நூ முதல் - நூற்புறத்திணை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நூ ஒர் உயிர்மெய்யெழுத்து (ந் +ஊ) எள் ; யானை அணிகலன் .
நூக்கம் உயரம் ; நூக்கமரம் ; தோதகத்திமரம் .
நூக்கல் நெய்வார் கருவியுள் ஒன்று .
நூக்கு காண்க : நூக்கம் .
நூக்குதல் தள்ளுதல் ; ஊசலாட்டுதல் ; அசைத்தல் ; தூண்டுதல் ; எறிதல் ; முறித்தல் ; நீக்குதல் ; பரிகாரம் செய்தல் ; சாத்துதல் .
நூங்கர் தேவர் .
நூங்கு பெருமை ; மிகுதி .
நூங்குதல் மிகுதியாயிருத்தல் .
நூடி சிற்றேலம் .
நூத்தல் நொதுத்தல் ; தளர்தல் ; அழித்தல் .
நூதல் அவிதல் .
நூதனம் புதுமை ; புதியது .
நூதனன் புதியவன் ; புதியதில் விருப்பமுடையவன் ; புதியதை உண்டாக்குபவன் .
நூப்பு தணிப்பு .
நூபம் எருது ; எருக்கஞ்செடி .
நூபுரம் பாதகிண்கிணி ; சிலம்பு .
நூர்த்தல் அவித்தல் ; ஆற்றுதல் .
நூர்தல் அவிதல் ; ஆறுதல் ; பதனழிதல் .
நூரல் அவிதல் ; ஆறுதல் ; பதனழிதல் .
நூல் பஞ்சிநூல் ; பூணூல் ; மங்கலநாண் ; எற்றுநூல் ; ஆண்குறியிலுள்ள நரம்பு ; ஆண்குறி ; ஆயுதவகை ; சாத்திரம் ; ஆகமம் ; ஒரு நாடக நூல் ; ஆலோசனை .
நூல்கேட்டல் பாடங்கேட்டல் .
நூல்சோர்த்தல் நூலைப் பதனிடுதல் .
நூல்பிடித்தல் சுவரொழுங்கு பார்க்க நூலைப் பிடித்தல் .
நூல்புடைத்தல் மரத்தின் நேர்மையறிய நூலால் தெறித்துக் குறியிடுதல் .
நூல்போடுதல் காண்க : நூல்புடைத்தல் ; நியாஞ்செய்தல் ; பூணூற் கலியாணஞ் செய்தல் .
நூல்போதல் கல்வியில் தேர்ந்தவன் ஆதல் ; கைம்பெண்ணாதல் .
நூல்யாப்பு தொகுத்தல் , விரித்தல் , தொகைவிரி , மொழிபெயர்ப்பு என நான்கு வகையாக இயற்றப்படும் நூலின் அமைப்பு ; ஒரு புடைவைவகை .
நூல்வல்லோர் கல்விமான்கள் ; அமைச்சர் .
நூல்வழக்கு செய்யுள் வழக்கு ; சாத்திரமுறை .
நூல்விடுதல் சிலந்தி முதலியன நூற்கூடு கட்டுதல் ; மனநிலையின் ஆழம் பார்த்தல் .
நூல்வெண்மாடம் காண்க : நூன்மாடம் .
நூலச்சு நெசவுக்கருவியின் உறுப்புவகை ; கம்பிச்சட்டம் .
நூலட்டவணை நூலின் பொருளடக்கம் ; நூலின் வகைகளைத் தொகுத்துரைக்கும் தொகுநூல் .
நூலவையார் அறநூலோதினோர் .
நூலறிபுலவர் அறநூல்கள் முதலியன உணர்ந்த அமைச்சர் .
நூலறிவு கல்வியறிவு .
நூலாக்கலிங்கம் நூற்கப்படாத நூலால் இயன்ற ஆடை , பட்டாடை .
