முதல் - ஆகந்துகசுரம் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆக்கெளுத்தி கெளிற்று மீன்வகை ; கடல் கெளிற்றுவகை .
ஆக்கேபம் காண்க : ஆட்சேபம் .
ஆக்கை யாக்கை ; உடம்பு ; நார் .
ஆக்கையிலி காண்க : அனங்கன் .
ஆக்கொத்துமம் காண்க : சரக்கொன்றை .
ஆக்கொல்லி ஒரு புழு ; தில்லைமரம் .
ஆக்ஞை ஆணை .
ஆக்வானம் தேவதைகளை வேண்டி அழைக்கை .
ஆக மொத்தமாய் ; முழுவதும் ; அவ்வாறாக ; விகற்பப் பொருள் தரும் இடைச்சொல் ; நான்காம் வேற்றுமை உருபுடன் வரும் துணைச்சொல் ; செய்தி குறிக்கும் இடைச்சொல் ; முற்றோடு சேர்ந்து செயவென் எச்சப் பொருள் தரும் இடைச்சொல் ; ஓர் அசைச்சொல் .
ஆகக்கூடி ஆகவே ; மொத்தத்தில் .
ஆகக்கொள்ள ஆகையால் .
ஆகச்செய்தே ஆகவே .
ஆகசி திப்பிலி .
ஆகசு தவறு ; இழிந்தது ; பாவம் .
ஆகட்டு ஆகட்டும் என்னும் பொருளில் வரும் சொல் .
ஆகட்டும் ஆம் ; ஆகுக .
ஆகடியம் பரிகாசம் ; பொல்லாங்கு .
ஆகண்டலன் இந்திரன் .
ஆகத்தினெய் புருவநடு .
ஆகதம் கமகம் பத்தனுள் ஒன்று ; கந்தை ; பெருக்கிவந்த தொகை ; பொய் ; அடிக்கை ; வருகை .
ஆகதர் சமணர் .
ஆகதி அடையவேண்டியது .
ஆகந்துகசுரம் அருந்துகின்ற உணவு நிமித்த மாயல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால் உண்டாகும் சுரவகை .
ஆக்கஞ்செப்பல் தன் நெஞ்சில் வருத்தம் மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை .
ஆக்கணாங்கெளிறு கெளிற்று மீன்வகை .
ஆக்கதம் முதலை .
ஆக்கந்திதம் குதிரை நடைவகையுள் ஒன்று .
ஆக்கப்பாடு பேறு .
ஆக்கப்பெயர் காரணக் குறியினாலாவது இடு குறியினாலாவது இடையில் ஆக்கப்பட்ட பெயர் ; மரபுவழிப் பெயருக்கு மாறுபட்டது .
ஆக்கப்பெருக்கம் வருமானம் .
ஆக்கப்பொருள் ஆகுபெயர்ப் பொருள் .
ஆக்கம் காண்க : ஆக்கக்கிளவி ; அமைத்துக் கொள்ளுகை ; கைகூடுகை ; உண்டுபண்ணுகை ; படைப்பு ; செல்வம் ; பொன் ; பெருக்கம் ; இலாபம் ; ஈட்டம் ; கொடிப்படை ; திருமகள் ; மங்களகரம் ; வாழ்த்து .
ஆக்கமகள் திருமகள் .
ஆக்கர் படைக்கப்பட்ட தேவர் ; திரிந்து கொண்டே துணி முதலியவை விற்போன் ; துறப்பணம் .
ஆக்கரிவாள் அறுவாள்வகை ; தோட்டவேலைக்குதவும் கத்தி .
ஆக்கல் காண்க : ஆக்குதல் .
ஆக்கவினை வளர்ச்சிப்பணி ; ஆக்கத்தால் வரும் வினைச்சொல் .
ஆக்கவினைக்குறிப்பு ஆக்கச் சொல்லைக் கொண்டிருக்கும் வினைக்குறிப்புச் சொல் .
ஆக்கவும்மை சொல்லின் பொருள் பிறிதொன்று மாயிருத்தலைக் குறிப்பிடும் 'உம்' இடைச்சொல் ; பாலுமாயிற்று எனின் அதுவே மருந்துமாயிற்று என்பதைக் குறிப்பது போல்வது .
ஆக்கன் செயற்கையானது .
ஆக்காட்டுதல் வாயைத்திறத்தல் .
ஆக்கியரிவாள் வெற்றிலைக் காம்பறியும் கத்தி .
