சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பே | ஓர் உயிர்மெய்யெழுத்து (ப் + ஏ) ; நுரை ; அச்சம் ; மேகம் ; 'இல்லை' என்னும் பொருள் தரும் சொல் . |
பேகணித்தல் | மனங்கலங்குதல் ; நிறம் வேறுபடுதல் . |
பேகணிப்பு | துயரம் ; நிறம் வேறுபடுகை . |
பேகம் | தவளை ; மேகம் ; உயர்ந்த நிலையிலுள்ள முகமதியப் பெண் . |
பேகன் | கடையேழு வள்ளலுள் ஒருவன் ; ஆண் தவளை . |
பேகி | பெண்தவளை . |
பேச்சடைப்பு | பேசமுடியாமற் செய்யும் நோய் . |
பேச்சழிதல் | சொன்னசொல் தவறுதல் . |
பேச்சற்றவன் | பேசமாட்டாதவன் ; பேசாநோன்பு பூண்டவன் ; வாக்குறுதி இல்லாதவன் . |
பேச்சறுதி | ஒப்பந்தத்தில் முடிவான பேச்சு . |
பேச்சாட்டுத்துணை | பேச்சுக்குத் துணையானவன் . |
பேச்சாளி | பேச்சில் வல்லவன் ; சொல் உறுதியுள்ளவன் . |
பேச்சு | பேசுதல் ; சொல் ; மொழி ; புகழ் ; உரையாடல் ; செய்தி ; வதந்தி ; கட்டுரை . |
பேச்சுக்காரன் | சொல்வன்மையுடையவன் ; வாயாடி . |
பேச்சுக்கிடம் | பேசுமுரிமை ; பழிக்குக் காரணம் . |
பேச்சுக்கொடுத்தல் | இரகசியமறிய வார்த்தையாடுதல் ; பேச்சு வளர்த்தல் ; பொழுது போக்காக வார்த்தையாடுதல் . |
பேச்சுத்தட்டுதல் | சொல் தடுமாறுதல் ; வாக்குத் தவறுதல் ; பிறர் சொல்லை மறுத்தல் . |
பேச்சுத்தடுமாறுதல் | சொல் குழறுதல் ; வாக்குத் தவறுதல் . |
பேச்சுத்தாராளம் | வெறும் வாய்ச்சொல் ; சொல்வன்மை ; பேச்சுத்திறம் . |
பேச்சுத்துணை | பேசிப் பொழுதுபோக்குதற்குத் துணையாக இருக்கும் ஆள் . |
பேச்சுப்பிடுங்குதல் | சொல்லாடி இரகசியத்தை அறிதல் . |
பேச்சுமூச்சில்லாமை | அமைதி ; அடங்கியிருக்கை . |
பேச்சுவளர்த்தல் | நீண்ட உரையாடல் ; வாய்ச் சண்டையில் வசவு மிகுகை . |
பேச்சுவார்த்தை | உரையாடல் ; வாக்குவாதம் ; நட்பு . |
பேசகம் | ஆந்தை ; கூகை ; முகில் ; யானை வாலினடி ; யானை வால்நுனி ; வாயில் . |
பேசகி | காண்க : பென்னை . |
பேசங்கை | மலங்கழிக்கை . |
பேசல் | பேசுதல் ; வஞ்சினமுடித்தல் . |
பேசலம் | மரகதக் குணங்களுள் ஒன்று . |
பேசாதபேச்சு | அவையில் பேசத்தகாத சொல் ; தகுதியற்ற சொல் . |
பேசாநிலை | மோனநிலை . |
பேசாமை | மௌனம் . |
பேசார் | ஊமைகள் . |
பேசாவெழுத்து | காண்க : பெருவெழுத்து . |
பேசி | இடியேறு ; உடை ; முட்டை ; தசை ; நரம்பு ; பூமொட்டு . |
பேசிலம் | காண்க : பேசகி . |
பேசுதல் | சொல்லாடுதல் ; வஞ்சினமுடித்தல் ; வீணை நரம்பு முதலியன இசைத்தல் ; சத்தமிடுதல் ; சொல்லுதல் ; பலமுறை சொல்லுதல் ; நாடி முதலியன துடித்தல் ; துதித்தல் ; செயலைப் பேசி முடிவுசெய்தல் . |
