கி முதல் - கிட்டுமானம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கிட்டார் பகைவர் .
கிட்டாலம் செப்புப்பாத்திரவகை .
கிட்டி இறுக்குங்கோல் ; கவரிறுக்கி ; கொல்லர் கருவி ; நுகமுளை ; சிறுவர் விளையாட்டுக் கருவியுள் ஒன்று ; கைத்தாளம் ; நாழிகை வட்டில் ; சின்னிச்செடி ; பன்றி ; தலையீற்றுப் பசு .
கிட்டிக்கயிறு பூட்டுக்கயிறு .
கிட்டிக்கலப்பை தேய்ந்த கலப்பை .
கிட்டிக்கிழங்கு சின்னிக்கிழங்கு .
கிட்டிக்கொள்ளுதல் நெருங்கிவிடுதல் ; நெருங்கி எதிர்த்தல் .
கிட்டிக்கோல் கிட்டி , கைக்கிட்டி , இறுக்குங்கோல் .
கிட்டிகட்டுதல் இறுக்குங்கோலிட்டு வருத்துதல் ; நெருக்கி வருத்துதல் .
கிட்டிணம் கறுப்பு ; மான்தோல் .
கிட்டிபூட்டுதல் கிட்டிக்கோல் பூட்டி வருத்துதல் ; எருதைப் பூட்ட நுகமுளை போடுதல் .
கிட்டிமுட்டி மிக நெருக்கமாக .
கிட்டியடித்தல் ஒருவகை விளையாட்டு ; வீணாய்ப் பொழுதுபோக்குதல் ; கிட்டிபூட்டுதல் .
கிட்டிரம் நெருஞ்சிப் பூண்டு .
கிட்டினர் சுற்றத்தார் , உறவினர் .
கிட்டினவுறவு நெருங்கின சுற்றம் .
கிட்டினன் திப்பிலி .
கிட்டுதல் சமீபமாதல் ; உறவு நெருங்குதல் ; கிடைத்தல் ; பல் முதலியன ஒன்றோடொன்று இறுகுதல் ; அணுகுதல் ; எதிர்த்தல் ; கட்டுதல் .
கிட்டுமானம் அண்மை .
கி ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+இ) .
கிக்கிரி மீன்கொத்திப்பறவை .
கிகிணி காக்கணங்கொடி ; வலியான்குருவி .
கிங்கரன் ஏவலாளன் ; தூதன் .
கிங்கரி விலைமகள் ; வேலைக்காரி .
கிங்கரை விலைமகள் ; வேலைக்காரி .
கிங்கிணி பாதசதங்கை ; அரைச்சதங்கை ; கிலுகிலுப்பை .
கிங்கிரம் குதிரை ; குயில் ; வண்டு .
கிங்கிலியன் காண்க : கங்கிரன் .
கிச்சடி ஒருவகை உண்டி ; கறிவகை ; கூழ்வகை .
சிச்சலாட்டம் தொல்லை .
கிச்சாட்டம் தொல்லை .
கிச்சிலாட்டம் தொல்லை .
கிச்சிலி கொழிஞ்சி ; நாரத்தை ; கிச்சிலிக்கிழங்கு ; பூலாங்கிழங்கு .
கிச்சிலிக்கரணை காட்டுமிளகு .
கிச்சிலிக்கிழங்கு ஒரு மணந்தரும் கிழங்கு .
கிச்சு நெருப்பு .
கிச்சுக்கிச்சுமூட்டுதல் கூச்சமுண்டாகும்படி பிறர் உறுப்புகளைத் தொடுதல் .
கிச்சுக்கிச்செனல் ஒர் ஒலிக்குறிப்பு .
கிசம் தளிர் .
கிசலம் தளிர் .
கிசலயம் தளிர் .
கிசலை தளிர் .
கிசில் ஒருவகைப் பிசின் ; கீல் .
கிசுகிசெனல் ஓர் ஒலிக்குறிப்பு .
கிஞ்சப்பண்ணி நாயுருவிச்செடி .
கிஞ்சம் சிறிது ; சிறுமை ; புளிமாமரம் ; புளி .
கிஞ்சல் சுருக்கம் .
கிஞ்சன் ஏழை , வறிஞன் .
கிஞ்சனன் ஏழை , வறிஞன் .
கிஞ்சி வேப்பமரம் .
கிஞ்சிக்கினம் காண்க : கிஞ்சிஞ்ஞம் .
கிஞ்சிக்கினன் காண்க : கிஞ்சிஞ்ஞன் .
கிஞ்சிஞ்ஞத்துவம் சிற்றறிவுடைமை .
கிஞ்சிஞ்ஞதை சிற்றறிவுடையவன் தன்மை .
கிஞ்சிஞ்ஞம் சிற்றுணர்வு .
கிஞ்சிஞ்ஞன் சிற்றறிவினன் ; சீவான்மா .
கிஞ்சித்தாகப் பேசுதல் இழித்துக் கூறுதல் .
கிஞ்சித்து கொஞ்சம் ; சிறுமை ; புளிமாமரம் .
கிஞ்சித்தேனும் சிறிதாயினும் .
கிஞ்சிதம் சிறுமை ; கொஞ்சம் .
கிஞ்சில் கொஞ்சம் ; சிறிது .
கிஞ்சு சிறிதான ; முதலை .
கிஞ்சுகம் முண்முருக்கமரம் , கலியாணமுருக்கு வகை ; பலாசுமரம் ; சிவப்பு ; கிளி ; அசுணம் .
கிஞ்சுகி பலாசமரம் ; முண்முருக்கமரம் .
கிஞ்சுமாரம் முதலை .
கிட்ட அருகே ; ஐந்தாம் வேற்றுமைக்கும் ஏழாம் வேற்றுமைக்கும் உரிய உருபு .
கிட்டக்கல் இரும்புத்துரிசு ; முருக வெந்துள்ள செங்கல் .
கிட்டங்கி பண்டசாலை , கிடங்கு .
கிட்டடி பக்கம் , அண்மை .
கிட்டத்தட்ட ஏறக்குறைய .
கிட்டப்பார்வை அண்மையிலுள்ளது மட்டும் தெரியும் பார்வைக்குற்றம் .
கிட்டம் அண்மை ; உலோகக்கட்டி ; இரும்பு முதலியவற்றின் துரு ; வண்டல் ; இறுக்கம் ; சேறு முதலியவற்றின் ஏடு ; கடையப்படாத மணியிலுள்ள கரடு .
கிட்டம்பிடித்தல் உலர்தல் .
கிட்டமுட்ட ஏறக்குறைய ; அருகில் .
கிட்டலர் பகைவர் .