சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஈரணி | நீராடும்போது மகளிர் அணியும் ஆடை . |
ஈரணை | இரண்டு அணை ; இரண்டுசோடி மாடு . |
ஈரந்துவட்டுதல் | ஈரமெடுத்தல் ; நீராடியபின் ஈரத்தைத் துடைத்தல் . |
ஈரநா | புறங்கூறும் நாக்கு . |
ஈரப்பசை | ஈரக்கசிவு ; இரக்கம் ; செல்வம் . |
ஈரப்பலா | ஒருவகைப் பலா , ஆசினிப் பலா . |
ஈரப்பற்று | ஈரக்கசிவு ; இரக்கம் . |
ஈரப்பாடு | ஈரமாயிருக்கை ; மனநெகிழ்ச்சி . |
ஈணி | காண்க : அகணி . |
ஈணை | காண்க : அகணி . |
ஈதல் | கொடுத்தல் ; வறியவருக்குத் தருதல் ; சொரிதல் ; படிப்பித்தல் . |
ஈதா | இந்தா . |
ஈதி | மிகுந்த மழை , மழையின்மை , எலி , விட்டில் , கிளி , அரசண்மை என்னும் ஆறினாலும் நாட்டுக்கு வருங் கேடு . |
ஈது | இது ; முகம்மதியர் திருநாள்களுள் ஒன்று , பக்ரீத் திருநாள் . |
ஈதை | துன்பம் , வருத்தம் . |
ஈந்து | ஈச்சமரம் . |
ஈப்பிணி | காண்க : ஈச்சப்பி . |
ஈப்புலி | ஈயைக் கொல்லும் பூச்சி , ஒருவகைச் சிறு சிலந்தி ; பதினைந்தாம் புலி விளையாட்டு . |
ஈம் | காண்க : ஈமம் . |
ஈமக்கடன் | சுடுகாட்டில் செய்யப்படும் பிணச்சடங்கு . |
ஈமத்தாடி | சுடுகாட்டில் ஆடும் சிவன் . |
ஈமத்தாழி | முதுமக்கட்டாழி , இறந்தவரை இட்டுப் புதைக்கும் பெருஞ்சால் . |
ஈமப்பறவை | கழுகு ; காகம் ; பருந்து . |
ஈமம் | சுடுகாடு ; பிணஞ்சுடு விறகடுக்கு ; பாதிரி மரம் . |
ஈமவனம் | சுடுகாடு . |
ஈமவாரி | வசம்பு . |
ஈமான் | கொள்கை . |
ஈயக்கொடி | இண்டங்கொடி ; புலிதொடக்கிக் கொடி . |
ஈயம் | பஞ்சலோகத்துள் ஒன்று , வெள்ளீயம் ; பாதிரி . |
ஈயல் | ஈசல் ; தம்பலப்பூச்சி ; சிறகு முளைத்த கறையான் ; ஈதல் , கொடுத்தல் . |
ஈயவெள்ளை | மரம் முதலியவற்றிற்குப் பூசும் ஒருவகை வெள்ளை மை ; தூள்வகை . |
ஈயன்மூதா | இந்திரகோபம் , தம்பலப்பூச்சி . |
ஈயன்மூதாய் | இந்திரகோபம் , தம்பலப்பூச்சி . |
ஈயை | இஞ்சி ; இண்டு ; புலிதொடக்கி . |
ஈயோட்டி | ஈயை ஓட்டுங் கருவி . |
ஈயோப்பி | ஈயை ஓட்டுங் கருவி . |
ஈர் | பேன் முட்டை ; முன்னிலைப் பன்மை விகுதி ; இரண்டு ; ஈரம் ; நெய்ப்பு ; பசுமை ; இனிமை ; நுண்மை ; ஈர்க்கு ; இறகு ; கரும்பு ; கதுப்பு . |
ஈர்க்கில் | காண்க : ஈர்க்கு . |
ஈர்க்கிறால் | இறால் மீன்வகை . |