பேசும்எழுத்து | 'நமசிவாய' என்பதில் சத்தியைக் குறிக்கும் 'வ' என்னும் எழுத்து . |
பேட்டி | பெரியோரை நேர்காணல் . |
பேட்டு | பட்டைக்கரை ; சரடு . |
பேட்டை | நகரத்தருகில் சந்தை கூடுமிடம் ; புறநகர் ; பயணவண்டி முதலியன தங்கும் இடம் . |
பேட்பு | விருப்பம் ; பெருமை . |
பேடகம் | பெட்டகம் ; பெட்டி ; கூடை ; திரள் ; ஒரு கூத்துவகை ; ஒரு துகில்வகை . |
பேடணம் | அரைத்துப் பொடிசெய்தல் ; திரிகைக்கல் . |
பேடம் | தெப்பம் ; வெள்ளாடு . |
பேடன் | ஆண்தன்மை மிகுந்த அலி . |
பேடாடல் | கூத்துவகை . |
பேடி | பெண்தன்மை மிகுந்த அலி ; வீரியமின்மை ; நடுவிரல் ; அச்சம் . |
பேடிகை | கூடை ; உறை . |
பேடிசம் | மாய்மாலம் . |
பேடு | பெண்தன்மை மிகுந்த அலி ; கூத்துவகை ; பெண்பால் ; பறவையின் பெண் ; விலங்குகளின் பெண் ; ஊர் ; சிறுமை ; நடுவிரல் ; உள்ளீடின்றிப் பயனற்றது . |
பேடை | பறவையின் பெண் ; கூடை . |
பேண் | விருப்பம் ; பாதுகாப்பு ; காண்க : பேண்மரம் . |
பேண்மரம் | துலாத்தாங்கும் மரம் . |
பேணகம் | பலகாரவகை . |
பேணம் | பேணுதல் ; மதிப்பு ; பதனம் . |
பேணல் | பேணுதல் ; மிகுவிருப்பம் ; மிகுதல் ; கருதுதல் . |
பேணலர் | காண்க : பேணார் . |
பேணலார் | காண்க : பேணார் . |
பேணாமாக்கள் | திக்கற்றோர் . |
பேணாமை | பகைமை . |
பேணார் | பகைவர் . |
பேணி | ஒரு பணிகாரவகை . |
பேணியார் | விரும்பப்பட்டோர் . |
பேணுதல் | போற்றுதல் , உபசரித்தல் ; ஒத்தல் ; மதித்தல் ; விரும்புதல் ; பாதுகாத்தல் ; வழிபடுதல் ; பொருட்படுத்துதல் ; ஓம்புதல் ; அலங்கரித்தல் ; கருதுதல் ; குறித்தல் ; உட்கொள்ளுதல் ; அறிதல் . |
பேணுநர் | பாதுகாப்பவர் . |
பேத்தி | பேர்த்தி ; பேயத்தி . |
பேத்துதல் | காண்க : பிதற்றுதல் . |
பேத்துவம் | அமுதம் ; நெய் . |
பேத்தை | ஒரு மீன்வகை ; வயிற்றுவீக்கம் ; பல்வீக்கம் . |
பேதகம் | மனவேறுபாடு ; தன்மை வேறுபாடு ; வஞ்சனை . |
பேதகம்பண்ணுதல் | வேற்றுமை காட்டுதல் ; நட்புக்குலைத்தல் . |
பேதகன் | கருத்து வேறுபட்டவன் ; கலப்புச்சாதியான் . |
பேதப்படுதல் | வேற்றுமைப்படுதல் ; மயங்குதல் . |
பேதம் | வேறுபாடு ; மனமாறுகை ; விகற்பம் ; திரிபு ; இணக்கமின்மை ; பிறிதொன்றற்கில்லாத ஏற்றம் ; பகுப்பு ; நால்வகைச் சூழ்ச்சியுள் ஒருவருக்கொருவர் பகையுண்டாக்கும் நெறி ; சுகதபேதம் , சுசாதிபேதம் , விசாதிபேதம் எனும் மூன்றுவகை வேறுபாடு . |
![]() |
![]() |