உசாக்கையர் முதல் - உட்பகை ஆறு வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
உட்சமயம் சைவசமயத்துள்ள உட்பிரிவுகள் ; காண்க : அகச்சமயம் .
உட்சாத்து அரைக்கச்சை .
உட்சூத்திரம் பொறியின் மூலக்கருவி ; உட்குறிப்பு ; கணிதத்தில் குறுக்குவழி ; எளியவழி ; உள்ளுபாயம் .
உட்செல் நெஞ்சொடு கூறல் .
உட்செலுத்துதல் உள்ளே செலுத்துதல் ; தந்திரமாக உள்ளே புகுவித்தல் ; இலஞ்சம் கொடுத்தல் .
உட்சேபணம் எழும்புதல் ; எறிதல் ; விசிறி .
உட்டணம் வெப்பம் ; முதுவேனில் ; மிளகு ; உறைப்பு .
உட்டணித்தல் வெப்பங்கொள்ளுதல் .
உட்டிரம் களர்நில்ம் ; தேட்கொடுக்கிப் பூண்டு , முட்செவ்வந்தி .
உட்டினீடம் தலைப்பாகை .
உட்டீனம் பறவைகளின் கதிச் சிறப்புகளுள் ஒன்று .
உட்டுளை குழல் , புரை .
உட்டுறவு உள்ளத்துறவு .
உட்டெளிவு உள்ளத்தெளிவு ; வடித்த சாறு ; உள்வயிரம் ; உட்பக்க அளவு .
உட்டை விளையாட்டுக்காய் .
உட்பகை நட்புப் பாராட்டிக் கெடுக்கும் பகை ; உள்ளாகி நிற்கும் பகை ; அறுபகை ; குடிகளின் எதிர்ப்பு .
உட்பகை ஆறு காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் என்னும் ஆறு குற்றங்கள் .
உசாக்கையர் ஆராய்வோர் ; ஆலோசனை செய்வோர் .
உசாத்துணை உற்ற துணைவர் .
உசாதல் காண்க : உசாவுதல் .
உசாவுதல் ஆராய்தல் ; விணாவுதல் , கேட்டல் .
உசார் விழிப்பு .
உசி கூர்மை ; விருப்பம் .
உசிதம் தகுதி ; மேன்மை ; உயர்ந்தது ; அழகு ; வளைகை ; கூப்பிடுகை ; நீர் .
உசிதன் பாண்டியன் .
உசிப்பித்தல் சேர்த்தல் .
உசிர் உயிர் .
உசிரம் செவ்வியம் ; இடபம் ; கதிர் ; மிளகு ; இலாமிச்சை வேர் .
உசில் காண்க : உசிலை .
உசிலம் காண்க : உசிலை .
உசிலித்தல் கூட்டுப்பொடி கலந்து தாளித்தல் .
உசிலை சீக்கிரிமரம் .
உசீரம் இலாமிச்சை வேர் ; வெட்டிவேர் .
உசு உளு என்னும் புழு .
உசுப்புதல் எழுப்புதல் ; வெருட்டுதல் .
உசும்புதல் அசைதல் ; அதட்டுதல் .
உசுவாசநிசுவாசம் மூச்சுப் போக்குவரவு .
உசுவாசம் உட்சுவாசம் , மூச்சை உள்ளே இழுத்தல் .
உசூர் அரசியல் நடத்தும் இடம் .
உஞ்சட்டை மெலிவு .
உஞ்சம் காண்க : உஞ்சவிருத்தி .
உஞ்சல் ஊஞ்சல் .
உஞ்சவிருத்தி உதிர்ந்த நெல் முதலானவற்றைப் பொறுக்கிச் சேர்த்து வாழ்தல் ; அரிசிப் பிச்சையெடுத்து நடத்தும் வாழ்க்கை .
உஞ்சு நாயைக் கூப்பிடும் ஒலிக்குறி .
உஞற்று ஊக்கம் ; முயற்சி ; இழுக்கு ; வழக்கு .
உஞற்றுதல் முயலுதல் ; செய்தல் ; தூண்டுதல் .
உட்கட்டு வீட்டின் உட்பகுதி ; அந்தப்புரம் ; சிறுமியர் குழந்தைப் பருவத்தில் அணியும் ஒரு வகைச் சிறுதாலி ; மாதர் கழுத்திற் கட்டும் ஒரு மணிவடம் , உட்கட்டுமணி .
உட்கண் அறிவு , ஞானம் .
உட்கதவு திட்டிக் கதவு .
உட்கந்தாயம் நிலக்கிழாருக்குக் கட்டும் வரி .
உட்கரணம் காண்க : அந்தக்கரணம் .
உட்கரு உள்ளே அடங்கியிருக்கும் பொருள் .
உட்கருத்து உட்பொருள் ; கருந்துரை ; ஆழ்ந்த கருத்து ; மனக்கருத்து .
உட்கருவி அந்தக்கரணம் ; அவை : மனம் , புத்தி , சித்தம் , அகங்காரம் .
உட்கள்ளம் உள் வஞ்சகம் ; புண்ணினுள் நஞ்சு .
உட்காய்ச்சல் உள்ளாக அடிக்கும் சுரம் ; உள்ளெரிச்சல் .
உட்கார் பகைவர் .
உட்கார்தல் அமர்தல் , வீற்றிருத்தல் .
உட்காருதல் அமர்தல் , வீற்றிருத்தல் .
உட்கிடக்கை காண்க : உட்கருத்து .
உட்கிடை உட்கருத்து ; பேரூருள் அடங்கிய சிற்றூர் .
உட்கிராந்துதல் வேரூன்றுதல் ; மெலிதல் .
உட்கு அச்சம் ; நாணம் ; மிடுக்கு ; மதிப்பு .
உட்குத்தகை கீழ்க்குத்தகை .
உட்குற்றம் காண்க : உட்பகை .
உட்குறிப்பு உள்ளக் குறிப்பு , மனக்குறிப்பு .
உட்கூதல் உட்குளிர் , உடம்பினுள்ளாக உண்டாகும் குளிர் .
உட்கை உள் உளவாள் ; உட்பக்கம் ; உள்ளங்கை ; உட்கைச்சுற்று .
உட்கைச்சுற்று நாட்டியத்தில் இடக்கைப் புறமாகச் சுற்றுகை .
உட்கொள்ளல் தன்னகத்துக் கொள்ளுதல் ; உட்கருதுதல் ; உண்ணுதல் ; உள்ளிழுத்தல் .
உட்கொள்ளுதல் தன்னகத்துக் கொள்ளுதல் ; உட்கருதுதல் ; உண்ணுதல் ; உள்ளிழுத்தல் .
உட்கோட்டை உள் அரண் .
உட்கோபம் வெளியிலே தோன்றாமல் உள்ளடங்கிய சினம் .
உட்கோயில் கோயில் கருவறை .
உட்கோள் உட்கருத்து ; கோட்பாடு ; ஓர் அணி .