சீ முதல் - சீதகிரணன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
சீ ஓர் உயிர்மெய்யெழுத்து(ச் + ஈ) ; திருமகள் ; சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி ; சீழ் ; சளி ; இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு .
சீக்கட்டுதல் சீழ்பிடித்தல் .
சீக்கல் நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலியாகிய சீழ்க்கை ; கல்வகை .
சீக்காச்சா நாய்ப்புடல்கொடி .
சீக்காய் பழுக்காத பனங்காய் ; காண்க : சீழ்க்கை ; சீயக்காய் .
சீக்கிரப்படுதல் விரைவுபடுதல் ; எளிதிற் சினங்கொள்ளுதல் .
சீக்கிரபுத்தி அவசரபுத்தி .
சீக்கிரம் விரைவு ; நோய் முதலியவற்றின் வீறு ; உறைப்பு ; கோபம் ; குதிரை பூட்டிய பெட்டி வண்டி ; அம்பு .
சீக்கிரான் உசிலமரம் .
சீக்கிரி உசிலமரம் .
சீக்கிரியன் உசிலமரம் .
சீக்கிரியான் உசிலமரம் .
சீக்குரு முருங்கைமரம் .
சீக்கூட்டுதல் காண்க : சீக்கட்டுதல் .
சீக்கை கோழை .
சீகத்தம் அழகிய கை .
சீகம் தமரத்தைமரம் .
சீகம்புல் ஊகம்புல் .
சீகரம் நீர்த்துளி ; ஆலங்கட்டி ; மழை ; அலை ; செல்வச் செழுமை ; கவரி ; ஒருவகைக் கோயில் .
சீகரி நீர்த்திவலை .
சீகா ஐந்து உலோகம் .
சீகாமரம் மருத யாழ்த்திறங்களுள் ஒன்று .
சீகாரம் ஒரு பண்வகை .
சீகாரியம் கோயில் , மடம் முதலியவற்றின் மேல்விசாரணை ; மங்கலச் செயல் .
சீகு காண்க : சீகம்புல் .
சீங்கண்ணி முதலைவகை .
சீங்குழல் குழல்வகை .
சீச்சீ இகழ்ச்சிக்குறிப்பு .
சீசகம் ஈயம் ; பைத்தியம் .
சீசம் ஈயம் ; பைத்தியம் .
சீசா கண்ணாடிக்குப்பி .
சீட்டாடுதல் சீட்டு விளையாடுதல் .
சீட்டாள் கடிதம் கொண்டுசெல்பவனான வேலைக்காரன் .
சீட்டி அச்சடித்த துணி ; சீழ்க்கை ; ஊதுகுழல் .
சீட்டியடித்தல் சீழ்க்கையடித்தல் .
சீட்டு எழுத்துக் குறிப்பு ; பத்திரம் ; கூட்டுச் சீட்டு நிதி ; விளையாட்டுச் சீட்டு ; பட்டியல் .
சீட்டுக்கச்சேரி சீட்டாட்டம் .
சீட்டுக்கட்டு விளையாடுஞ் சீட்டுத்தொகுதி .
சீட்டுக்கரைசுவான் ஏலச்சீட்டு நடத்துபவன் .
சீட்டுக்கவி ஓலைப்பாசுரம் , ஓலையில் கவி வடிவில் எழுதிய கடிதம் .
சீட்டுக்கிழிதல் இழத்தல் ; வேலையிலிருந்து நீக்கப்படுதல் .
சீட்டுக்குலுக்குதல் திருவுளச்சீட்டு உதறுதல் .
சீட்டுக்கொடுத்தல் ஆதாரபத்திரம் முதலியனகொடுத்தல் ; வேலையினின்று விலகக் கட்டளையிடுதல் .
சீட்டுப்பிடித்தல் கூட்டுச்சீட்டு ஏற்படுத்துதல் ; சீட்டில் ஏலமெடுத்தல் ; சீட்டு விளையாட்டில் பிறர் சீட்டை வென்றெடுத்தல் .
சீட்டுப்போடுதல் திருவுளச்சீட்டு உதறுதல் ; கூட்டுச்சீட்டு நிதியில் பங்கெடுத்தல் ; சீட்டு விளையாட்டில் சீட்டுப் போடுதல் .
சீட்டுவாங்குதல் தள்ளப்படுதல் ; எமனுடைய சீட்டுப் பெறுதலான இறத்தல் .
சீட்டுவிழுதல் திருவுளச்சீட்டு முதலியன ஒருவன் சார்பாக உரிமையாதல் .
சீட்டை இரண்டாம் போகத்தில் விளையும் கதிர் ; சீழ்க்கை .
சீட்டைக்கதிர் இரண்டாம் போகத்தில் விளையும் கதிர் ; பணியாளர் அனுபோகத்தின் பொருட்டு விடப்பட்ட கதிர் .
சீடன் மாணாக்கன் .
சீடு நெசவில் பயன்படும் நூற்கண்டு .
சீடை உருண்டை வடிவான பலகாரவகை ; நருங்கல் ; ஒருமீன்வகை .
சீண்டரம் தொல்லை ; தொந்தரவு .
சீண்டல் தயிர் முதலியவற்றின் தீநாற்றம் .
சீண்டு தயிர் முதலியவற்றின் தீநாற்றம் .
சீண்டுதல் தொந்தரவுசெய்தல் ; தீண்டியுணர்த்துதல் .
சீணசந்திரன் தேய்பிறை .
சீணம் கேடு ; சோர்வு ; அழிவுறுகை .
சீணித்தல் வலிகுறைதல் ; அழிவடைதல் .
சீத்தடித்தல் காற்று வாரிவீசுதல் .
சீத்தல் கீறிக் கிளறுதல் ; துடைத்தல் ; போக்குதல் ; பெருக்கித் தள்ளுதல் ; கூர்மையாகச் சீவுதல் ; தூயதாக்கல் .
சீத்தா ஒரு பழமரவகை .
சீத்தி இளப்பம் ; தாழ்வு .
சீத்துப்பூத்தெனல் மூச்சுத் திணறுதல் குறிப்பு ; பாம்பு சீறற்குறிப்பு ; முறுமுறுத்தற்குறிப்பு .
சீத்துவம் திறன் ; வளம் ; தூய்மை ; சத்து .
சீத்தை குணமின்மை ; கைவிடப்பட்டவன் ; கீழ் மகன் ; பதனழிவு ; சீட்டுச்சீலை .
சீத்தைக்கண் புளிச்சைக்கண் .
சீத்தைக்காடு அடர்ந்த காடு .
சீதக்கட்டு சீதவழும்புநோய் .
சீதக்கடுப்பு சீதக்கட்டால் மலவாயிலில் தோன்றும் வலி .
சீதக்கழிச்சல் சீதபேதிவகை .
சீதகண்டுவாதம் பாத நரம்பில் சீதள மிகுதியால் உண்டாகும் நமைச்சல்நோய் .
சீதகம் ஈயம் ; தரா .
சீதகன் சுக்கிரன் ; சோம்பன் ; சந்திரன் .
சீதகிரணன் சந்திரன் .