சொல்
|
அருஞ்சொற்பொருள் |
ஒட்டுக்குடி | ஒதுக்குக் குடி , பிறரை அண்டியிருக்குங் குடி . |
ஒட்டுக்குடுமி | உச்சிக் சிறுகுடுமி . |
ஒசியல் | கிளை முறிக்கப்பட்ட மரம் . |
ஒஞ்சட்டை | ஒல்லி . |
ஒஞ்சரித்தல் | ஒரு பக்கமாய்ச் சாய்தல் ; கதவை ஒருபக்கம் சாத்துதல் ; ஒரு பக்கமாய்ப் போதல் . |
ஒஞ்சி | முலை . |
ஒஞ்சித்தல் | நாணுதல் ; மனத்தையடக்கல் . |
ஒஞ்சுதல் | நாணுதல் ; மனத்தையடக்கல் . |
ஒட்ட | அடியோடு ; கிட்ட ; இறுக ; அணுக ; போல . |
ஒட்டகப்பாரை | ஒட்டாம்பாரை , கடல்மீன்வகை . |
ஒட்டகம் | ஒட்டை , அசைபோடும் இனத்தைச் சார்ந்த விலங்குவகை . |
ஒட்டகை | ஒட்டை , அசைபோடும் இனத்தைச் சார்ந்த விலங்குவகை . |
ஒட்டங்காய்ப்புல் | ஆடையில் ஒட்டும் ஒருவகைப் புல் . |
ஒட்டங்கி | உலையாணிக் கோல் ; கன்னார் கருவியுள் ஒன்று . |
ஒட்டச்சி | பூவழலை , உவர்மண் ; ஒட்டச்சாதிப் பெண் . |
ஒட்டடை | ஒட்டறை , நூலாம்படை ; புகையுறை ; சிலந்திக்கூடு ; சிலந்தி வலையும் தூசும் ; நெல்வகை . |
ஒட்டணி | உவமையால் உவமேயத்தைப் பெற வைக்கும் அணி . |
ஒட்டத்தி | ஒட்டுத்துத்திப் பூண்டு . |
ஒட்டப்போடுதல் | தன்னைத் தானே பட்டினி போடுதல் ; பட்டினி கிடக்கச் செய்தல் . |
ஒட்டம் | பந்தயம் ; இகலாட்டம் ; பந்தயப் பொருள் ; உடன்படிக்கை ; சூள்மொழி ; ஒரு நாடு ; வெட்டளவு காட்ட வைக்குந் திடர் , தோண்டலளவைத் திடர் . |
ஒட்டர் | ஒட்ட நாட்டார் ; மண்வேலை செய்வோர் . |
ஒட்டரம் | ஒரு நாடு , ஒரிசா நாட்டின் பழைய பெயர் . |
ஒட்டல் | ஒட்டுதல் ; ஒன்றுசேர்த்தல் ; உடன்பாடு ; தாக்குதல் ; கிடைத்தல் ; வைத்தல் ; குறுகல் ; வற்றல் ; பந்தயம் ; உள்ளொடுங்குகை . |
ஒட்டலன் | உடன்பாடில்லாதவன் ; பகைவன் ; மெலிந்தவன் . |
ஒட்டற்காது | சுருங்கிய செவி ; ஒட்டவைத்த காது . |
ஒட்டன் | மண்வேலை முதலியன செய்யும் ஒருவகைச் சாதியான் ; ஒருவகை நெல் . |
ஒட்டாக்கொற்றி | கன்றை அணுகவிடாத பசு ; அன்பில்லாதவள் . |
ஒட்டம்பாரை | காண்க : ஒட்டகப்பாரை . |
ஒட்டார் | பகைவர் . |
ஒட்டாரங்காட்டுதல் | பிடிவாதம் பண்ணுதல் . |
ஒட்டாரம் | பிடிவாதம் , முரட்டுத்தனம் . |
ஒட்டி | ஒட்டி நிற்கும் பொருள் ; ஒட்டொட்டிப் பூண்டு ; ஒரு கடல்மீன்வகை . |
ஒட்டிக்கிரட்டி | ஒன்றுக்கு இரண்டு பங்கு . |
ஒட்டிக்கொடுத்தல் | உறுதிபண்ணித் தருதல் . |
ஒட்டிடுதல் | பந்தயம் போடுதல் ; சத்தியஞ் செய்தல் ; ஆணையிடுதல் . |
ஒட்டியக்கரு | சூனிய வித்தை . |
ஒட்டியத்தோட்டி | குப்பை வாருவோன் . |
ஒட்டியம் | ஒரு மந்திர வித்தை ; ஒரு நாடு ; ஒட்டர மொழி ; ஒரு மாந்திரிக நூல் . |
ஒட்டியமேளம் | ஒட்டார் இசைக்கும் ஒருவகை வாத்தியம் . |