ஈர்க்குச்சம்பா | சம்பா நெல்வகை . |
ஈர்க்கு | அம்பின் இறகு ; ஓலையின் நரம்பு . |
ஈர்கொல்லி | ஈரைக் கொல்லும் கருவி , ஈர்வலி ; உப்பிலி . |
ஈர்கோலி | காண்க : ஈர்வலி . |
ஈர்ங்கட்டு | கார்காலத்து உடை , குளிர்கால உடை . |
ஈர்ங்கதிர் | குளிர்ந்த கதிர் ; சந்திரன் . |
ஈர்ங்கை | உண்டு கழுவிய கை . |
ஈர்த்தல் | அறுத்தல் ; இழுத்தல் ; உரித்தல் ; பிளத்தல் ; எழுதுதல் . |
ஈர்தல் | அரிதல் ; அறுத்தல் ; இழுக்கப்படுதல் . |
ஈர்ந்தமிழ் | தண்டமிழ் , கேட்டற்கு இனிய தமிழ் . |
ஈர்ப்பு | இழுப்பு ; இசிவுநோய் . |
ஈர்மை | இனிமை ; பெருமை ; நுண்மை ; குளிர்ச்சி ; வருத்தம் . |
ஈர்வடம் | பனையீர்க்குக் கயிறு . |
ஈர்வலி | ஈருருவுங்கருவி , ஈர் வாங்கும் கருவி . |
ஈர்வாங்கி | ஈருருவுங்கருவி , ஈர் வாங்கும் கருவி . |
ஈர்வாரி | ஈருருவுங்கருவி , ஈர் வாங்கும் கருவி . |
ஈர்வாள் | இரம்பம் , மரம் அறுக்கும் வாள் . |
ஈரங்கொல்லி | வண்ணான் . |
ஈரசைச்சீர் | இரண்டு அசைகொண்ட சீர் ; அது தேமா , புளிமா , கருவிளம் , கூவிளம் என்னும் வாய்பாட்டால் வரும் . |
ஈரடி | இரண்டு அடி , இணையடி ; ஈரப்பதம் ; ஈரொட்டு , ஐயம் ; இரண்டாம் போகம் . |
ஈரடிப்பயன் | கவர்பொருள் ; ஐயம் ; கபடம் ; மாறுபாடு . |
ஈரடிவருக்கம் | ஒவ்வோரடியிலும் முதலாம் எழுத்தும் நடுவெழுத்தும் ஒன்றாயிருக்குமாறு இரண்டடியுடையதாய்ச் செய்யப்படும் செய்யுள் . |
ஈரடிவெண்பா | குறள்வெண்பா . |
ஈரடுக்கொலி | இரட்டையாக அடுக்கிவரும் ஒலிக்குறிப்புச் சொல் . |
ஈரணம் | வெறுநிலம் ; களர்நிலம் ; கள்ளி . |
ஈடுபாடு | தொடர்பு ; மனங்கவிகை ; இலாபநட்டம் ; சங்கடம் . |
ஈடேற்றம் | உய்வு ; பேரின்ப வாழ்வு ; கடைத்தேற்றம் ; மீட்பு . |
ஈடேற்றுதல் | உய்வித்தல் . |
ஈடேறுதல் | உய்யப்பெறுதல் , கடைத்தேறுதல் , வாழ்வடைதல் . |
ஈடை | புகழ்ச்சி ; ஏர்க்கால் . |
ஈண்டல் | நெருங்குதல் , கூடுதல் ; நிறைதல் ; விரைதல் . |
ஈண்டு | இவ்விடம் ; இவ்வண்ணம் ; இம்மை ; விரைவு ; புலிதொடக்கிக் கொடி ; இப்பொழுது . |
ஈண்டுதல் | கூடுதல் , செறிதல் , நெருங்குதல் ; பெருகுதல் ; விரைதல் ; தோண்டுதல் . |
ஈண்டுநீர் | கடல் . |
ஈண்டை | இங்கு , இவ்விடம் . |
ஈண்டையான் | இவ்விடத்தான் |
![]() |
![]() |
![]() |