சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கீணர் | கீழோர் , அற்பர் . |
| கீதசாலை | இன்னிசை பயிலும் இடம் . |
| கீதநடை | காண்க : கீதவேதம் . |
| கீதம் | இசைப்பாட்டு ; இன்னிசை ; வண்டு ; மூங்கில் . |
| கீதவம் | ஊமத்தை . |
| கீதவாத்தியம் | இசைக்கருவி . |
| கீதவீதி | கீதநாதம் வருகின்ற வழி . |
| கீதவுறுப்பு | இசைப்பாட்டின் கூறு . |
| கீதவேதம் | சாமவேதம் . |
| கீதாங்கம் | இசைக்கு வாசிக்கும் வாச்சியக் கூறு . |
| கீதாரி | இடையர் . |
| கீதானுகம் | கீதாங்கம் . |
| கீதி | பாடுகை ; கருங்காலி ; பாட்டு . |
| கீதை | நீதிகளைக் கூறும் அருட்பாடல் ; பகவத்கீதை . |
| கீர் | சொல் ; பாட்டு ; பாயசவகை . |
| கீர்கீரெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கீர்த்தனம் | ஓர் இசைப்பாட்டு ; புகழ்ச்சி . |
| கீர்த்தனை | ஓர் இசைப்பாட்டு ; புகழ்ச்சி . |
| கீர்த்தி | புகழ் . |
| கீர்த்தித்தல் | புகழ்தல் . |
| கீர்த்தித்தானம் | சென்மலக்கினம் . |
| கீர்த்திமான் | புகழ்பெற்றவன் . |
| கீர்த்திமை | காண்க : கீர்த்தி . |
| கீர்த்திலட்சுமி | புகழாகிய திரு . |
| கீர்வாணி | ஒரு பண்வகை . |
| கீரணம் | விழுங்கல் . |
| கீரம் | கிளி ; கருங்கிளி ; பால் ; நீர் . |
| கீரவாணி | ஒரு பண்வகை ; இருபத்தேழாம் மேளகர்த்தா . |
| கீரி | கீரிப்பிள்ளை ; கருவாலி ; மரவகை ; கள்ளி . |
| கீரிநோய் | வயிற்றுப் பூச்சியால் வருங் குழந்தை நோய் . |
| கீரிப்பல் | சிறு பல் . |
| கீரிப்பாம்பு | வயிற்றிலுள்ள ஒருவகைப் புழு . |
| கீரிப்பிள்ளை | நகுலம் . |
| கீரிப்பூச்சி | கீரைப்பூச்சி . |
| கீரிப்பூண்டு | பாம்பைக் கடித்த கீரி அதன் நஞ்சு தன்னை வருத்தாதிருக்கச் சார்ந்து புரளும் ஒரு பூடு . |
| கீரிராசி | சுறுசுறுப்பில்லாது மிகப் பருத்துள்ள குதிரைச் சாதி . |
| கீரை | உணவுக்குப் பயன்படும் இலைவகை . |
| கீரைக்காரன் | கீரையைப் பயிரிட்டு விற்போன் . |
| கீரைமசித்தல் | சமைக்கும்போது கீரைக்கறியை மத்தாற் கடைந்து பதப்படுத்துதல் . |
| கீரைநார்ப்பட்டு | பட்டுச்சீலைவகை . |
| கீரைப்பாம்பு | வயிற்றிலுண்டாகும் நாகப்பூச்சி . |
| கீரைப்பூச்சி | வயிற்றிலுண்டாகும் நாகப்பூச்சி . |
| கீரைமணி | கழுத்தில் அணியும் ஒருவகைச் சிறு பாசிமணி . |
| கீரைமீன் | ஒருவகைச் சிறிய மீன் . |
| கீல் | உடற்பொருத்து ; கதவின் கீல் ; பூசுந்தார் . |
| கீணம் | சிதைவு ; கேடு . |
| கீ | ஓர் உயிர்மெய் எழுத்து (க்+ஈ) , கவ்வருக்கத்தில் நான்காம் எழுத்து . |
| கீக்கீயெனல் | பறவையொலிக் குறிப்பு . |
| கீகசம் | எலும்பை யொட்டிய தசை ; மிகச்சிறிய புழுச்சாதி . |
| கீகடம் | நெருக்கம் . |
| கீச்சாங்குருவி | ஒருவகைப் பறவை . |
| கீச்சான் | குழந்தை ; கீச்சாங்குருவி ; கடல்மீன் வகை . |
| கீச்சி | பாசிமணியாலான கழுத்தணி . |
| கீச்சிடுதல் | கீச்சென்று சத்தமிடுதல் . |
| கீச்சு | அழுகையொலி ; ஒருசார் புள்ளொலி ; உருகியிறுகிய இரும்பு . |
| கீச்சுக் கிட்டம் | காண்க : இரும்புக் கிட்டம் . |
| கீச்சுக்கீச்சுத் தம்பலம் | குழந்தைகளாடும் ஒருவகை விளையாட்டு . |
| கீச்சுக்கீச்சுத் தாம்பளம் | குழந்தைகளாடும் ஒருவகை விளையாட்டு . |
| கீச்சுக்கீச்செனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கீச்சுக்குரல் | ஒருவகை மென்குரல் . |
| கீச்சுப்புட்டை | அண்டவாதம் , வாதநோய் . |
| கீச்சுமூச்செனல் | கூக்குரலிடுங் குறிப்பு . |
| கீசகம் | மூங்கில் ; குரங்கு ; தலைக்கிடு காப்புறை . |
| கீசம்பறை | முறைகேடு , ஒழுங்கீனம் . |
| கீசரன் | சரக்கொன்றைமரம் . |
| கீசரி | சரக்கொன்றைமரம் . |
| கீசறை | காண்க : கீசம்பறை . |
| கீசன் | சூரியன் ; போர்வல்லோன் . |
| கீசா | பொய் . |
| கீசுகீசெனல் | காண்க : கீச்சுக்கீச்செனல் . |
| கீடப்பகை | வாய்விளங்கம் . |
| கீடம் | புழு ; கோற்புழு ; வண்டு . |
| கீடமணி | மின்மினி . |
| கீடமாரி | சிறுபுள்ளடிப் பூண்டு . |
| கீண்டல் | கிழித்தல் ; கிண்டுதல் ; கிளைத்தல் ; பிளத்தல் . |
|
|