலவு ; இலவந்தீவு ; அற்பம் ; காலவகை ; ஒரு கால அளவு ; இலவங்கம் ; கிராம்பு ; சாதிக்காய் ; பசு , ஆடு முதலியவற்றின் மயிர் ; பூசை .
இலவம்பஞ்சு இலவமரத்துப் பஞ்சு .
இலவலேசம் மிகச் சிறியது .
இலவித்திரம் அரிவாள் .
இலவு இலவமரம் ; தேற்றாமரம் .
இலண்டம் இலத்தி ; குதிரை , யானை முதலியவற்றின் மலம் .
இலணை அரசமரம் .
இலத்தி காண்க : இலண்டம் .
இலத்தை காண்க : இலண்டம் .
இலதை படர்கொடி ; வள்ளிக்கொடி ; வால்மிளகுகொடி ; இலந்தை ; முள்மரவகை ; மரக்கொம்பு ; நூற்கும் நூல் ; இணையாவினைக்கை வகை ; ஒருவகை ஒலி .
இலதைக்கை பிண்டிக்கை முப்பத்து மூன்றனுள் ஒன்று .
இலந்தை முள்மரவகை ; ஒரு பழமரவகை ; நீர்நிலை .
இலந்தைத்தம்பலம் இலந்தைப்பட்டையில் பூச்சிகளாலான புடைப்பு .
இலபனம் வாய் .
இலபித்தல் சித்தித்தல் , வாய்த்தல் , கைகூடுதல் .
இலபிதம் நேர்வது ; உண்பது ; பேச்சு ; பேசப்பட்டது ; பேறு ; விதி .
இலபிப்பு சித்திப்பு .