சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஊடல் | ஊடுதல் , தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு , பொய்ச்சினம் ; பகைத்தல் ; வெறுத்தல் . |
ஊடறுத்தல் | ஊடுருவுதல் , நடுவே புகுந்து செல்லுதல் ; வழக்குத் தீர்த்தல் ; இடையில் அடைத்தல் . |
ஊடாட்டம் | பழகுகை , பலகாற் பயிலுகை . |
ஊகித்தல் | உத்தேசித்தல் ; தருக்கித்து ஆராய்தல் ; ஆலோசித்தல் ; ஆராய்ந்தறிதல் . |
ஊகை | ஊகம் ; யூகை ; கல்வி . |
ஊங்கண் | உவ்விடத்து , முன்பு . |
ஊங்கணோர் | முன்னுள்ளோர் . |
ஊங்கு | சிறந்தது ; மிகுதி ; முன் ; உவ்விடம் ; விசேடம் . |
ஊங்குதல் | ஆடுதல் . |
ஊச்சில் | தசைநோய் . |
ஊச்சு | அச்சம் . |
ஊச்சுதல் | உறிஞ்சுதல் . |
ஊசரம் | உவர்நிலம் ; உவர்மண் . |
ஊசல் | அசைவு ; ஊஞ்சல் ; மனத்தடுமாற்றம் ; பதனழிதல் ; ஒரு சிற்றிலக்கிய வகை ; ஊசற் பருவம் ; கலம்பக உறுப்புகளுள் ஒன்று ; ஊழல் ; கடும்பற்றுள்ளம் , இவறல் . |
ஊசல்வரி | ஊஞ்சற் பாட்டு . |
ஊசலாடுதல் | ஊஞ்சலாடுதல் ; அசைதல் ; ஊசல் போல முன்பின் அசைந்து இருதலைப்பட்டு நிற்றல் ; அடிக்கடி போக்குவரத்தாயிருத்தல் . |
ஊசா | மூக்குத்திக் கொடி . |
ஊசாட்டம் | உலாவித் திரிகை ; ஊசலாட்டம் ; களவு . |
ஊசாடுதல் | ஊசலாடுதல் ; உலாவித் திரிதல் . |
ஊசாலி | மீன்பிடி கூடை . |
ஊசி | இழைவாங்கி ; துணி தைக்கும் ஊசி ; எழுத்தாணி ; குண்டூசி ; நிறைகோலின் நடுமுள் ; கடிகாரத்தின் முள் ; கூர்மை ; சிறுமை ; ஊசிப்பொறி ; குயவர் மட்கலத்தை அறுக்கும் கருவி ; வடதிசை . |
ஊசிக்கண் | சிறு கண் . |
ஊசிக்கப்பல் | புகையிலைவகை . |
ஊசிக்களா | முள்ளுக் களாச்செடி . |
ஊசிக்காது | ஊசித்துளை ; நுனித்தறியும் செவிப்பயன் . |
ஊசிக்காந்தம் | இரும்பிழுக்குங் காந்தக்கல் . |
ஊசிக்காய் | ஒருவகைத் தேங்காய் . |
ஊசிக்கால் | மச்சுக்கால் ; நடுக் குத்துக்கால் . |
ஊசித்தூற்றல் | சிறு மழை . |
ஊசித்தொண்டை | ஊசிபோல ஒடுங்கிய தொண்டை , சிறு தொண்டை . |
ஊசிப்புழு | ஒருவகைப் புழு . |
ஊசிமல்லிகை | ஒரு மல்லிகைவகை ; முல்லை . |
ஊசிமிளகாய் | கொச்சி மிளகாய் , காந்தாரி மிளகாய் . |
ஊசிமுல்லை | காண்க : ஊசிமல்லிகை . |
ஊசியோடுதல் | ஊசித் தையல் செல்லுதல் . |
ஊசிவெடி | பட்டாசு வெடிவகை . |
ஊசிவேர் | சிறுவேர் , சல்லிவேர் . |
ஊசுதல் | சீவுதல் ; தைத்தல் ; அழுகுதல் ; சுவை கெடுதல் ; நாறுதல் . |
ஊஞ்சல் | ஊசல் ; ஊஞ்சற்பாட்டு . |
ஊஞ்சற்பாட்டு | ஊஞ்சலாடும்போது மகளிர் பாடும் பாட்டு . |
ஊட்டம் | உண்டி , உணவு ; செழிப்பு . |
