தொ முதல் - தொட்டால்வாடி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
தொ ஓர் உயிர்மெய்யெழுத்து (த் + ஒ)
தொக்கட்டி மரத்தில் பழங்களைப் பொதிந்து வைக்கும் ஒலைமறைவு ; பழம் வைக்கும் சிறு கூடை ; காவற்குடிசை .
தொக்கடம் மிதித்து உழக்குகை ; பழம் வைக்கும் சிறுகூடை .
தொக்கடம்போடுதல் உடம்பு பிடித்தல் ; கசக்கிச் சாறுபிழிதல் .
தொக்கடவு குறுக்குவழி .
தொக்கடி காண்க : தொக்கட்டி .
தொக்கடை வறுமை .
தொக்கணம் காண்க : தொக்கடம் .
தொக்கம் செரியாமல் வயிற்றில் சிக்கிக்கொள்ளும் பொருள் ; வழக்கு .
தொக்கார் கூட்டத்தார் ; தோழர் .
தொக்கி சமுத்திராபச்சைச் செடி .
தொக்கு தொடுவுணர்ச்சியை அறிகருவி ; உடம்பின்தோல் ; கனியின்தோல் ; மரப்பட்டை ; ஆடை ; பற்று ; துவையல் ; சிறுமை ; எளிது ; இளப்பமானவன் ; நேர்மை .
தொக்குத்தொக்கெனல் ஈரடுக்கொலிக்குறிப்பு ; தள்ளாடற்குறிப்பு .
தொக்குநிற்றல் வெளிப்படாது நிற்றல் .
தொகக்காரன் மதிப்பிடுவோன் .
தொகம் மதிப்பு .
தொகம்பார்த்தல் மதிப்பிடுதல் .
தொகாநிலை முற்றுத்தொடர் , எச்சத்தொடர் முதலிய தொடர்சொற்கள் .
தொகாநிலைத்தொடர் முற்றுத்தொடர் , எச்சத்தொடர் முதலிய தொடர்சொற்கள் .
தொகுத்தல் எண் கூட்டல் ; திரட்டிக் கூட்டுதல் ; அடுக்குதல் ; மதிப்பிடுதல் ; தொக்குநிற்கச் செய்தல் ; சொல்லின் முதல் இடை இறுதியில் எழுத்துகளை நீக்குதல் ; சுருக்குதல் ; சம்பாதித்தல் .
தொகுத்துக்கூறல் முப்பத்திரண்டு உத்திகளுள் நூற்பொருளை ஒரிடத்தே சுருக்கிக் கூறுவது .
தொகுத்துச்சுட்டல் முப்பத்திரண்டு உத்திகளுள் நூற்பொருளை ஓரிடத்தே சுருக்கிக் கூறுவது .
தொகுத்துரை பொழிப்புரை .
தொகுதல் கூட்டுதல் ; நெருங்குதல் ; ஒன்றாதல் ; அடுக்கிவருதல் ; ஒடுங்குதல் ; மறைதல் ; மொத்தமாதல் ; ஒத்தல் ; உள்ளடங்குதல் ; சுருங்குதல் ; குட்டையாதல் ; வீணாதல் .
தொகுதி கூட்டம் ; சேர்க்கை ; மந்தை ; பகுதி ; வரிசை ; சாதி ; உருபு முதலியவற்றின் மறைவு ; மொத்த எண் ; சபை ; சிறு செப்பு .
தொகுதிப்பெயர் குழுவைக் குறிக்கும் பெயர் ; குழூஉக்குறிப்பெயர் ; மொத்த எண் .
தொகுப்பு தொகை ; கூட்டம் ; எல்லை .
தொகை கூட்டம் ; சேர்க்கை ; கொத்து ; மொத்தம் ; பணம் ; எண் ; கணக்கு ; தொக்குநிற்றல் ; திரட்டுநூல் ; விலங்கு முதலியவற்றின்திரள் ; கூட்டல் ; தொகுத்துக் கூறுகை ; வேற்றுமைத்தொகை முதலிய தொடர் சொற்கள் .
தொகைக்காரன் செல்வன் .
தொகைச்சூத்திரம் ஒரு பொருளின் பகுப்பை எண்ணிக்காட்டும் சூத்திரம் .
தொகைநிலை வென்ற வேந்தன் தன் படைக்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்குதொகுக்கும் உழிஞைத்துறை ; பகைவேந்தர் எல்லாம் ஒருங்குபணிதலைக் கூறும் புறத்துறை ; சுமுகமாய் நிற்கை ; சுருங்கிநிற்கை ; காண்க : தொகைநிலைத்தொடர் ; போரில் இருதிறத்தாரும் மாய்ந்ததைக் கூறும் புறத்துறைவகை ; காண்க : தொகைநிலைச்செய்யுள் .
தொகைநிலைச்செய்யுள் பொருள் , பாட்டு , அளவு முதலியனபற்றி ஒருங்குதிரட்டப்பட்ட செய்யுள் நூல் .
