சொல்
|
அருஞ்சொற்பொருள் |
கக்குவான் | ஒருவகை இருமல் நோய் . |
ககணி | வானநூலறிந்தோன் . |
ககபதி | பறவைகளின் தலைவனான கருடன் . |
ககம் | அம்பு ; பறவை ; வளி ; தெய்வம் ; பாணம் ; வெட்டுக்கிளி ; மணித்தக்காளி ; சரகாண்ட நஞ்சு . |
ககமாரம் | மணித்தக்காளி . |
ககரம் | க' என்னும் எழுத்து . |
ககராசன் | காண்க : ககபதி . |
ககவசுகம் | ஆலமரம் . |
ககனசாரி | விண்ணில் இயங்குவோர் . |
ககனசாரிகை | விண்ணில் இயங்குகை ; பரத நாட்டிய உறுப்புள் ஒன்று . |
ககனம் | வானம் ; வளிமண்டலம் ; துறக்கம் ; காடு ; படை ; பறவை . |
ககனாக்கிரகம் | அண்டமுகடு . |
ககனாரவிந்தம் | வான்தாமரை ; கொட்டைப் பாசி . |
ககு | தீச்செய்கை உள்ளவன் , கொடியவன் . |
ககுஞ்சலம் | காண்க : சாதகப்புள் . |
ககுத்து | திமில் ; எருத்துத் திமில் ; எருத்தின் பிடர் . |
ககுதி | முத்திரை குத்தின எருது . |
ககுபம் | திசை ; மருதமரம் ; கருமருது . |
ககுளம் | ஒருவகை இசையளவை . |
ககேசன் | கருடன் ; சூரியன் . |
ககேசுரன் | கருடன் ; சூரியன் . |
ககேந்திரன் | கருடன் ; சூரியன் . |
ககோதரம் | பாம்பு . |
ககோளசாத்திரம் | வானநூல் . |
ககோளம் | வானவட்டம் , வானமண்டலம் . |
கங்கடகம் | கவசம் , சட்டை . |
கங்கடம் | கவசம் , சட்டை . |
கங்கணங்கட்டுதல் | ஒருசெயலை முடித்தற்கு முனைந்து நிற்றல் ; விருது கட்டுதல் ; காப்புக் கட்டுதல் . |
கங்கணம் | காப்புநாண் ; கடகம் ; கைவளை ; நீர்வாழும் பறவைவகை . |
கங்கதம் | சீப்பு . |
கங்கபத்திரம் | அம்பு ; பருந்தின் இறகு . |
கங்கம் | சீப்பு , தீப்பொறி ; பருந்து ; கழுகு ; பெருமரம் ; வேள்வித்தூண் ; வரம்பு ; கோளகபாடாணம் ; தமிழ்நாட்டை அடுத்துள்ள ஒரு நாடு . |
கங்கர் | பருக்கைக் கல் ; சுக்கான் கல் ; ஓர் அரச குலத்தார் . |
கங்கரம் | மோர் . |
கங்கவி | பருந்து . |
கங்கன் | சீயகங்கன் என்னும் அரசன் ; பிறவிச் சீர்பந்த பாடாணம் . |
கங்காசுதன் | கங்கையின் புதல்வன் ; முருகன் ; வீடுமன் . |
கங்காணம் | காண்க : கண்காணம் . |
கங்காணி | காண்க : கண்காணி . |
கங்காதரன் | கங்கையைத் தலையிலே தாங்கியிருக்கும் சிவன் . |
கங்காதேவி | கங்கையாற்றுக்குரிய தெய்வம் . |
கங்காநீலன் | நீலநிறமுள்ள குதிரைவகை . |
கங்காபட்டாரகி | கோயில்களில் சிவனுக்கணியும் கங்கை வடிவமான தலையணி . |
கங்காளம் | எலும்பு ; முழுவெலும்பு ; தசை கழிந்த எலும்புக்கூடு ; பெருங்கலம் ; பிணம் . |
கங்காளமாலி | எலும்புகளை மாலையாக அணிந்த சிவன் . |
கக்குரீதி | காண்க : கக்கசம் . |
க | முதலாம் உயிர்மெய்யெழுத்து (க்+அ) ; ஒன்று என்னும் எண்ணின் குறி ; காந்தாரம் ஆகிய கைக்கிளை இசையின் எழுத்து ; வியங்கோள் விகுதியுள் ஒன்று ; ஆன்மா ; உடல் ; காற்று ; அக்கினி ; பிரமன் . |
கஃகான் | 'க' என்னும் எழுத்து . |
கஃசு | காற்பலம் கொண்ட நிறுத்தல் அளவு . |
கஃறெனல் | கறுப்பாதல் ; கறுத்துள்ளமை காட்டும் குறிப்பு . |
கக்கக்கெனல் | ஒலிக்குறிப்பு ; சிரித்தற் குறிப்பு . |
கக்கக்கொடுத்தல் | உணவை மிதமிஞ்சி ஊட்டுதல் . |
கக்கசம் | கடினம் ; முயற்சி . |
கக்கட்டமிடுதல் | உரத்த சத்தமாய்ச் சிரித்தல் . |
கக்கடி | துத்திச்செடி . |
கக்கதண்டம் | அக்குளில் இடுக்கி நடக்கும் கழி . |
கக்கப்பாளம் | துறவிகள் கக்கத்தில் இடுக்கும் கலம் அல்லது மூட்டை . |
கக்கப்பிக்கவெனல் | மனக்குழப்பத்தால் உளறுதற் குறிப்பு . |
கக்கப்பை | காண்க : கக்கப்பாளம் . |
கக்கப்பொட்டணம் | கக்கத்தில் இடுக்கிய துணி மூட்டை . |
கக்கம் | அக்குள் ; கைக்குழியின் கீழிடம் ; எண்ணெய்க் கடுகு ; அயனக் கணக்குவகை . |
கக்கரி | ஒரு கொடி ; முள்வெள்ளரி , வரிகளோடுகூடிய வளைந்த காய் . |
கக்கரிகம் | ஒரு கொடி ; முள்வெள்ளரி , வரிகளோடுகூடிய வளைந்த காய் . |
கக்கல் | கக்குதல் ; வெளிப்படுத்துதல் ; கக்கப்பட்டது ; கதிரீனுதல் . |
கக்கல்கரைசல் | கலங்கல் நீர் ; கரைந்த மலம் . |
கக்கலாத்து | கரப்பான் பூச்சி . |
கக்கலும்விக்கலுமாய் | கதிர் ஈன்றதும் ஈனாததுமாய் . |
கக்கவைத்தல் | நெருக்கி வாங்குதல் . |
கக்கார் | தேமா , இனிப்பு மாங்காய் . |
கக்கிக்கொடுத்தல் | தன் வாயிற் கொண்டதை மற்றொன்றற்கு ஊட்டி வளர்த்தல் . |
கக்கிருமல் | காண்க : கக்குவான் . |
கக்கு | காண்க : கக்குவான் . |
கக்கு | (வி) நஞ்சு கால் ; ஆணி முதலியன எதிரெழு ; நீர் கக்கு ; கதிர் ஈனு ; மிக இருமு . |
கக்குசு | மலசலம் கழிக்கும் இடம் . |
கக்குதல் | வாயாலெடுத்தல் ; வெளிப்படுத்தல் ; ஆணி முதலியன பதியாமல் எதிரெழல் ; கதிர் ஈனுதல் ; சாரம் இறங்குதல் ; கசிதல் ; பெருக்கெடுத்தல் . |
![]() |
![]() |