சி முதல் - சிகைக்காய் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சி ஓர் உயிர்மெய்யெழுத்து (ச் + இ) ; சிவம் ; சிரஞ்சீவி ; ஒரு பெண்பால் விகுதி .
சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா சில தாழிசைகளோடு பிறவுறுப்புகளையும் கொண்டு முடியும் கலிப்பாட்டு .
சிக்க நன்றாய் ; சுருக்கமாக .
சிக்கடி அவரைக்கொடி ; சிக்கல் .
சிக்கடிமுக்கடி தாறுமாறு ; முட்டுப்பாடு .
சிக்கணம் மழமழவென்றுள்ளது , வழுவழுப்பானது .
சிக்கத்துப்புழுதி உழுதும் விதைக்கப்படாதுள்ள நன்செய் .
சிக்கம் மெலிவு ; சிறைச்சாலை ; ஈயம் ; வெள்ளி ; செம்பு ; உறி ; வலை ; குடுமி ; உச்சி ; சீப்பு ; வலைப்பை .
சிக்கர் கள் ; தலைநோவுடையார் .
சிக்கரத்தெளியல் உசிலம்பட்டையிலிருந்து இறக்கும் கள் .
சிக்கல் தாறுமாறு ; முட்டுப்பாடு ; காக்கைக்கல் ; இளைத்தல் ; அகப்பட்டுக்கொள்ளுதல் ; ஓர் ஊர் .
சிக்கறுக்கி சிணுக்குவாரி என்னும் சீப்புவகை .
சிக்கறுத்தல் நநூல் முதலியவற்றைச் சிக்கு விடுத்தல் ; சிக்கலான வழக்கைத் தீர்த்தல் ; துறவறம் புகுதல் .
சிக்கனம் செட்டு ; இறுக்கம் .
சிக்கனவு திண்மை ; மனவுறுதி ; சிக்கனம் .
சிக்கி நாணம் .
சிக்கிமுக்கி நெருப்புண்டாக்கும் கல் .
சிக்கிமுக்கிக்கல் நெருப்புண்டாக்கும் கல் .
சிக்கு நூல் முதலியவற்றின் சிக்கு ; சிக்கலான செயல் ; கண்ணி ; தடை ; மாட்டிக்கொள்ளுகை ; ஐயம் ; உறுதி ; எண்ணெய்ச் சிக்கு ; சிக்கு நாற்றம் ; மாசு .
சிக்குக்கழித்தல் கலியாணகாலத்தில் மணமகனுக்குச் செய்யும் மயிர்கழி சடங்கு .
சிக்குண்ணுதல் அதிக முடிச்சுப்படுதல் ; அகப்படல் .
சிக்குதல் சிக்குப்படுதல் ; இறுகுதல் ; அகப்பட்டுக்கொள்ளுதல் ; கிடைத்தல் ; இளைத்தல் .
சிக்குப்பலகை கலைமகள் பீடம் , புத்தகங்களை விரித்துவைத்துப் படிப்பதற்கு உதவும் கருவிவகை .
சிக்குப்பாடு தொந்தரவு ; சிக்கலாயிருப்பது ; இடையூறு .
சிக்குப்பிக்கு தொந்தரவு ; சிக்கலாயிருப்பது ; இடையூறு .
சிக்குரு முருங்கைமரம் .
சிக்குவாங்கி சீப்புவகை .
சிக்குவாங்குதல் மயிர் முதலியவற்றின் சிக்கல் எடுத்தல் .
சிக்குவாரி காண்க : சிக்குவாங்கி .
சிக்குவை நாக்கு ; தண்ணீர்விட்டான்கிழங்கு .
சிக்கென உறுதியாக ; இறுக ; உலோபத்தனமாக ; விரைவாக .
சிக்கெனவு உறுதி ; கையிறுக்கம் .
சிக்கை பயிற்சி ; இசைப்பயிற்சி ; தண்டனை .
சிகண்டம் மயிற்றோகை ; தலைமுடி .
சிகண்டி மயில் ; திருமால் ; அலி ; அம்பு ; கோழிச்சேவல் ; பாலையாழினோசை ; இசைநுணுக்க நூலாசிரியர் ; தொல்லைகொடுப்பவன் ; சிற்றாமணக்கு ; தலைமுடி .
சிகண்டிகம் கோழி .
சிகண்டிகை கருங்குன்றி .
சிகண்டிசன் வியாழன் .
சிகதம் வெண்மணல் .
சிகதை வெண்மணல் .
சிகநாதம் அப்பிரகம் .
சிகரம் மலையுச்சி ; மலை ; உயர்ச்சி ; கோபுரம் ; விற்பிடி ; நீர்த்துளி ; அலை ; புளகம் ; வட்டில் ; காக்கை ; கிராம்பு ; சுக்கு ; இலவங்கம் ; கவரிமா .
சிகரம்வைத்தல் கோபுரம் முதலியவற்றின் உச்சியில் கலசம் வைத்தல் ; அணிகலனில் கொண்டைவைத்தல் ; மனத்திற் பதியும்படி திறமையாகப் பேசுதல் .
சிகரி மலை ; கோபுரம் ; கருநாரை ; புல்லுருவி ; எலிவகை .
சிகரிகை நேர்வாளச்செடி .
சிகரிநிம்பம் மலைவேம்பு .
சிகரியந்தம் புல்லுருவி .
சிகல் குறைவு ; கேடு .
சிகல்தல் குறைதல் ; கெடுதல் .
சிகலுதல் குறைதல் ; கெடுதல் .
சிகலோகம் காண்க : அகில் .
சிகழி தலைமயிரின் முடிப்பு .
சிகழிகை மயிர்முடிப்பு ; தலையைச் சூழ அணியும் மாலைவகை ; மாலை .
சிகா எலி ; முத்திரை ; முடி .
சிகாமணி தலையில் அணியும் மணி ; சிறந்தோன் .
சிகாரி வேட்டை ; வேட்டைக்காரன் .
சிகாரியான் வேட்டைக்காரன் ; வேட்டையில் உதவி ஆள் .
சிகாவர்க்கம் சுவாலைக் கூட்டம் .
சிகாவரம் பலாமரம் .
சிகாவலம் மயில் ; பாசி .
சிகாவளம் மயில் .
சிகாவிம்பம் வட்டவடிவாகிய தலை .
சிகி மயில் ; நெருப்பு ; கேது ; ஆமணக்கு ; புத்தர்களுள் ஒருவர் ; அம்பு ; எருது ; குதிரை ; சிலம்பு ; சேவல் ; விளக்கு .
சிகிக்கிரீவம் மயில்துத்தம் .
சிகிகண்டம் மயில்துத்தம் .
சிகிச்சை நோய்க்குச் செய்யும் பரிகாரம் , மருத்துவம் .
சிகிடிமா கொட்டைமுந்திரிகைமரம் .
சிகிமுனி காண்க : சிக்கிமுக்கிக்கல் .
சிகில் ஆயுதங்களைத் துலக்குகை .
சிகிலம் சேறு .
சிகிவாகனன் மயில்வாகனன் , முருகக்கடவுள் .
சிகுரம் மயிர்ப்பொது .
சிகுவை நாக்கு ; பத்து நாடிகளுள் ஒன்று ; வாக்கு .
சிகை குடுமி ; தலைமயிர்முடி ; தலையின் உச்சி ; மயிற்கொண்டை ; பந்தம் ; சுடர் ; உண்டிக்கவளம் ; வட்டி ; நிலுவை .
சிகைக்காய் சீயக்காய் .