ஒட்டியன் | ஒட்டிய நாட்டான் ; ஒட்டரநாட்டு அரசன் . |
ஒட்டியாணம் | யோகப்பட்டை ; மாதர் இடையணிகளுள் ஒன்று . |
ஒட்டியாதேவி | ஒட்டியக் காளி ; சூனியக்காரர் வழிபடும் தேவதை . |
ஒட்டிரட்டி | காண்க : ஒட்டிக்கிரட்டி . |
ஒட்டினர் | நண்பர் . |
ஒட்டு | இணைக்கப்பட்டது ; இணைப்பு ; சார்பு ; நட்பு ; மரப்பட்டை ; மரவொட்டு ; ஓரம் ; பறவை பிடிக்கும் கண்ணி ; ஒட்டுக்கடுக்கன் ; ஒட்டுத்திண்ணை ; படை வகுப்பு ; அற்பம் ; நற்சமயம் ; சூள் ; துணை ; இகலாட்டம் ; ஓரணி . |
ஒட்டுக்கடுக்கன் | சிறுகடுக்கன் . |
ஒட்டுக்கண் | இமை ஒட்டும் நோயுள்ள கண் . |
ஒட்டுக்கணவாய் | ஒரு மீன்வகை . |
ஒட்டுக்காய்ச்சல் | தொற்றுசுரம் ; உடம்போடு ஒட்டிய காய்ச்சல் . |
ஒட்டுக்குஞ்சு | சிறுகுஞ்சு ; பேன்குஞ்சு . |
ஒ | பத்தாம் உயிரெழுத்து ; ஒவ்வு என்பதன் பகுதி ; ஐம்பறவைகளுள் மயிலைக் குறிக்கும் எழுத்து . |
ஒஃகுதல் | பின்வாங்குதல் , ஒதுங்குதல் . |
ஒக்க | ஒருமிக்க , கூட , ஒருசேர , சமமாயிருக்க , நிகர்க்க , பொருந்த , மிகுதியாக ; தகுதியாயிருக்க . |
ஒக்கடித்தல் | தாளங்கொட்டுதல் ; செப்பனிடுதல் . |
ஒக்கநோக்குதல் | ஒருநிகராகப் பார்த்தல் , சரிசமமாகப் பார்த்தல் . |
ஒக்கப்பண்ணுதல் | செப்பனிடுதல் . |
ஒக்கப்பாடுதல் | பிறன் கூற்றுக்கு ஒத்துக்கூறுதல் . |
ஒக்கம் | ஊர் ; பட்டினம் ; ஓமம் ; எழுச்சி ; அகலம் , பொலிவு ; கரை ; அற்பம் . |
ஒக்கல் | உறவினர் , சுற்றத்தார் ; குடி , குடும்பம் ; மூட்டுகை ; இடைப்பக்கம் ; ஒக்கலை . |
ஒக்கலிடுதல் | ஒக்கலித்தல் , இனத்தாரைத் தழுவுதல் . |
ஒக்கலித்தல் | ஆவலங்கொட்டுதல் ; ஆரவாரித்தல் ; உறவினரோடு கலந்து பேசுதல் ; உறவினரைப் பாதுகாத்தல் ; சமாதானமாதல் . |
ஒக்கலை | இடுப்பு ; இடுப்பின் பக்கம் , மருங்கின் பக்கம் ; சுற்றத்தான்(ள்) ; ஒவ்வாய் . |
ஒக்காதிக்கொடி | புலிநகக்கொன்றை . |
ஒக்கிடுதல் | பழுதுபார்த்தல் , செப்பனிடுதல் . |
ஒக்குதல் | ஒத்திருக்கை ; கொப்புளித்தல் ; பிற்படவிடல் . |
ஒக்கோலை | அம்பர் , கடல்படு பொருள்களுள் ஒன்று , ஒரு மணப்பண்டம் . |
ஒகரம் | 'ஒ' என்னும் எழுத்து ; மயில் . |
ஒச்சம் | கூச்சம் , நாணம் ; கவனிப்பு ; பழுது , குறைவு . |
ஒச்சித்தல் | வெட்கப்படுதல் ; குறைதல் . |
ஒச்சியம் | கூச்சம் ; பரிகாசம் ; சரசமொழி , காதல் பேச்சு ; உச்சம் ; நிந்தை . |
ஒச்சை | உற்றுக்கேட்கை ; காந்தற் சோறு . |
ஒசித்தல் | அசைத்தல் ; முறித்தல் , ஒடித்தல் ; கொடுத்தல் . |
ஒசிதம் | கற்றாழை . |
ஒசிதல் | முறிதல் , ஒடிதல் ; துவளல் , நுடங்குதல் ; சாய்தல் ; நாணுதல் ; வருந்துதல் ; ஓய்தல் ; தளர்தல் . |
ஒசிந்த நோக்கு | ஒதுங்கிப் பார்க்கும் பார்வை . |
![]() |
![]() |