கூ முதல் - கூட்டெழுத்து வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
கூட்டியுரைத்தல் ஒரு சொல்லை மற்றோரிடத்தும் சேர்த்துப் பொருள் கூறுதல் .
கூட்டிவிடுதல் கூட்டியனுப்புதல் ; கூட்டிக்கொடுத்தல் ; சேர்த்துவைத்தல்:
கூட்டிவைத்தல் வேண்டுவன புரிந்து நலஞ் செய்தல் ; சேர்த்துவைத்தல் ; மாறுபட்டாரை இணங்கச்செய்து சமாதானப்படுத்தல் .
கூட்டு ஒரினமான பொருள் ; நட்பு ; துணை ; தொடர்பு ; கூட்டு வாணிகம் ; திரள் ; ஒப்புமை ; கலப்பு ; கூட்டுக்கறி ; நீரால் பதப்பட்ட மண்திரள் ; வண்டிச் சக்கரம் முதலியவற்றிற்கு இடும் மை ; கொள்ளைப் பொருள் ; திறை ; அரையிற் கட்டும் துகிலாகிய அரைஞாண் .
கூட்டுக்கறி கூட்டமுது , காய்கறியும் பருப்புங் கலந்து செய்த கறியுணவு .
கூட்டுக்காரன் கூட்டாளி .
கூட்டுக்கால் பாய்ந்தோடுகை .
கூட்டுக்குடும்பம் பிரிவினையாகாத குடும்பம் .
கூட்டுண்ணுதல் கூடி உண்ணுதல் ; முற்றம் துய்த்தல் ; திறைகொள்ளுதல் ; கலவி செய்தல் .
கூட்டுதல் ஒன்றுசேர்த்தல் ; இணைத்தல் ; கலத்தல் ; அதிகப்படுத்தல் ; சபை கூட்டுதல் ; துடைப்பத்தாற் பெருக்குதல் ; உபதேசித்தல் .
கூட்டுப்பயிர் பிறருடன் சேர்ந்து பயிர்செய்தல் .
கூட்டுமா கறியற் சேர்க்கும் மா .
கூட்டுமூட்டு பலரும் கூடுகை ; சதியாலோசனைக் கூட்டம் ; பழிப்புரை .
கூட்டுவர்த்தகம் பலர் கூடிச் செய்யும் வணிகம் .
கூட்டுவியாபாரம் பலர் கூடிச் செய்யும் வணிகம் .
கூட்டுறவு சேர்ந்து வாழும் வாழ்க்கை ; இணைந்த உறவு ; நெருங்கிய தொடர்பு ; நட்பு ; ஒற்றுமையாய் வேலைசெய்கை .
கூட்டுறவுச் சங்கம் ஐக்கிய நாணயச் சங்கம் .
கூட்டெழுத்து விரைவாகக் கூட்டியெழுதும் எழுத்து ; பல எழுத்துகளைச் சேர்த்தெழுதும் எழுத்து , தொடரெழுத்து .
கூட்டிப்பிடித்தல் சேர்த்துப் பற்றுதல் ; இழுத்துப் பிடித்தல் .
கூட்டிப்போதல் கூட அழைத்துக்கொண்டு போதல் .
கூட்டிமுடித்தல் கூந்தல் முதலியவற்றைச் சேர்த்துக் கட்டுதல் ; முற்றுவித்தல் .
கூகாகம் கமுகு , பாக்குமரம .
கூகாரி காகம் .
கூகாவெனல் பேரொலிக் குறிப்பு ; முறையிடுதற் குறிப்பு .
கூகு எட்டாண்டுப் பெண் .
கூகூ அச்சக்குறிப்பு: ஓர் ஒலிக்குறிப்பு .
கூகூவெனல் காண்க : கூகாவெனல் .
கூகை கோட்டான் , பேராந்தை ; கூவைக் கிழங்கின் கொடி .
கூகைக்கட்டு கூகைபோல முகத்தை வீங்கச் செய்வதான பொன்னுக்குவீங்கி என்னும் அம்மைக்கட்டு .
கூகைநீறு கூவைமா ; காட்டெருமைப் பால் ; ஒரு மருந்து .
கூச்சக்காரன் வெட்கப்படுபவன் ; உடற்கூச்சமுள்ளவன் .
கூச்சம் நாணுகை ; உடல் கூசுகை ; கண் ; பல் முதலியன கூசுகை ; மனமெழாமை: நடுக்கம் .
கூச்சல் இரைச்சல் ; பேரொலி ; கக்கல் ; கழிச்சல் ; வாந்திபேதி .
கூச்சலிடுதல் இரைதல் ; கூக்குரலிடுதல் .
கூச்சி விளாம்பழத்தின் சதை .