ஊட்டல் | உண்பிக்கை ; ஊட்டுதல் ; அடைவிக்கை , கன்று முதலியன பால் குடித்தல் . |
ஊட்டி | உணவு ; மழை ; குரல்வளை ; பறவை விலங்குகளின் தீனி . |
ஊட்டித்தல் | தாளியடித்தல் ; வயலை மட்டஞ் செய்தல் . |
ஊட்டிமரம் | தேட்கொடுக்கிப் பூண்டு . |
ஊட்டு | உண்பிக்கை ; உணவு ; ஊட்டுங் கவளம் ; காளி முதலிய தெய்வங்களுக்கு இடும் படையல் . |
ஊட்டுணை | தலையாட்டம் . |
ஊட்டுதல் | உண்ணல் ; உண்பித்தல் ; வாயிலிடுதல் ; புகட்டுதல் ; கன்று பால் குடித்தல் ; சாய மேற்றுதல் ; அகிற்புகை , செம்பஞ்சு , மை முதலியன ஊட்டுதல் ; நினைப்பூட்டுதல் ; நுகரச் செய்தல் . |
ஊட்டுந்தாய் | ஐவகைத் தாயருள் ஒருத்தி , சோறூட்டுபவள் . |
ஊட்டுப்புரை | உணவளிக்கும் சாலை . |
ஊட்டுவான் | சமையற்காரன் . |
ஊடகம் | ஊடே , இடையில் ; விடியற்காலம் ; ஒரு கடல்மீன்வகை . |
ஊடடித்தல் | களை போக்கவும் கிளைத்தற்காகப் பயிரைக் கலப்பிக்கவும் கலப்பையை மேலே கட்டி உழுதல் . |
ஊடணம் | கருமிளகுகொடி ; சுக்கு . |
ஊடணை | திப்பிலி . |
ஊடரம் | பூவழலை , உவர்நிலம் . |
ஊ | ஆறாம் உயிரெழுத்து ; நெட்டுயிரெழுத்துள் ஒன்று ; வினையெச்ச விகுதியுள் ஒன்று ; ஓரொலிக்குறிப்பு ; 'கைக்கிளை' என்னும் இசையின் எழுத்து ; ஊன் , இறைச்சி ; உணவு . |
ஊக்கப்பாடு | ஊக்கங்கொள்கை . |
ஊக்கம் | உள்ளக் கிளர்ச்சி , மனவெழுச்சி ; உள்ளத்தின் மிகுதி ; முயற்சி ; வலிமை ; உயர்ச்சி ; மேற்கொண்ட எண்ணம் ; உண்மை . |
ஊக்கல் | முயலுகை ; மிகுதி . |
ஊக்கலர் | முயற்சியுடையவர் . |
ஊக்கு | ஊக்கம் , முயற்சி ; கொக்கி . |
ஊக்கு | (வி) முயல் ; எழுப்பு ; ஏறு . |
ஊக்குணா | நிலப்பனை . |
ஊக்குதல் | ஆட்டுதல் ; நெகிழ்த்துதல் ; தப்புதல் ; ஆர்வமூட்டுதல் ; முயலுதல் ; கற்பித்தல் ; நினைத்தல் ; ஏறுதல் ; நோக்குதல் . |
ஊகடன் | முருங்கைமரம் ; முருங்கை ; காட்டு முருங்கை . |
ஊகத்தாதனம் | யோகாசனவகை . |
ஊகம் | எண்ணி அறிதல் ; ஆராய்ச்சி ; நினைவு ; தியானம் ; படைவகுப்பு ; குரங்கு ; கருங்குரங்கு ; புலி ; ஒரு புல்வகை ; ஊமத்தை ; நீதி . |
ஊகனம் | நியாயஞ் சொல்லுகை ; காரணங் காட்டுகை ; ஊகம் ; துணிபு . |
ஊகனி | துடைப்பம் . |
ஊகாஞ்சிதம் | தற்குறிப்பேற்றவணி , ஒரு பொருளிடத்து இயல்பாக நிகழும் தன்மையை ஒழித்துக் கவிஞன் அதற்கு வேறோர் ஏதுவைக் கற்பித்து உரைத்தல் . |
ஊகாமுள் | ஊகம் புல்லின் முள் . |
ஊகாரம் | 'ஊ' என்னும் எழுத்து . |
ஊகி | ஊகிப்பவன் (ள்) ; நுண்ணறிவுடையவன்(ள்) . |
ஊகி | (வி) நினை , எண்ணு , உத்தேசி . |
![]() |
![]() |