நெ முதல் - நெட்டிலிங்கம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
நெ ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+ எ) .
நெக்கல் தளர்ந்தது ; அறக்கனிந்தது ; அழுகல் .
நெக்கு தள்ளு ; நெகிழ்ச்சி ; உடைபடல் .
நெக்குடைதல் காண்க : நெக்குருகுதல் .
நெக்குதல் கிளப்புதல் ; துரத்தியடித்தல் ; கூட்டம் நெருக்குதல் ; கோலிக்கொட்டுதல் .
நெக்குருகுதல் இளகுதல் .
நெக்குரோதம் ஆலமரம் .
நெக்குவிடுதல் பிளவுபடுதல் ; பொருத்துவாய் விடுதல் .
நெகல் நெகிழ்தல் , தளர்தல் ; கனிதல் .
நெகிடி நெருப்புக்குவை .
நெகிழ்ச்சி காதில்வரும் புண்கட்டி , எழுச்சி ; தளர்ச்சி ; மனமிரங்குகை .
நெகிழ்த்தல் தளர்த்துதல் ; மலர்த்துதல் ; பிரித்தல் ; நசுக்குதல் ; எய்தல் .
நெகிழ்தல் குழைதல் ; மெலிதல் ; பொசிதல் ; பொடியாதல் ; மலர்தல் ; இளகல் ; கட்டுத் தளர்தல் ; மனமிரங்குதல் ; நிலைகுலைதல் ; நழுவல் ; விட்டுநீங்குதல் .
நெகிழ்ப்பு குழைவு .
நெகிழ்வு பிரிவு ; தளர்வு ; மலர்தல் .
நெகிழம் பாதச்சிலம்பு .
நெகிழி பாதச்சிலம்பு ; கொள்ளிக்கட்டை .
நெகுதல் கரைதல் ; உருகுதல் ; மனமிரங்குதல் ; வருந்துதல் ; கழலுதல் ; கெடுதல் ; பொடியாதல் .
நெச்சி காண்க : கடுக்காய் .
நெசவு நெசவுத்தொழில் ; நெசவின் இழையமைப்பு .
நெஞ்சகம் மனம் .
நெஞ்சடித்தல் அச்சம் முதலியவற்றால் இதயம் படபடக்கை .
நெஞ்சடைத்தல் மார்படைப்பு .
நெஞ்சடைப்பான் மாட்டுநோய்வகை .
நெஞ்சடைப்பு மார்படைப்பு ; பொதி பறியாமற் செய்யும் பயிர்நோய் .
நெஞ்சம் காண்க : நெஞ்சு ; அன்பு .
நெஞ்சழிதல் மதிமயங்கல் ; மனம்குலைதல் ; தன்னடக்கங் கெடுதல் .
நெஞ்சறிசுட்டு சொல்லாற் குறியாது மனத்திலுள்ள பொருளைக் குறிக்கவருஞ் சுட்டு .
நெஞ்சறிவுறுத்தல் மனத்துக்கறிவித்தல் .
நெஞ்சன் துணிவுடையோன் ; செருக்குள்ளவன் .
நெஞ்சாங்கட்டை மார்பெலும்பு , நெஞ்செலும்பு ; பிணஞ்சுடுவதற்கு நெஞ்சுப்பக்கமாக வைக்குங் கட்டை .
நெஞ்சாங்குலை ஈரற்குலை ; மார்பு ; இதயம் ; மார்புக்குழி .
நெஞ்சாங்குழி தொண்டைக்குழி .
நெஞ்சார மனமார .
நெஞ்சாறல் துன்பம் .
நெஞ்சிற்கல் கவலை ; துன்பம் .
நெஞ்சிற்பாரம் தாங்கமுடியாத பொறுப்பு ; துன்பம் .
நெஞ்சு மனம் ; இதயம் ; மார்பு ; நடு ; திண்ணக்கம் ; தொண்டை ; துணிவு .
நெஞ்சுக்குத்து மார்புவலி .
நெஞ்சுகரித்தல் தொண்டை கரகரக்கை ; பொறாமைகொள்ளுகை .
நெஞ்சுகலத்தல் ஒருவனோடு கலந்தாய்தல் ; மனமொன்றுபடுதல் .
நெஞ்சுகாய்தல் நெஞ்சு வறளுகை ; மனஞ் சோர்கை .
நெஞ்சுச்சளி நெஞ்சிற் கபமுண்டாக்கும் நோய்வகை .
நெஞ்சுத்தடுமன் நெஞ்சிற் கபமுண்டாக்கும் நோய்வகை .
நெஞ்சுத்துடிப்பு இதயமடிக்கை .
நெஞ்சுத்துணிகரம் மனவுறுதி .
நெஞ்சுத்துணிவு மனவுறுதி .
நெஞ்சுதுடித்தல் இதயந்துடிக்கை ; மனமிரங்குதல் .
நெஞ்சுப்புண் தொண்டைப்புண் .
நெஞ்சுபதறுதல் மனநடுங்குதல் .
நெஞ்சுபுண்ணாதல் மனநோதல் ; தொண்டை புண்ணாதல் .
நெஞ்சுரப்பு மனக்கடுமை .
நெஞ்சுரம் மனக்கடுமை ; மனவூக்கம் ; தடித்தனம் .
நெஞ்சுருகுதல் மனமிளகுதல் .
நெஞ்சுவலி மார்புவலி .
நெஞ்சுவிடுதூது ஒரு நூல் ; மனத்தைக் காதலர்பால் தூதுவிடுவதாக அதனை முன்னிலைப்படுத்திக் கூறும் சிற்றிலக்கியவகை .
நெஞ்சுள் மனம் .
நெஞ்சுளுத்தல் மனமுரிதல் .
நெஞ்சுறைப்பு மனக்கடுமை ; துணிவு .
நெஞ்செரிச்சல் பொறாமை .
நெஞ்செரிதல் கோபத்தால் மனங்கொதித்தல் ; பொறாமைப்படல் .
நெஞ்சைப்பிளத்தல் துன்பம் முதலியன மனத்தை வருத்துதல் .
நெஞ்சோர்மம் நெஞ்சுத்துணிவு .
நெட்டங்கம் செருக்கு ; செருக்கினாற் பழித்துரைக்கும் மொழி .
நெட்டநெடுமை மிகுநீளம் .
நெட்டம் நெடுமை ; செங்குத்து ; மிளகு .
நெட்டாங்கு செங்குத்து ; நீளவாட்டு ; காண்க : நெட்டங்கம் ; அழகுகாட்டுகை ; வடமுனை தென்முனைகளைத் தொடும் நெடுக்குக்கோடு , தீர்க்கரேகை .
நெட்டாயம் நெட்டைக்குத்தாகச் செங்கல் அடுக்கும் முறை .
நெட்டி உடற்பொருத்து ; எலும்பு ; சுடக்கு ; சோம்பல் ; ஒரு புல்வகை .
நெட்டிசை விருத்தப்பாவில் நீண்டொலிக்கும் இசை .
நெட்டிடை நெடுந்தொலைவு .
நெட்டிமுறித்தல் சோம்பல் முறித்தல் ; சுடக்கெடுத்தல் ; வருத்துதல் .
நெட்டியெடுத்தல சோம்பல் முறித்தல் ; சுடக்கெடுத்தல் ; வருத்துதல் .
நெட்டில் மூங்கில் .
நெட்டிலிங்கம் அசோகமரம் .