முதல் - மகரசங்கராந்தி வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
ஒர் உயிர்மெய்யெழுத்து (ம்+அ) ; மத்திமம் எனப்படும் இசையின் எழுத்து ; சந்திரன் ; சிவன் ; யமன் ; காலம் ; பிரமன் ; திருமால் ; நஞ்சு .
மஃகான் மகரவொற்று .
மக்கட்கதி நாற்கதியுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு .
மக்கட்சேவகம் ஊழியம் .
மக்கட்சேவகன் ஊழியன் .
மக்கட்டம்பிடித்தல் இழுபறிப்படுதல் .
மக்கட்டாயம் மகன்முறையாய் வரும் தாய உரிமை .
மக்கட்டு அரையில் ஆடையின்மேற் கட்டுங் கட்டு ; மணிக்கட்டு .
மக்கட்டொகுதி மக்கள்தொகை ; மக்கட் கூட்டம் .
மக்கட்பரப்பு மக்கள்தொகை ; மக்கட் கூட்டம் .
மக்கட்பாடு மக்களுடைய முயற்சி .
மக்கட்பேறு குழந்தைச்செல்வம் .
மக்கடா புத்தியீனன் .
மக்கடித்தல் உருவழித்தல் .
மக்கண்முரி வடிவிற் சிறியவர் .
மக்கம் நெய்வோர் தறி ; காண்க : எருக்கு ; முகம்மது நபி பிறந்த இடம் .
மக்கர் இடக்கு .
மக்கல் கெட்டுப்போன பொருள் ; கூளம் .
மக்கள் மானுடவினம் ; ஐம்பொறியுணர்வோடு மனவறிவுடைய உயிர்கள் ; பிள்ளைகள் .
மக்களித்தல் குணமடைந்த நோய் திரும்புதல் ; உடற்சந்து பிசகுதல் ; சறுக்குதல் ; மாற்றுதல் .
மக்களிப்பு புரளல் ; காண்க : மக்களித்தல் .
மக்கன் காண்க : மக்கு .
மக்கனம் மூழ்குகை ; அவமானம் .
மக்காச்சோளம் ஒரு சோளவகை .
மக்கி இரேவற்சின்னிப்பால் ; காண்க : இரேவற்சின்னி ; குளிகைவகை ; ஈ ; வெண்பார்க்கல் .
மக்கினம் காண்க : மக்கனம் .
மக்கு அடைமண் ; மந்தகுணம் ; அறிவீனன் ; மரவேலையில் சந்து தெரியாமல் அடைக்கும் பொடி .
மக்குதல் அழிதல் ; மந்தமாதல் ; கெடுதல் ; அழுக்கேறுதல் : ஈரத்தாற் கெட்டுப்போதல் .
மக மகன் அல்லது மகள் ; பிள்ளை ; இளமை ; நிலவரிவகை .
மகக்குழை மாவிலை .
மகங்காரம் ஆணவம் .
மகச்சோறு முப்பத்திரண்டு அறங்களுள் குழந்தைகளுக்குச் சோறளிக்கும் அறம் .
மகசர் பலர் கையெழுத்திட்ட பொது விண்ணப்பம் .
மகசூல் நிலத்தின் விளைச்சல் .
மகட்கருமம் பெண்ணை மணந்துகொள்கை .
மகட்கொடை மகளை மணஞ்செய்து கொடுத்தல் .
மகட்கோடல் பெண்ணை மணம்புரிகை .
மகட்பாற்காஞ்சி முதுகுடித் தலைவனிடம் மகளைத் தருகவென்று கேட்கும் அரசனோடு அவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை .
மகட்பேசுதல் திருமணத்திற்குப் பெண் உறுதி செய்தல் .
மகடு காண்க : மகடூஉ ; மகுடி .
மகடூஉ பெண் ; மனைவி .
மகடூஉக்குணம் பெண்தன்மைக்குரிய நாணம் , மடம் , அச்சம் , பயிர்ப்பு என்னும் நாற்குணம் .
மகடூஉமுன்னிலை பெண்ணை முன்னிலைப் படுத்திக்கூறுகை .
மகண்மறுத்தல் பகைவீரன் தம் மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை .
மகண்மறுத்துமொழிதல் பகைவீரன் தம் மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை .
மகண்மா பெண்ணுருக்கொண்ட ஒரு விலங்கு ; அலி .
மகண்மை மகளாகும் தன்மை ; பெண்தன்மை ; காண்க : மகமை .
மகத்தத்துவம் அறிவுத்தத்துவம் .
மகத்து பெரியது ; அதிகமானது ; பெருமையானது ; மகாத்துமா ; நாடு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
மகத்துவம் பெருமை .
மகத்துறை வேள்வி செய்யுமிடம் .
மகத்தூண் வேள்விப் பசுவைக் கட்டிய தூண் .
மகதத்துவம் காண்க ; மகத்தத்துவம் .
மகதம் நாடு ஐம்பத்தாறனுள் ஒன்று ; நடு நாட்டில் திருக்கோவலூரைச் சார்ந்த ஒரு பகுதி ; பதினெண் மொழியுள் ஒன்று .
மகதவன் மகதநாட்டவன் .
மகதி நாரதன் வீணை ; பார்வதி ; திப்பிலி .
மகதை திப்பிலி ; நடுநாட்டில் திருக்கோவலூரைச் சார்ந்த ஒரு பகுதி .
மகந்தரம் கள் ; பதநீர் .
மகப்பால்வார்த்தல் அநாதப் பிள்ளைக்குப் பால் வார்த்தல் .
மகப்பேறு பிள்ளைப்பேறு .
மகபதி வேள்விக்கு தலைவனாகிய இந்திரன் .
மகம் மகநாள் ; வேள்வி ; பலி ; இன்பம் ; பிரபை ; விழவு .
மகம்பூ செடிவகை .
மகமாயி பார்வதி ; பெரியம்மைக்குரிய தேவதை .
மகமுறை விருந்து ; வேள்விசெய்யும் முறை .
மகமேரு மேருமலை .
மகமை கோயில் , சத்திரம் முதலியவற்றின் செலவிற்காக வசூலிக்கும வரி ; வணிகர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து அறச்செயலுக்குக் கொடுக்கும் நிதி ; பழைய நிலவரிவகை .
மகரக்குழை சுறாமீன் வடிவமைந்த காதணி .
மகரக்குறுக்கம் தன் மாத்திரையிற் குறைந்து நிற்கும் மகரமெய் .
மகரக்கொடியோன் மீனைக் கொடியிலுடைய மன்மதன் .
மகரகண்டிகை கழுத்தணிவகை ; காண்க : மகரதோரணம் .
மகரகுண்டலம் காண்க : மகரக்குழை .
மகரகேதனம் மீனக்கொடி .
மகரகேதனன் காண்க : மகரக்கொடியோன் .
மகரசங்கராந்தி தைமாதப் பிறப்பு .