தொகைநிலைத்தொடர் வேற்றுமையுருபு முதலியன இடையே மறைந்து நிற்கவரும் சொற்றொடர் .
தொகைநூல் பலரால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்றாகத் திரட்டப்பட்ட நூல் .
தொகைப்படுத்துதல் மொத்தத் தொகையாக வளரச்செய்தல் ; பெரும்பொருள் திரட்டுதல் ; பிரித்துக்காட்டுதல் .
தொகைப்பொருள் பிண்டப்பொருள் ; தொகை நிலைத் தொடரின் பொருள் .
தொகைபூட்டுதல் கணக்குச் சரிக்கட்டுதல் ; கணக்கு மொத்தம் கட்டுதல் .
தொகைமோசம் கணக்குத் தவறுகை ; பண இழப்பு .
தொகையகராதி சதுரகராதியில் தொகையுடைய பொருளைக் காட்டும் அகராதி ; எண் தொகையால் சுட்டும் பொருள் விளக்க அகராதி .
தொகையடியார் ஒத்த தன்மையால் ஒரு நெறிப்பட்ட தொண்டர் குழு ; ஒன்பது பிரிவனராயுள்ள கூட்டு அடியார் .
தொகையாக்குதல் காண்க : தொகைப்படுத்துதல் .
தொகையுவமம் பொதுத்தன்மை வெளிப்பட்டு வாராமல் ஆராயந்துணரும்படி மறைந்து நிற்கும் உவமை .
தொகையேற்றுதல் சிறுகச்சிறுக கொடுத்துக் கடன் ஏற்றுதல் ; எண் கூட்டுதல் ; கணக்குப் பதிதல் .
தொகைவிரி விரித்துக் கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக் கூறியதனை விரித்தும் கூறும் முறை .
தொங்கட்டான் உடையைத் தளர்வாக்க் கட்டுகை ; தொங்கலாயுள்ள காதணிவகை .
தொஙங்கணி தொங்கலாயுள்ள அணிவகை .
தொங்கல் தொங்குதல் ; தொங்கற்பொருள் ; ஒட்டுப்பற்றியிருத்தல் ; அலங்காரத் தூக்கம் ; அணிகலத் தொங்கல் ; அணிகலக் கடைப்பூட்டு ; காதணிவகை ; முன்றானை ; பெண்கள் மேலாக்கு ; பருத்த பூமாலை ; ஆண்மயிர் ; பீலிக்குஞ்சம் ; மயில்தோகை ; வெண்குடை ; மகளிர் ஐம்பாலுள் ஒருவகை ; குடை ; சாமரம் முதலிய விருது .
தொங்கல்போடுதல் மேலாக்கிடுதல் .
தொங்கல்விழுதல் குறைவாதல் .
தொங்கன் கள்வன் .
தொங்காரப்பாய்ச்சல் குதிரை முதலியவற்றின் ஒட்டம் .
தொங்காரம் ஏளனம் .
தொங்கி கள்ளி .
தொங்கிசம் கேடு ; துன்பம் .
தொங்கிப்பாய்தல் குதித்தோடுதல் ; அகங்கரித்தல் .
தொங்கிப்போதல் வைத்தது காணாமற்போதல் ; பொருள் மோசம் போதல் ; வழியிற்களைத்துத் தங்குதல் ; சாதல் ; ஒடிப்போதல் .
தொங்குகாது வடிந்த காது ; மாட்டுக் குற்றவகை .
தொங்குகிழவன் தொண்டுகிழவன் .
தொங்குங்கல் ஆட்டுஉரல் .
தொங்குதல் நூலுதல் ; அண்டிக்கிடத்தல் ; நிலைத்துநிற்றல் ; இருத்தல் ; திடமாதல் ; குதித்தல் ; சாதல் ; முடிவுபெறாது தாமதித்திருத்தல் ; உதவியற்றிருத்தல் ; கிடைத்தல் .
தொங்குபறிவு ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தல் ; விலக வழிபார்த்தல் .
தொங்குபாலம் நீரப்பரப்பில் தாங்கு தூண்களின்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் பாலம் .
தொங்குபுழுதி வயலில் இறுகாது நிற்கும் புழுதி .
தொசம் கொடி .
தொட்ட பெரிய .
தொட்டகுறை முற்பிறவியில் தொடங்கிவிட்ட வினைக்குறை ; தொடங்கிவிட்ட முற்றாப்பணி ; பயன்துய்க்காமை .
தொட்டடி செய்யுளின் முதலடி .
தொட்டப்பன் தலைதொட்ட ஞானத்தந்தை .
தொட்டம் சிறுநிலம் .
தொட்டல் தீண்டல் ; உண்டல் ; கட்டுதல் ; தோண்டல் .
தொட்டவிரல்தறித்தான் பெருங்குறிஞ்சாக் கொடி .
தொட்டாட்டுமணியம் குற்றேவல் .
தொட்டாட்டுவேலை குற்றேவல் .
தொட்டாய்ச்சி ஞானத்தாய் .
தொட்டால்வாடி தொட்டால் சுருங்கும் செடிவகை ; சுண்டிவகை .