சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| மா | ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ) ; விலங்கு ; குதிரை ; யானை ; குதிரை , பன்றி , யானை ஆகியவற்றின் ஆண் ; சிம்மராசி ; வண்டு ; அன்னம் ; விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம் ; மாமரம் ; அழைக்கை ; சீலை ; ஆணி ; துன்பம் பொறுக்கை ; ஓர் அசைச்சொல் ; திருமகள் ; செல்வம் ; கலைமகள் ; மாற்று ; ஒரு நிறை ; கீழ்வாயிலக்கத்துள் ஒன்று ; நிலவளவைவகை ; வயல் ; நிலம் ; வெறுப்பு ; கானல் ; ஆகாது என்னும் பொருளில் வரும் ஒரு வடசொல் ; பெருமை ; வலி ; அழகு ; கருமை ; நிறம் ; மாமைநிறம் ; அரிசி முதலியவற்றின் மாவு ; துகள் ; நஞ்சுக்கொடி ; அளவை ; இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல் . |
| மாக்கருவி | குதிரைச்சேணம் . |
| மாக்கல் | பலப்பம் முதலியவை செய்தற்குரிய கல் ; சவர்க்காரக்கல் . |
| மாக்கள் | மனிதர்கள் ; பகுத்தறிவிலார் ; குழந்தைகள் ; விலங்குகள் . |
| மாக்காப்பு | தெய்வத் திருமேனிகட்குச் சாத்தும் அரிசிமாச் சாத்துப்படி . |
| மாக்கிகம் | நிமிளை ; தேன் . |
| மாக்குளித்தல் | மகளிர் விளையாட்டுவகை . |
| மாக்கோலம் | நீர் சேர்த்த அரிசிமாவால் பூமியிலிடும் சித்திரங்கள் . |
| மாகத்தார் | தேவர் ; ஒரு குழுவினர் . |
| மாகதி | காண்க : திப்பிலி ; முல்லைவகை ; ஊசிமுல்லை ; சருக்கரை ; பிராகிருதமொழிவகை . |
| மாகந்தம் | மாமரம் . |
| மாகந்தி | நெல்லிமரம் ; காண்க : அமுக்கிரா . |
| மாகபதி | இந்திரன் . |
| மாகம் | மாசிமாதம் ; மகநாள் ; மேலிடம் ; வானம் ; துறக்கம் ; திக்கு ; மேகம் . |
| மாகரி | ஆண்யானை . |
| மாகவதி | கீழ்த்திசை . |
| மாகனன் | பார்ப்பனன் . |
| மாகாணம் | மாநிலம் ; நாடு ; சனக்கட்டு ; நாட்டின் பெரும்பகுதி . |
| மாகாணி | ஓர் அளவு ; பதினாறில் ஒரு பாகம் . |
| மாகாளி | கொற்றவை ; ஏழு மாதர்களுள் ஒருத்தி ; காண்க : மாகாளிக்கிழங்கு ; களாவகை . |
| மாகாளிக்கிழங்கு | மலையில் விளையும் நன்னாரிவகை . |
| மாகு | வலை ; வலையில் கோத்த மணி . |
| மாகுலர் | வேடர் . |
| மாகுலவர் | வேடர் . |
| மாகுலி | உயர்குடியிற் பிறந்தவள் . |
| மாகேச்சுவரி | பார்வதி ; ஏழுமாதருள் ஒருத்தி . |
| மாகேசம் | வரிக்கூத்துவகை . |
| மாகேசுவரபூசை | சிவனடியார்க்கு உணவிடுதல் . |
| மாகேயம் | பவளம் . |
| மாகை | பசு . |
| மாங்கல்லியம் | காண்க : மாங்கலியம் . |
| மாங்கலியசூத்திரம் | காண்க : மாங்கலியம் . |
| மாங்கலியதாரணம் | தாலிகட்டுஞ் சடங்கு . |
