சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தி | ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+இ) . |
| திக்கங்கம் | எட்டுத்திக்குப் பாலகர் குறி . |
| திக்கசம் | எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள் . |
| திக்கம் | இளயானை . |
| திக்கயம் | காண்க : திக்கசம் . |
| திக்கரன் | இளைஞன் . |
| திக்கரி | இளம்பெண் ; குமரி . |
| திக்கரித்தல் | மறுத்தல் ; வெறுத்தல் . |
| திக்கரை | முருக்கு . |
| திக்கற்றவன் | கதியற்றவன் . |
| திக்காதிக்கு | பல திசையிலும் . |
| திக்காரம் | நிந்தை ; இகழ்ச்சி ; பிடிவாதம் . |
| திக்கிடுதல் | அச்சமுறுதல ; நடுக்குறல் . |
| திக்கியானை | காண்க : திக்கசம் . |
| திக்கிராந்தம் | கூத்துவகை . |
| திக்கு | திசை ; புகலிடம் ; வாய்த்தெற்று ; சமயம் ; காண்க : கொடிவேலி . |
| திக்குக்கட்டு | பாதுகாப்புக்காகத் திக்குத்தேவதைகளை மந்திரத்தால் கட்டுப்படுத்தி நிறுத்துகை . |
| திக்குக்கெடுதல் | திசை தெரியாது மயங்குதல் ; உதவியற்றுத் திரிதல் . |
| திக்குத்திக்கெனல் | அச்சத்தால் நெஞ்சு பதைத்தற்குறிப்பு ; தாளக்குறிப்பு . |
| திக்குதல் | சொற்கள் தடைப்படத் தெற்றியுச்சரித்தல் ; சொற்குழறிப் பேசுதல் . |
| திக்குப்பந்தனம் | காண்க : திக்குக்கட்டு . |
| திக்குப்பலி | திக்குத் தேவதைகளுக்கு இடும் பலி . |
| திக்குப்பாலகர் | எண்திக்குப்பாலகர் ; இந்திரன் . |
| திக்குப்பேச்சு | தெற்றிப் பேசும் சொல் . |
| திக்குமாறாட்டம் | திசை தடுமாறுதல் . |
| திக்குமுக்காடுதல் | மூச்சுவிட முடியாமல் திணறுதல் . |
| திக்குமுக்கு | மூச்சு முட்டுகை . |
| திக்குவாய் | குளறுவாய் ; தெற்றிப் பேசுபவன் . |
| திக்குவாயன் | வாய் தெற்றிப் பேசுபவன் . |
| திக்குவிசயம் | அரசர்கள் தம் பெருமை விளங்க எல்லாத் திசைகளிலும் வெற்றிபெறுகை . |
| திக்குறு | காட்டு முருங்கைமரம் . |
| திகசம் | காண்க : ஓமம் . |
| திகதி | தேதி . |
| திகந்தம் | திக்கின் முடிவு . |
| திகந்தராளம் | வானம் . |
| திகம் | மிகுதி ; புலித்தோல் ; அவாவறுத்தல் . |
| திகம்பரம் | அம்மணம் . |
| திகம்பரன் | ஆடையணியாதவன் ; கதியற்றவன் ; நிருவாண சந்நியாசி ; சமணமுனிவன் ; அருகன் ; சிவன் . |
| திகம்பரி | திகம்பரனின் மனைவியான பார்வதி . |
| திகரடி | சோர்வு ; மூச்சடைப்பு . |
| திகரம் | சோர்வு ; ஈளை ; அவா . |
| திகழ் | ஒளி ; தோற்றம் . |
| திகழ்ச்சி | ஒளி ; தோற்றம் . |
| திகழ்த்துதல் | விளக்குதல் ; விளங்கக் காட்டுதல் ; அழகுறுத்தல் . |
| திகழ்தல் | விளங்குதல் ; சிறப்புறுதல் ; உள்ளடக்கிக் கொள்ளுதல் . |
| திகழ்வு | விளக்கம் ; ஒளி . |
| திகளர் | கன்னட நாட்டார் தமிழருக்கு வழங்கும் பெயர் . |
| திகாந்தம் | காண்க : திகந்தம் . |
| திகிர் | நடுக்கம் ; பலிச்சடங்கில் பயன்படுத்தும் கயிறு . |
| திகிரி | வட்டவடிவு ; உருளை ; சக்கரப்படை ; தண்டசக்கரம் ; அரசாணை ; வண்டி ; தேர் ; சூரியன் ; மலை ; மூங்கில் ; வேறு . |
| திகிரிக்கல் | சக்கரவாளகிரி ; ஆட்டுக்கல் ; கோரோசனை . |
| திகிரிகை | சக்கரம் ; குயவன் சக்கரம் . |
| திகிரிப்புள் | சக்கரவாகப் பறவை . |
| திகிரியான் | சக்கரப்படை தாங்கிய திருமால் . |
| திகில் | அச்சம் , பீதி . |
| திகில்படுதல் | பேரச்சங்கொள்ளுகை ; திடுக்கிடுதற்குறிப்பு . |
| திகில்பிடித்தல் | பேரச்சங்கொள்ளுகை ; திடுக்கிடுதற்குறிப்பு . |
| திகிலெனல் | பேரச்சங்கொள்ளுகை ; திடுக்கிடுதற்குறிப்பு . |
| திகுதிகெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; புண்ணெரிச்சற்குறிப்பு ; நெருப்புப் பற்றியெரியுங்குறிப்பு ; சினக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; நீரொலிக்குறிப்பு ; அச்சக்குறிப்பு . |
| திகை | திகைப்பு ; ஈளை ; மயக்கம் ; தேமல் ; திசை . |
| திகைத்தல் | மயங்குதல் ; அடங்குதல் ; சோர்தல் . |
| திகைதல் | முடிவுறுதல் ; தீர்மானமாதல் . |
| திகைதி | தேதி . |
| திகைப்பு | பிரமிப்பு ; ஈளை . |
| திகைப்பூடு | மிதித்தவர்களை மயங்கச் செய்யும் ஒரு பூண்டுவகை . |
| திகைப்பூண்டு | மிதித்தவர்களை மயங்கச் செய்யும் ஒரு பூண்டுவகை . |
| திங்கட்கண்ணியன் | சந்திரனை முடியிற்கொண்டவனான சிவன் . |
| திங்கட்கிழமை | சந்திரனுக்கு உரியதான நாள் ; வாரத்தின் இரண்டாம் நாள் . |
| திங்கட்குடையோன் | சந்திரனைக் குடையாகக் கொண்ட மன்மதன் . |
| திங்கட்குலன் | சந்திரகுலப் பாண்டியன் . |
| திங்கட்குழவி | பிறைச்சந்திரன் . |
| திங்கண்முக்குடையோன் | அருகன் . |
| திங்கணாள் | சந்திரனை அதிதேவதையாகக் கொண்ட மிருகசீரிடம் . |
| திங்கள் | சந்திரன் ; மாதம் ; திங்கட்கிழமை ; பன்னிரண்டு . |
| திங்கள்மணி | காண்க : சந்திரகாந்தக்கல் . |
|
|