போ முதல் - போசர் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
போ ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+ஒ) ; ஓர் அசைச்சொல் ; தெரிநிலை வினைப்பகுதி .
போக்கடி இழக்கை ; மாற்று ; பொருளாதரவு ; தன்விருப்பு ; புகல் ; வாய்ப்பு .
போக்கடித்தல் இழத்தல் ; வீணாக்குதல் ; விலக்குதல் ; போகச்செய்தல் .
போக்கடியறுதல் கதியில்லையாதல் ; செயலறுதல் .
போக்கணம் இலச்சை ; கட்டுச்சோறு ; புகல் .
போக்கம் பொலிவு .
போக்கறுதல் குற்றம் நீங்குதல் ; கதியறுதல் .
போக்கறுவான் போக்கிடமில்லாதவன் .
போக்கன் வழிச்செல்வோன் ; பரதேசி ; பயனற்றவன் ; கொடியன் .
போக்காடு பாவம் போக்கலுக்காகக் காட்டுக்குப் போகவிடப்படும் ஆட்டுக்கடா ; சாவு .
போக்காளி இளமையில் இறந்தவர் ; உதவாதவன் .
போக்கி பின்பு ; தவிர ; பரதேசி .
போக்கிடம் ஒதுக்கிடம் ; புகலிடம் .
போக்கியதார் அனுபவ ஒற்றிக்காரன் .
போக்கியப்பொருள் நுகர்ச்சிக்குரிய பண்டம் .
போக்கியம் இன்பநுகர்வுக்குரியது ; கருமானுபவம் ; செல்வம் ; ஒற்றியுரிமையின் வருவாய் ; ஒற்றியுரிமை ; கன்மமலத்துள் ஒன்று ; செலவு செய்யும் பொருள் .
போக்கியல் கலிப்பா உறுப்புகளுள் ஒன்றாகிய சுரிதகம் .
போக்கிரி கொடியவன் .
போக்கிலி கதியற்றவன் ; கொடியவன் .
போக்கு போகச்செய்கை ; வழி ; சுரங்கவழி ; நடை ; மீட்சி ; புகல் ; இடம் ; நிலத்தின் தரம் ; மனச்சாய்வு ; விருப்பம் ; சாக்கு ; பழக்கம் ; நடைமுறை ; ரீதி ; காண்க : போக்கியல் ; நீர் முதலியவற்றின் ஓட்டம் ; மலம் முதலியன வெளிப்படுகை ; கேடு ; செலவு ; இறப்பு ; குற்றம் ; கழிப்புக்கழிக்கை ; மரக்கன்று ; செல்லுகை .
போக்குக்காட்டுதல் வழிகாட்டுதல் ; சாக்குச்சொல்லுதல் ; குறிப்புக்காட்டுதல் .
போக்குச்சொல்லுதல் சாக்குக் காட்டுதல் .
போக்குதல் போகச்செய்தல் ; செய்தல் ; செய்து முடித்தல் ; கொடுத்தல் ; உணர்த்தல் ; உட்புகுத்துதல் ; மெலிவுறச்செய்தல் ; இல்லாமற் செய்தல் ; கழித்தல் ; அழித்தல் .
போக்குநீக்கு பழக்கம் ; போக்குவரத்து ; பாட்டை ; புகலிடம் ; விரகு .
போக்குவரத்து போதலும் வருதலும் ; ஊடாடுகை ; விருந்தினர் ; வரவுசெலவு .
போக்குவரவு காண்க : போக்குவரத்து ; இறத்தலும் பிறத்தலும் ; ஒரு துறை ; பட்டா மாறுகை .
போக்குவீடு செல்லவிடுகை ; சொற்செயல்களால் உணர்ச்சிக்கு வழிவிடுகை .
போக தவிர ; பகுதிப்பொருளில்வரும் ஒரு துணைச்சொல் .
போகக்கலப்பை இன்பநுகர்ச்சிக்குரிய பலவகைப் பண்டம் .
போகக்கலவை உயர்ந்த கலவைச் சாந்து .
போககாரகன் சாதகனின் இன்பங்களைக் குறிக்கும் சுக்கிரன் .
போகசிவன் சதாசிவன் .
போகடுதல் போகவிடுதல் ; கழித்தல் ; விலகுதல் .
