பீ முதல் - பீதிகை வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
பீ ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஈ) ; மலம் ; தொண்டிமரம் ; அச்சம் ; பெருமரம் .
பீக்கம் எட்டிக்கொட்டை .
பீக்கருவேல் ஒரு வேலமரவகை ; காண்க : உடைவேல் .
பீக்கலாட்டம் தடை ; தொந்தரவு .
பீக்கலாத்தி காண்க : சங்கங்குப்பி .
பீக்கை இலேசானது ; பசளைக்கீரை ; பீச்சாங்குழல் .
பீகம் பெருமாட்டி ; உயர்ந்த நிலையிலுள்ள முகமதியப் பெண் ; பூட்டுவகை ; திறவுகோல் .
பீங்கான் ஒரு மட்பாண்டவகை .
பீச்சல் வயிற்றுக்கழிச்சல் ; பீச்சுகை .
பீச்சாக்கத்தி எழுத்தாணி அமைந்த கைப்பிடியுள்ள கத்தி ; ஒரு நீண்ட கத்திவகை .
பீச்சாங்கட்டி உலோகக்கட்டி .
பீச்சாங்கத்தி காண்க : பீச்சாக்கத்தி .
பீச்சாங்குழல் நீர் முதலியவற்றைப் பீச்சும் கருவி .
பீச்சாங்கை இடக்கை .
பீச்சாங்கொள்ளி அச்சமுடையோன் .
பீச்சுதல் நீர்மப் பொருளைக் கருவிமூலம் வெளியேற்றுதல் ; மலங்கழிதல் .
பீச்சுவிளாத்தி காண்க : சங்கங்குப்பி ; விளாமரம் .
பீச்சைக்கால் இடக்கால் .
பீசகணிதம் இயற்கணிதம் .
பீசகோசம் பூவில் விதையுள்ள இடம் .
பீசநியாயம் காண்க : பீசாங்குரநியாயம் .
பீசபூரம் மாதுளை .
பீசம் விதை ; மூலம் ; அண்டவிதை ; சுக்கிலம் ; வழித்தோன்றல் ; காண்க : பீசாட்சரம் ; தாமரைத்தண்டு .
பீசம்வாங்குதல் விதையடித்தல் .
பீசாங்குரநியாயம் காரணகாரியம் இதுவதுவென முன்பின் வரையறுக்கப்படா வழக்கு .
பீசாட்சரம் மந்திரத்தின் சிறப்பெழுத்து .
பீசி விதையையுடையது ; பூவில் விதையுள்ள இடம் .
பீஞ்சல் காண்க : சங்கங்குப்பி .
பீட்கன்று கீழ்க்(ங்)கன்று .
பீட்டகம் தொழில் , உத்தியோகம் .
பீட்டன் இரண்டாம் பாட்டன் ; இரண்டாம் பேரன் ; பாட்டன் ; குதிரைவண்டிவகை .
பீட்டி பாட்டி ; உடுப்பில் இரட்டையாக இணைக்கப்பட்ட மார்பின்துணி .
பீட்டை பயிரின் இளஞ்சூல் ; முதல் அறுவடையின் பின்னுள்ள பயிரின் இளங்கதிர் .
பீடணம் அச்சம் .
பீடணி குழந்தைகளுக்கு நோயை உண்டாக்கும் தேவதை .
பீடபூமி உயரமான அகன்ற நிலப்பகுதி .
பீடம் இருக்கை ; அரியணை ; பலிபீடம் ; விக்கிரகபீடம் ; மேடை ; மலவாய் ; குறைவட்டத்தின் எஞ்சிய பாகம் .
பீடர் பெருமையுடையவர் .
பீடரம் கோயில் .
பீடனம் வருத்தம் ; துன்புறுத்தல் .
பீடிகை பீடம் ; பூந்தட்டு ; தேர்த்தட்டு ; அரியணை ; கடைத்தெரு ; முகவுரை ; அணிகலச் செப்பு ; முனிவர் இருக்கை .
பீடிகைத்தெரு கடைவீதி .
பீடித்தல் துன்புறுத்தல் .
பீடிப்பு துன்பம் .
பீடு பெருமை ; வலிமை ; தரிசுநிலம் ; தாழ்வு ; துன்பம் ; குறைவு ; ஒப்பு ; குழைவு .
பீடை துன்பம் ; காலம் , கோள் முதலியவற்றால் நிகழுந் தீமை .
பீடைமாதம் மார்கழிமாதம் .
பீத்தல் காண்க : பீற்றல் ; தற்பெருமைப் பேச்சு .
பீத்து தற்பெருமைப் பேச்சு .
பீத்துதல் வீண்பெருமை பேசுதல் .
பீத்தை நாடா .
பீத்தோல் மேல்தோல் .
பீதகம் பொன்னிறம் ; பொன் ; பொன்னரிதாரம் ; மஞ்சள் ; இருவேரி ; துகில்வகை ; தேன் ; பித்தளை ; ஒரு சாந்துவகை .
பீதகவாடை பொன்னாலான ஆடை ; பொற்சரிகையுள்ள ஆடை .
பீதகன் வியாழன் .
பீதகாட்டம் செஞ்சந்தனக் கட்டை .
பீதகாரகம் வேங்கைமரம் ; சந்தனம் ; செவ்வள்ளி .
பீதகாவேரம் மஞ்சள் ; பித்தளை .
பீதகி அரிதாரம் .
பீதசாரம் காண்க : பீதகாரகம் .
பீதசாலம் வேங்கைமரம் ; சந்தனம் .
பீதத்துரு காண்க : மரமஞ்சள் .
பீததுண்டம் சிச்சிலி .
பீதபீசம் வெந்தயம் .
பீதம் ஒரு சாந்துவகை ; பொன் ; பொன்னிறம் ; மஞ்சள் ; கத்தூரி ; இருவேரி ; குடிக்கை ; அரிதாரம் ; அச்சம் ; பருமை ; நேரம் ; நீர் ; பன்றி ; எலி .
பீதராகம் தாமரை நூல் ; பொன்மை .
பீதரோகிணி ஒரு மருந்துச் செடிவகை .
பீதலகம் பித்தளை .
பீதவண்ணம் கடுக்காய் .
பீதன் அஞ்சுபவன் ; குடிப்பவன் ; சூரியன் .
பீதாம்பரம் காண்க : பீதகவாடை .
பீதாம்பரன் பொன்னாடை அணிந்த திருமால் .
பீதாம்பரி பார்வதி .
பீதி அச்சம் ; நோவுசெய்யும் நோய் ; குடிக்கை ; மதுக்கடை .
பீதிகை செம்மல்லிகை .