சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சாகரம் | விழித்திருக்கை ; கடல் ; பதினாயிரங்கோடி . |
சாகரி | ஒரு பண்வகை . |
சாகவாசம் | காண்க : சகவாசம் . |
சாகவில்வம் | காண்க : சேம்பு |
சாகளம் | வெள்ளாடு . |
சாகாங்கம் | மிளகு . |
சாகாடு | வண்டி ; வணடியுருளை ; உரோகிணிநாள் |
சாகாதுண்டம் | அகில்மரம் ; சீந்திற்கொடி . |
சாகாமருந்து | தேவாமிழ்தம் ; ஒரு மூலிகைவகை . |
சாகாமிருகம் | மரக்கிளையில் வாழும் விலங்கு ; குரங்கு ; அணில் . |
சாகாமுலி | சீந்திற்கொடி . |
சாகாரம் | வடிவுடையது ; துயிலொழிகை . |
சாகி | மரம் ; ஈச்சமரம் ; காண்க : திராய் . |
சாகித்தியசக்தி | கவிபாடுந் திறமை . |
சாகித்தியம் | செய்யுள் ; இசைப்பாட்டு ; இலக்கியம் . |
சாகியம் | நட்பு . |
சாகினி | கீரைவகை ; பூங்கீரை ; துர்த்தேவதை . |
சாகீர் | மானியம் . |
சாகுபடி | பயிர்செய்தல் |
சாகுபடிக்கணக்கு | பயிர்செய்யப்பட்ட நிலங்களின் கணக்கு . |
சாகுபடித்திட்டம் | பயிர்செய்யத் தீர்மானித்த நிலங்களின் விவரம் ; பயிரிடுவதற்கு ஏற்படும் எதிர்பார்ப்புச் செலவு |
சாகை | மரக்கிளை ; கிளைக்குடும்பம் ; கை ; வேதநூற் பதிவு வேதம் ; இலை ; வட்டில் ; சாதல் ; வாழுமிடம் . |
சாங்கம் | உறுப்புகள் அனைத்தும் ; சாயல் ; முழுதும் ; பத்திரமாய் . |
சாங்கமிலார் | சாதியிலிருந்து விலக்கப்பட்டவர் . |
சாங்கரம் | கலப்புச்சாதி . |
சாங்கரர் | கலப்புச் சாதியார் . |
சாங்கரிசம் | கலப்பு . |
சாங்கரிசய | கலப்பு . |
சாங்கிமம் | மருத யாழ்த்திறவகை . |
சாங்கியம் | கபிலர் மதம் ; எண்ணிக்கைக்கு உட்படுவது ; சடங்கு . |
சாங்கியயோகம் | பிரமமே சீவன் , சீவனே பிரமம் என்னும் மதம் . |
சாங்கு | ஓர் அம்புவகை |
சாங்குகௌரி | காண்க : புளிநறளை . |
சாங்கேதிகம் | அடையாளம் ; கட்டுப்பாடு முதலியவற்றால் நிகழ்வது . |
சாங்கோபாங்கம் | முழுமை . |
சாசற்புடம் | ஐவகைத் தாளத்துள் ஒன்று . |
சாசனம் | கட்டளை ; அரசாணை முதலியவற்றைக் குறிக்கும் கல்வெட்டு ; உறுதிப்பத்திரம் ; இறையிலிநிலம் ; அதிகாரச்சின்னம் ; தண்டனை ; வேட்டுவச்சேரி ; வெண்கடுகு . |
சாசனம்பண்ணுதல் | நிலம் முதலியவற்றை விற்பனைசெய்தல் . |
சாசி | திராய்ப்பூண்டு ; முலைப்பால் . |
சாசிபம் | தவளை . |
சாசுவதம் | அசையாநிலை ; வீடுபேறு ; நிலையுள்ளது . |
சா | ஒர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஆ) ; சாதல் ; தேயிலைச்செடி . |
சாக்கடை | கழிவுநீர் செல்லும் இடம் , சலதாரை ; சேறு . |
சாக்காட்டுப்பறை | பிணப்பறை . |
சாக்காடு | இறப்பு ; கெடுதி . |
சாக்காத்தல் | இறப்போர்க்கு அருகிலிருந்து உதவுதல் . |
சாக்காளி | தன் உருவை மறைத்து வாழும் புழு வகை . |
சாக்கி | சாட்சி ; சக்கிமுக்கிக்கல் . |
சாக்கிடுதல் | போக்குச் சொல்லுதல் . |
சாக்கியம் | புத்தமதம் ; சாட்சி . |
சாக்கியர் | பௌத்தர் ; சமணர் . |
சாக்கியன் | சாக்கிய வமிசத்தில் தோன்றிய கௌதம புத்தர் ; சாக்கியநாயனார் . |
சாக்கிரத்தானம் | விழிப்புநிலையில் ஆன்மாவின் இடமாகக் கருதும் புருவநடு |
சாக்கிரதை | விழிப்பு , எச்சரிக்கை . |
சாக்கிரம் | ஆன்மாவின் விழிப்புநிலை . |
சாக்கு | வீண்காரணம் ; பொன் ; சட்டைப்பை கோணிப்பை . |
சாக்குப்போக்கு | வீண்காரணம் . |
சாக்குருவி | தீநிமித்தமாகச் சத்தமிடும் என்று கருதப்படும் ஆந்தைவகை . |
சாக்குறி | இறப்பு அடையாளம் . |
சாக்கை | புரோகிதன் ; அரசரின் கருமத்தலைவன் ; நிமித்திகன் . |
சாக்கையன் | கூத்தாடுபவன் ; நிமித்திகன் . |
சாக்கோட்டி | கருப்பிணிக்கு வரும் மசக்கை |
சாக்தம் | சக்தியையே தெய்வமாக வழிபடும் சமயம் . |
சாக்தன் | சாக்த சமயத்தைத் தழுவியவன் . |
சாக்தேயன் | சாக்த சமயத்தைத் தழுவியவன் . |
சாகசக்கியம் | திறமை ; பாசாங்கு . |
சாகசபட்சி | குலிங்கம் என்னும் பறவை . |
சாகசம் | துணிவு ; பாசாங்கு ; மெய்மை ; யானை ; காண்க : சாகபட்சி . |
சாகசன் | துணிவுள்ளவன் . |
சாகசிகன் | துணிவுள்ளவன் ; பாசாங்கு செய்வோன் . |
சாகதன் | துணிவுள்ளவன் , வீரன் . |
சாகபட்சிணி | புல்லுண்ணி . |
சாகம் | வெள்ளாடு ; தேனீ ; இலைக்கறி ; இலை ; சிறுகீரை ; தேக்கமரம் ; இலைச்சாறு ; வில் ; சாகத்தீவு . |
சாகரணம் | விழித்திருக்கை . |
சாகரப்பிரபை | எப்பொழுதும் விழித்தே இருக்க வேண்டிய ஒரு நரகம் . |
![]() |
![]() |