நூலாசிரியன் நூலாக்கியோன் .
நூலாம்படை ஒட்டடை .
நூலாம்பூச்சி சிலந்திப்பூச்சி .
நூலார் கற்றோர் .
நூலிழத்தல் கைம்மையடைதல் .
நூலிழந்தாள் கைம்பெண் .
நூலிழை ஓரிழைநூல் .
நூலிழைத்தல் கதிரிலுள்ள நூலை எடுத்துச் சுற்றுதல் ; நூல்நூற்றல் .
நூலுண்டை நூல் சுற்றிய உண்டை ; நெய்தற்குரிய நூல் சுற்றின குற்றி .
நூலூரைப்போர் ஆசிரியர் .
நூலுறிஞ்சி நெய்வார் கருவியுள் ஒன்று ; நெய்வோன் .
நூலெச்சம் நூலுரைவகை .
நூலெடுத்தல் நூல் விலைக்கு வாங்குதல் ; நூலைச் சிக்கெடுத்தல் .
நூலேணி கயிற்றினால் அமைந்த ஏணி ; பாய்மரத்து ஏணி ; கடல்மீன்வகை .
நூலோட்டுதல் பெருந்தையலிடுதல் .
நூலோடுதல் நெசவுப் பாவோடுகை .
நூலோர் நூலாசிரியர் ; கற்றோர் ; அமைச்சர் ; பார்ப்பனர் .
நூவு எள் .
நூவுதல் நீர்பாய்ச்சுதல் .
நூவுநெய் நல்லெண்ணெய் .
நூழல் நூறல் , அழித்தல் .
நூழில் கொன்றுகுவிக்கை ; மிடைந்த போர் ; வீரனொருவன் பகைமன்னர் சேனையைக் கொன்று தன் வேலைத் திரித்து ஆடுதலைக் கூறும் புறத்துறை ; கொள்ளையடித்தோர் மக்களைக் கொன்றுகுவிக்கும் இடம் ; குவிதல் ; கொடிப்பிணக்கு ; ஒரு கொடிவகை ; கொடிக்கொற்றான் ; திரை ; யானை ; தொளை ; செக்கு .
நூழிலர் வணிகர் .
நூழிலாட்டு கொன்றுகுவித்தல் ; வீரனொருவன்தன் மெய்யில் தைத்த படை பறித்து மாற்றார் மேல் எறிதல் .
நூழிலாட்டுதல் கொன்றுகுவித்தல் .
நூழை சிறுவாயில் ; துளை ; சன்னல் ; குகை ; நுண்மை .
நூழைவாயில் சுருங்கைவழி .
நூற்கருத்து நூற்பொருள் .
நூற்கழி நூற்பந்து ; நூல் சுற்றிய கழி .
நூற்கிரந்தம் சாத்திரம் .
நூற்குற்றம் குன்றக்கூறல் , மிகைபடக் கூறல் , கூறியது , கூறல் , மாறுக்கொளக் கூறல் , வழூஉச்சொற் புணர்த்தல் , மயங்கவைத்தல் , வெற்றெனத் தொடுத்தல் , மற்றொன்று விரித்தல் , சென்றுதேய்ந்திறுதல் , நின்று பயனின்மை என்னும் பத்து வகைப்பட்ட நூலின்கண் அமையலாகாக் குற்றங்கள் .
நூற்படுகு நூற்பாவு .
நூற்பயன் நூலால் எய்தும் பயன் .
நுற்பழக்கம் கல்விப்பயிற்சி .
நூற்பா காண்க : நூற்பாவகவல் ; தறியிற் பிணைக்கும் பாவு .
நூற்பாவகவல் இலக்கணம் முதலியன அமைதற்குரிய அகவல்வகை ; சூத்திர யாப்பு .
நூற்புலமை புத்தக அறிவு .
நூற்புறத்திணை ஆகமத்தால் அமைந்த துணிபுரை .