முதல் - நகிலம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஓர் உயிர்மெய்யெழுத்து(ந்+அ) ; சிறப்பு ; மிகுதி , எதிர்மறைப் பொருள்களை உயர்த்தும் ஓர் இடைச்சொல் .
நக்கசாரணர் ஆடையின்றி வாழும் நாகர்சாதியினர் .
நக்கத்தனம் இவறல் , கடும்பற்றுள்ளம் .
நக்கபாரம் காண்க : நக்கவாரம் .
நக்கம் காண்க : நக்கனத்துவம் .
நக்கரம் முதலை .
நக்கரித்தல் நகர்ந்துசெல்லுதல் ; தவழ்தல் ; படுகிடையாதல் ; படுக்கையிற் புரண்டு கிடத்தல் .
நக்கல் நக்கியுண்ணும் பொருள் ; நக்கியுண்ணும் இளகம் ; சோறு ; எச்சில் ; உண்ணல் ; தீண்டுகை ; இவறலன் , உலோபி , சிரிப்பு ; ஏளனம் ; ஒளி ; படி .
நக்கவாலப்படுதல் மிக்க வறுமையடைதல் .
நக்கவாரப்பேச்சு நம்பிக்கையற்ற பேச்சு .
நக்கவாரம் வங்காளக்குடாக் கடலில் உள்ள ஒரு தீவு ; வறுமை .
நக்கவாரம்பிடித்தல் வறுமையாதல் .
நக்கவாரி நக்கவாரத் தீவினர் ; ரொக்க வணிகன் ; நம்பிக்கையற்ற வணிகன் ; குள்ளமானது ; மூன்று ஆண்டுகளில் காய்க்கும் தென்னைவகை .
நக்கன் அம்மணன் ; அருகன் ; சிவன் ; தேவதாசிகளின் சிறப்புப்பெயர் ; நரி .
நக்கனத்துவம் அம்மணம் .
நக்கனம் அம்மணம் .
நக்கி நக்கி உண்பவனான ஏழை ; இவறலன் , உலோபி ; ஆடை , திரை முதலியவற்றின் ஓரங்களில் அலங்காரமாக அமைக்கும் பின்னல் .
நக்கிதம் இரண்டு .
நக்கிரப்பலகை முதலை வடிவுள்ள காலால் தாங்கப்பட்ட பலகை .
நக்கிரம் காண்க : நக்கரம் ; மேல்வாயிற்படி .
நக்கிரா தேட்கொடுக்கிச்செடி .
நக்கினம் காண்க : நக்கணத்துவம் ; இறந்தவர் பொருட்டுச் செய்யும் முதல் சிரார்த்தம் ; பெண்குறி .
நக்கினிகை அம்மணமாயுள்ள பெண் ; பத்தாண்டுப் பருவத்தாள் .
நக்கு அம்மணம் .
நக்குணி ஒரு பாம்புவகை ; உணவுக்குத்திண்டாடுபவன் ; சிறுபிள்ளை .
நக்குதல் நாவாலெடுத்துண்ணுதல் ; தீண்டுதல் ; அழித்தல் ; சுடுதல் ; வறுமைப்படுதல் .
நக்குப்பொறுக்கி எச்சிற் பொறுக்கி உண்போன் .
நகக்கண் நகமும் விரலும் கூடும் இடம் .
நகக்கால் நகமும் விரலும் கூடும் இடம் .
நகக்காளான் தரையில் எறிந்த நகத்திலிருந்து முளைப்பதாகக் கருதப்படும் காளாண்வகை .
நகக்குத்தன் அம்பட்டன் .
நகக்குறி கலவிக்காலத்தில் மகளிர் உறுப்பில் ஆடவர் நகத்தால் பதிக்கும அறுவகை அடையாளங்கள் .
நகக்கிருதி புண்ணியம் ஏழனுள் அகங்காரம் இன்மை என்னும் குணம் .
நகச்சுற்று நகக்கண்ணில வரும் ஒரு புண்வகை .
நகச்சூடு இளஞ்சூடு .
நகடு உடல் வெளுக்கை .
நகதி ரொக்கக்காரன் ; பொன்கட்டி ; நிலத்தீர்வை ; கருவூலம் .
நகநந்தினி இமயமலையின் மகளான பார்வதி .
நகநோக்கி வேலிப்பருத்திக்கொடி .
நகப்புண் நகங்கீறுவதால் உண்டாகும் புண் .
நகம் மலை ; பூமி ; மரம் ; நாகணம் என்னும் மணப்பொருள் ; உகிர் ; பறவைநகம் ; விரல்உறை ; அடிக்குளம்பு ; பங்கு .
நகம்வெட்டி நகம் வெட்டும் கருவி .
நகமுகம் வில் .
நகர் நகரம் ; மாளிகை ; அரண்மனை ; கோயில் ; சடங்குசெய்யும் இடம் ; விழாக்கள் நிகழும் மண்டபம் ; மனைவி .
நகர் (வி) அசை ; பெயர் .
நகர்த்துதல் இடம்விட்டுப் பெயர்த்தல் ; சிறிது தள்ளுதல் ; காலம்கடத்தல் ; சிறுகச்சிறுககவர்தல் ; நன்றாகப் புடைத்தல் ; செவ்வையாய்ச் செய்தல் .
நகர்தல் ஊர்தல் ; தவழ்தல் ; மறைவாய்ப் போதல் .
நகரப்பதி தலைநகர் .
நகரப்பதிவாழ்நர் தலைநகரில் வாழ்வோர் ; நாகரிகமுள்ளோர் .
நகர்ப்புறம் புறநகர் .
நகர்படுதிரவியம் நகரத்தில் உண்டாகும் பொருள்களான கண்ணாடி , பித்தன் , கருங்குரங்கு , யானை , அரசன் என்பவை .
நகரசம் யானை .
நகரத்தார் நகரவாழ்நர் ; நாட்டுக்கோட்டைச் செட்டிமார் .
நகரம் பேரூர் ; அரண்மனை ; கோயில் ; வாழுமிடம் ; பறவை உகிர் ; உகிர் .
நகரமாந்தர் அரசர்க்குரிய எண்பெருந் துணைவருள் தலைமைபெற்ற நகர்வாழ்நர் .
நகரவிரம் மயில் .
நகரா பெருமுரசுவகை .
நகராமுசி ஈரல் .
நகரி நகரம் ; அரசுக்குரிய புறம்போக்கு ; வறட்சுண்டிச்செடி .
நகரிபகம் காகம் .
நகரூடம் மூக்கு .
நகரை பேய்நவரைமரம் ; ஓர் அரிசிவகை ; ஒரு மரவகை .
நகல் சிரிக்கை ; மகிழச்சி ; நட்பு ; ஏளனம் ; படி .
நகவிலோகம் நகக்கோடு .
நகழ்தல் நகர்ந்துசெல்லுதல் .
நகழ்வு துன்பம் ; ஆசனவகை .
நகளுதல் காண்க : நகழ்தல் ; நசுக்குண்ணுதல் .
நகாஅர் சிரிப்பில் தோன்றுவதான பல் .
நகாஅல் சிரிப்பு .
நகாசு நெற்றி ; காண்க : நகாசுவேலை .
நகாசுவேலை நகைகளில் செய்யப்படும் அலங்காரவேலை .
நகாயுதம் நகத்தை ஆயுதமாகக் கொள்ளுவதான சிங்கம் ; புலி ; பூனை .
நகாரி இந்திரன் .
நகில் முலை .
நகிலம் முலை .