போகண்டன் ஐந்தாண்டு தொடங்கிப் பதினைந்தாண்டிற் குட்பட்டவன் .
போகணி ஒரு பாண்டம் .
போகத்தானம் உடல் ; காண்க : ஆனந்தமயகோசம் ; இன்பங்களைக் குறிக்கும் ஏழாமிடம் .
போகநீர் சுக்கிலம் .
போகப்போக காலம் செல்லச்செல்ல .
போகபதி தலைவன் , அதிபதி .
போகபுவனம் வினைப்பயனை நுகரும் நல்லுலகம் .
போகபூமி விளைநிலம் ; அறுவகைப்பட்ட போகநுகர்ச்சித் தானம் ; துறக்கம் ; முப்பத்தாறு தத்துவங்கள் .
போகபோக்கியம் நுகர்ச்சிப்பொருள் ; செல்வம் நுகர்கை .
போகம் இன்பம் ; நுகர்வு ; எண்வகைப் போகம் ; புணர்ச்சி ; புசிக்கை ; செல்வம் ; விளைவு ; கூலி ; பாம்பினுடல் ; பாம்பின்படம் ; பாம்பு ; நால்வகைப் படையை ஒன்றுக்குப்பின் ஒன்றாக நிறுத்தும் அணிவகுப்புவகை ; நிலவனுபவம் ; கடவுளின் அவத்தை மூன்றனுள் ஞானமும் கிரியையும் சமமாகவுள்ள நிலை ; பின்னத்தின் மேலெண் .
போகம்பண்ணுதல் சேர்தல் .
போகமகள் இன்பநுகர்ச்சிக்குரிய பெண் ; மனைவி ; வைப்பாட்டி ; கணிகை .
போகமீன்றபுண்ணியன் சிவபெருமான் .
போகர் உலக இன்பங்களை நுகர்பவர் ; ஒரு சித்தர் .
போகல் உயர்ச்சி ; நீளம் .
போகவழி நாகலோகத்தின் தலைநகரம் ; நல்லனுபவமுடைய பெண் .
போகவாஞ்சை புணர்ச்சிவிருப்பு .
போகவிச்சை புணர்ச்சிவிருப்பு .
போகவிடயம் புணர்ச்சியின்பம் .
போகவிடுதல் நழுவவிடுதல் .
போகாந்தராயம் துய்த்தற்குரிய இன்பங்களை விலக்குகை .
போகாப்புல் செங்கழுநீர்போன்ற களைய முடியாத களைவகை .
போகாறு பொருள் செலவாகும் வழி .
போகி சதாசிவன் ; இந்திரன் : சுக்கிரன் ; பாம்பு ; நல்லனுபவமுடையான் ; இன்பந்துய்ப்போன் ; தலைமைக்காரன் ; காண்க : போகிப்பண்டிகை ; சிவிகை சுமப்போன் ; வணிகன் ; நாவிதன் .
போகித்தல் இன்பதுன்பங்களை நுகருதல் ; வினைப்பயன் நுகர்தல் ; புணர்தல் .
போகிப்பண்டிகை பொங்கற் பண்டிகைக்கு முந்தின நாளில் கொண்டாடும் விழா .
போகில் பறவை ; பூவரும்பு ; கொப்பூழ் .
போகின்றகாலம் நிகழ்காலம் .
போகு நெடுமை ; உயரம் ; நீளம் .
போகுகாலம் எதிர்காலம் .
போகுடி ஊரைவிட்டுப்போன குடும்பம் ; வாரிசில்லாமல் மறைந்துபோனவருடைய சொத்து .
போகுதல் காண்க : போதல் .
போகுயர்தல் வளர்தல் ; உயர்தல் .
போகூழ் இழக்கச்செய்யும் விதி .
போகை போதல் ; செலவு .
போகொட்டுதல் போகவிடுதல் .
போங்கம் மஞ்சாடிமரவகை .
போங்காலம் துன்புறும் வேளை ; இறக்குங்காலம் ; அழிவுகாலம் .
போங்கு நடைமுறை .
போசக்கை மாயம் ; மேற்பூச்சு ; போலித்தோற்றம் .
போசகம் நுகர்தற்குரியது .
போசர் காவி ; வினைக்குடையவர் .