கூச்சிதம் வெண்கடம்பு .
கூச்சிரம் வெண்கடம்பு .
கூச்சு கூரிய முனை ; புளகம் .
கூசம் கூச்சம் ; முலை .
கூசல் கூச்சம் ; மனங்குலைகை ; அச்சக்குறிப்பு ; கூக்குரல் .
கூசனம் காண்க : கூகனம் .
கூசா மண் , வெண்கலம் முதலியவற்றால் செய்த பாண்டம் .
கூசிதம் பறவையினொலி .
கூசிப்பார்த்தல் கண் கூச்சத்துடன் நோக்குதல் ; அருளுடன் பார்த்தல் .
கூசிவிழித்தல் கண் கூச்சத்துடன் நோக்குதல் ; அருளுடன் பார்த்தல் .
கூசுதல் நாணுதல் ; கூச்சங்கொள்ளுதல் ; கண் , பல் , முதலியன கூசுதல் ; அஞ்சிப் பின்வாங்குதல் ; நிலைகுலைதல் .
கூசுமாண்டம் பூசணி .
கூட்டக்கட்டு ஒற்றுமையோடு உதவக்கூடிய சுற்றத்தாரின் கட்டுப்பாடு .
கூட்டக்கலகம் மக்கள் ஒன்றுகூடி விளைக்கும் சண்டை .
கூட்டக்கொள்ளை கூட்டமாகச் சேர்ந்தடிக்கும் கொள்ளை .
கூட்டச்சாலை இருபக்கமும் மரங்கள் நிறைந்த பாதை .
கூட்டடி உப்புக் குவியற்களம் .
கூட்டத்தார் ஒரு வகுப்பினர் ; ஒரு சமூகத்தின் உறுப்பினர் .
கூட்டநாட்டம் பொதுமக்கள் கூடும் நிலைமை .
கூட்டம் கூடுகை ; திரள் ; சபை ; தொகுதி: இனத்தார் ; நட்பினர்வகை ; போர் ; மெய்யுறு ; புணர்ச்சி ; மிகுதி ; பிண்ணாக்கு ; மலையுச்சி .
கூட்டமை கறிவகை .
கூட்டமைதல் பலவகை உறுப்புகளும் சேர்ந்து அமைதல் .
கூட்டமை தீ மணவேள்வித் தீ .
கூட்டமைவு கூடியிருக்கை .
கூட்டர் தோழர் ; இனத்தார் .
கூட்டரக்கு செவ்வரக்கு .
கூட்டரவு கூடுகை ; நட்பு ; பொருட்கூட்டம் ; சேர்க்கை .
கூட்டல் ஒன்றுசேர்த்தல்: அதிகப்படுத்தல்: வலிய அரசரது துணையை நாடுதல் ; எண்களை ஒன்றோடொன்று கூட்டுதலாகிய கணிதவகை .
கூட்டவணி ஒரு காலத்திலுண்டாகும் பல தொழில்களின் கூட்டத்தைக் கூறுவதாகவேனும் தனித் தனியே தொழிலை விளைத்தற்குரிய பல காரணங்கள ஒன்றுகூடியதல் ஒரு தொழில் பிறப்பதாகக் கூறுவதாகவேனும் வரும் ஓர் அணி .
கூட்டற்றவன் சேரத்தகாதவன் ; ஒன்றுக்கும் உதவாதவன் ; சாதிவிலக்குண்டவன் .
கூட்டாஞ்சோறு கறிவகைகள் சேர்த்துப் பொங்கிய சோறு ; கூடியுண்ணும் உணவு .
கூட்டாளன் கூட்டாளி .
கூட்டாளி தோழன் ; பங்காளி ; காரியம் பார்ப்பவன் ; கூடிநடக்கிறவன் ; உடனொத்தவன் ; இரண்டில் ஒன்று .
கூட்டிக்கொள்ளுதல் கூட்டம் முதலியவற்றில் சேர்த்துக்கொள்ளுதல் ; மருந்து உணவு முதலியவற்றில் வேண்டும் பொருள்களைச் சேர்த்தல் .
கூ ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+ஊ) ; பூமி ; கூவுதல் ; கூக்குரல் ; கூழ் ; மலங்கழிக்கை .
கூக்குரல் பேரொலி ; முறையிடுதல் ; குழந்தைகள் கத்துவதுபோன்ற 'கூ' வென்னுஞ் சத்தம் .
கூக்கேட்டல் ஏவல் கேட்கை .
கூகம் கோட்டான் , ஆந்தை , மறைவு .
கூகமானம் மறைபொருள் .
கூகனம் மறைந்த பொருளுடைய சொல் , அவைக்குப் பொருந்தாத மொழி ; மாய்மாலம் .