ஆக்கியாதம் சொல்லப்பட்டது ; அறிவிக்கப்பட்டது ; வினைச்சொல் .
ஆக்கியானம் கட்டுக்கதை ; வெளிப்படுத்துதல் ; பேசுதல் .
ஆக்கியோன் படைத்தோன் ; நூல்செய்தவன் .
ஆக்கிரகம் விடாப்பிடி ; கடுஞ்சினம் ; கைக்கொள்ளுகை ; கட்டாயம் ; அருளுகை .
ஆக்கிரகாயணி புது நெல்லைக்கொண்டு மிருகசீரிடப் பூரணையில் செய்யப்படும் ஒருவகை ஓமம் ; மார்கழி மாத மதிநிறை நாள் ; மிருக சீரிடம் .
ஆக்கிரகித்தல் பலவந்தமாயெடுத்தல் ; வெல்லல் .
ஆக்கிரந்திதம் குதிரை நடைவகை ஐந்தனுள் ஒன்றான விரைவு நடை .
ஆக்கிரமணம் வலிந்து கவர்கை .
ஆக்கிரமம் அடைதல் ; கடந்துபோதல் ; மேலெழுச்சி ; வீரம் .
ஆக்கிரமித்தல் வலிந்து கவர்தல் ; உள்ளே அடக்கிக்கொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் .
ஆக்கிராணப்பொடி மூக்குத்தூள் .
ஆக்கிராணம் மோந்துபார்க்கை ; மூக்கு ; மூக்கில் இடும் மருந்துப்பொடி .
ஆக்கிராணித்தல் மோத்தல் .
ஆக்கிராந்தம் கைக்கொள்ளப்பட்டது ; பாரமேற்றப்பட்டது ; மறைக்கப்பட்டது ; மேலிடப்பட்டது ; வெல்லப்பட்டது .
ஆக்கினாசக்கரம் சக்கரம்போல் எங்கும் சுழலும் அரசன் ஆணை .
ஆக்கினாசத்தி அரசனாணையின் வன்மை .
ஆக்கினாபங்கம் ஆணை மீறுகை .
ஆக்கினேயம் அக்கினிக்குரியது ; தென்கீழ்த்திசை ; காண்க : ஆக்கினேயாத்திரம் ; ஆக்கினேய புராணம் ; சிவாகமத்துள் ஒன்று ; திருநீறு .
ஆக்கினேயாத்திரம் அக்கினியைத் தேவதையாகக் கொண்ட அம்பு .
ஆக்கினை தண்டனை ; கட்டளை ; கட்டைவிரல் .
ஆக்கினைப்பத்திரம் அரசனது எழுத்து மூலமான கட்டளை .
ஆக்கு படைப்பு .
ஆக்குத்தாய் அநீதியாய் .
ஆக்குதல் செய்தல் ; படைத்தல் ; சமைத்தல் ; அமைத்துக்கொள்ளுதல் ; மாற்றுதல் ; உயர்த்துதல் .
ஆக்குப்புரை சமையற் பந்தல் .
ஆக்கும் போலும் .
ஆக்குரோசம் கடுஞ்சினம் .
ஆக்குவயம் பெயர் .
இரண்டாம் உயிரெழுத்து ; குரலிசையின் எழுத்து ; பெற்றம் ; மரை ; எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் ; இடபம் ; ஆன்மா ; காண்க : ஆச்சா ; விதம் ; ஆகுகை ; ஆவது ; ஓர் இரக்கக்குறிப்பு ; வியப்புக்குறிப்பு ; இகழ்ச்சிக்குறிப்பு ; புழுக்கக்குறிப்பு ; நினைவுக்குறிப்பு ; ஈற்றில் வரும் வினாவிடைச்சொல் ; எதிர்மறையைக் குறிக்கும் சாரியை ; எதிர்மறை இடைநிலை ; பலவின்பால் எதிர்மறை வினைமுற்று விகுதி ; உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி ; தொடங்கி அல்லது வரையும் எனப் பொருள் தரும் ஒருவடமொழி இடைச்சொல் .
ஆஅ வியப்பு , இரக்கம் , அவலம் இவற்றின் குறிப்பு .
ஆக்கக்கிளவி ஆக்கம் உணர்த்தும் சொல் ; செயற்கையை உணர்த்தும் ஆயினான் ; ஆயினாள் முதலியனவாய் வழங்கும் சொல் .
ஆக்கங்கூறுதல் வாழ்த்துதல் .
ஆக்கச்சொல் காண்க : ஆக்கக்கிளவி .