சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தோ | ஓர் உயிர்மெய்யெழுத்து (த் + ஓ) ; நாயைக் கூப்பிடும் ஒலி . |
| தோக்கியம் | காண்க : தோக்குமம் . |
| தோக்கு | கைத்துப்பாக்கி . |
| தோக்குமம் | காதின் குறும்பி ; முகில் . |
| தோக்குளம் | காண்க : பருத்தி . |
| தோக்கை | முன்றானை ; கொய்சகம் ; சீலை ; மேற்போர்வை . |
| தோகசம் | பால் . |
| தோகதம் | வயாநோய் ; விருப்பம் . |
| தோகம் | சிறுமை ; இளங்குழந்தை ; பால் ; துயரம் . |
| தோகல் | காண்க : சோனைப்புல் . |
| தோகலி | அசோகமரம் . |
| தோகை | மயில் ; மயிற்பீலி ; பெண் ; இறகு ; விலங்கின்வால் ; முன்றானை ; பெருங்கொடி ; நெல் , கரும்பு , வாழை முதலியவற்றின் இலை ; பனங்கிழங்கின் வாற்றோல் ; ஆண்குறியின் நுனித்தோல் ; பெண்மயிர் ; ஆடை ; கொய்சகம் ; தொங்கல் ; மீன்வகை . |
| தோகைப்பகை | மயிலுக்குப் பகையான ஒந்தி . |
| தோகைமஞ்ஞை | ஆண்மயில் . |
| தோகைமயில் | ஆண்மயில் . |
| தோகைமுகபூடணம் | பெண்களின் முகத்தை அலங்கரிப்பதான மஞ்சள் . |
| தோசம் | குற்றம் ; பாவம் ; குறை ; நாடிக்கொதிப்பு ; சன்னி ; விடக்காய்ச்சல் ; குழந்தை நோய்வகை . |
| தோசி | நற்பேறு அற்றவன் . |
| தோசை | மாவாலாகிய ஒரு பணிகாரவகை . |
| தோசைதிருப்பி | கல்லில் வார்க்கும் தோசையைத் திருப்பவும் எடுக்கவும் உதவும் கருவி . |
| தோட்கட்டு | தோட்சந்து ; தோள் . |
| தோட்காப்பு | தோள்வளை . |
| தோட்கோப்பு | கட்டுச்சோறு . |
| தோட்சுமை | தோளில் தாங்கும் சுமை ; மூட்டை ; காண்க : காவடி . |
| தோட்டக்காரன் | தோட்டத்தைப் பார்க்கும் வேலையாள் ; தோட்டத்தின் சொந்தக்காரன் . |
| தோட்டக்கால் | கேணிப் பாய்ச்சலுள்ள கொல்லைநிலம் . |
| தோட்டப்பயிர் | காய்கறிகள் . |
| தோட்டம் | வீட்டுக்கொல்லை ; படப்பை ; சோலை . |
| தோட்டவாரியம் | தோட்டக் கண்காணிப்பு . |
| தோட்டா | துப்பாக்கியிலிடும் வெடிமருந்துச் சுருள் . |
| தோட்டி | ஆணை ; காவல் ; கதவு ; மனைவாயில் ; காண்க : தோணாமுகம் ; கட்டழகு ; செங்காந்தள்மலர் ; நெல்லிமரம் ; அங்குசம் ; கொக்கி ; வெட்டியான் ; குப்பை முதலியன வாருவோன் , துப்புரவாளன் . |
| தோட்டிச்சி | தோட்டிப்பெண் . |
| தோட்டிமை | ஒற்றுமை ; வெட்டியான்வேலை . |
| தோட்டுக்காது | ஒலைச்சுருள் முதலியன இட்டகாது ; காதின் அடித்துண்டு . |
| தோட்டுச்சக்கரம் | சக்கரவாணம் . |
| தோட்டுச்சிரங்கு | கொப்புளச்சிரங்கு . |
| தோட்டுணை | கணவன் . |
| தோட்பட்டை | தோட்புறத்து எலும்பு . |
| தோடகச்சிரங்கு | காண்க : தோட்டுச்சிரங்கு . |
| தோடகம் | தாமரை ; கொப்புளம் . |
| தோடத்திரயம் | வாதம் பித்தம் சிலேட்டுமம் என்னும் முப்பிணிகள் . |
| தோடம் | குறை ; பாவம் ; பிணி , சன்னி ; கிச்சிலி வகை ; மகிழ்ச்சி ; இரவு ; நாடிக்கொதிப்பு ; விடக்காயச்சல் ; பித்தவாதசுரம் ; குழந்தை நோய்வகை ; மூவகை இலக்கணக்குற்றம் . |
| தோடயம் | நாடகத்தின் முன்மொழிப் பாட்டு . |
| தோடா | கையணிவகை ; கல்வித்திறமைக்குப் பரிசிலாகப் பெறும் பொற்காப்பு . |
| தோடி | ஒரு பண்வகை . |
| தோடு | பூ ; பூவிதழ் ; ஒலை ; காதோலைச்சுருள் ; காதணி ; பழத்தின் ஓடு ; வட்டமாக அரிந்தது ; வட்டத்திரணை ; தொகுதி ; தோல் ; இலை ; கதிர்த்தாள் . |
| தோடை | மாட்டுநோய்வகை ; ஆடாதோடை ; கிச்சிலிவகை ; முத்துக் குளியலில் ஒரு முழுக்கில் கிடைக்கும் சிப்பிகள் . |
| தோடையம் | காண்க : தோடயம் . |
| தோண்டான் | ஓநாய் . |
| தோண்டி | தண்ணரிறைக்குஞ் சிறு பாத்திரம் ; காண்க : கரந்தை ; வறட்சுண்டிச்செடி . |
| தோண்டுச்சால் | நாற்றங்காலில் தேங்கின நீரை வடிக்கத் தோண்டும் சிறுகால் . |
| தோண்டுதல் | அகழ்தல் ; குடைதல் ; முகத்தல் ; விவரம் விசாரித்தல் ; பண்டம் இறக்குதல் . |
| தோண்மாற்றுதல் | மணமகனும் மணமகளும் மாலைமாற்றுதல் ; சுமையை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றிக்கொள்ளுதல் ; ஒருவர் தோட்சுமையை மற்றவர் தோளுக்கு மாற்றுதல் . |
| தோண்முதல் | புயவலி . |
| தோண்மேல் | பிடரி . |
| தோண்மை | காண்க : தோண்முதல் . |
| தோணாமுகம் | அகழ்சூழ்ந்த பெரிய நகரம் . |
| தோணி | ஓடம் ; மிதவை ; மரக்கலம் ; நீர் ; நீரத்தொட்டி ; சேறு ; மதிலுறுப்பு ; அம்பு ; இரேவதி நட்சத்திரம் ; சிறுவழுதுணங்காய் . |
| தோணிக்காரன் | படகோட்டி . |
| தோணித்துறை | துறைமுகம் . |
| தோணிதள்ளுதல் | ஒடத்தை நீரில் விடுதல் . |
| தோணிதாங்குதல் | படகைக் கழையால் தள்ளுதல் . |
| தோணிப்பாலம் | தோணிபோல் அமைக்கப்படும் கற்பாலம் . |
| தோணிபுரம் | சீகாழி . |
| தோணியம் | அம்பு . |
| தோணுதல் | தோன்றுதல் . |
| தோணோக்கம் | மகளிர் விளையாட்டுவகை . |
| தோத்திரப்பா | துதிப்பாட்டு . |
| தோத்திரப்பாட்டு | துதிப்பாட்டு . |
| தோத்திரம் | புகழ்ச்சி ; வணக்கமொழி ; காண்க : தோத்திரப்பாட்டு . |
| தோத்திரித்தல் | புகழ்தல் . |
| தோதகத்தி | நீண்ட மரவகை ; வஞ்சகி ; கற்பொழுக்கமற்றவள் . |
| தோதகம் | வருத்தம் ; வஞ்சகம் ; சாலவித்தை ; கற்பு ஒழுக்கமின்மை . |
| தோதகமாடுதல் | தொந்தரவுபண்ணுதல் ; ஒழுக்கமற்றிருத்தல் . |
| தோதகன் | வஞ்சகன் ; ஒழுக்கமற்றவன் ; கடுகடுப்புள்ளவன் . |
|
|