| மாங்கலியப்பிச்சை | தான் மாங்கலியத்துடன் வாழும்படி தன் கணவனுயிரைக் காக்குமாறு ஒருத்தி வேண்டுகை . |
| மாங்கலியம் | தாலி . |
| மாங்கன்று | மாஞ்செடி . |
| மாங்காய் | மாவின் காய் ; கழுத்தணிவகை ; விலங்குகளின் மூத்திரப்பை . |
| மாங்காய்ப்பூட்டு | ஒரு பூட்டுவகை . |
| மாங்காய்மாலை | மாங்காய் வடிவமான உருக்கள் கோத்த கழுத்தணிவகை . |
| மாங்காயீரல் | மூத்திராசயம் . |
| மாங்கிசம் | காண்க : மாமிசம் . |
| மாங்கு | பிறந்த குழந்தையின்மேற் பற்றியிருக்கும் ஒரு பசைவகை . |
| மாச்சரியம் | பொறாமை ; பகைமை . |
| மாச்சல் | சாதல் ; மிக்க வருத்தம் ; சோம்பல் . |
| மாச்சி | கைவிலங்கு ; அருவதா . |
| மாச்சீர் | நேரசையால் இறும் இயற்சீர் . |
| மாச்சு | விலங்கு ; குற்றம் ; பிள்ளை விளையாட்டு . |
| மாசக்கடன் | மாதந்தோறும் பகுதி பகுதியாகச் செலுத்தவேண்டிய கடன்தொகை . |
| மாசக்காய் | ஒரு மருந்துச்சரக்குவகை ; செடிவகை ; மரவகை . |
| மாசச்சந்துக்கட்டு | பணமுடையேற்படும் மாத முடிவிலுள்ள நாள்கள் . |
| மாசப்பிறப்பு | மாதத்தொடக்கம் . |
| மாசம் | சாந்திரமானமாதம் ; ஆண்டின் பன்னிரண்டில் ஒரு பகுதி ; சித்திரை , வைகாசி , ஆனி , ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி ; தை , மாசி , பங்குனி என்னும் பன்னிரு சௌரமானமாதங்கள் . |
| மாசமாசம் | காண்க : மாசாமாசம் . |
| மாசலம் | நோய் ; முதலை . |
| மாசலன் | கள்வன் . |
| மாசறுதல் | குற்றம் நீங்குதல் . |
| மாசனம் | மக்கட்கூட்டம் ; மந்திரி , புரோகிதர் முதலியோர் ; ஒரு போதைமருந்து . |
| மாசாந்தம் | பெரும் பொறுமை ; மாதமுடிவு ; அமாவாசை ; மாதக்கடைசியில் வரும் கிழமையொன்றில் கோயிலில் செய்யும் வழிபாடு . |
| மாசாந்தரம் | காண்க : மாதாந்தரம் . |
| மாசாமாசம் | காண்க : மாதாந்தரம் . |
| மாசாலம் | ஒரு மாயவித்தை ; சிணுங்குகை . |
| மாசி | மேகம் ; பதினோராம் மாதம் ; புதுவரம்பு ; மகநாள் ; கடல்மீன்வகை . |
| மாசிகம் | இறந்தோர்க்கு இறந்த ஆண்டில் மாதந்தோறுஞ் செய்யும் சிராத்தம் . |
| மாசிகை | பறவை . |
| மாசிங்கம் | கலைமான்கொம்பு . |
| மாசிதறிருக்கை | பகைவரிடத்துக் கவர்ந்த யானை , பசு முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை . |
| மாசிபத்திரி | மணப்பூடுவகை ; கொட்டைக் கரந்தைவகை . |
| மாசிமகம் | மாசிமாத முழுநிலவும் மகநாளும் கூடிய புண்ணியநாள் . |
| மாசியம் | காண்க : மாசிகம் ; கஞ்சாவைக்கொண்டு செய்யும் ஒரு போதைப்பண்டவகை . |
| மாசிலாமணி | மறுவற்ற மணி ; கடவுள் . |
| மாசு | அழுக்கு ; குற்றம் ; மறு ; மாறுபாடு ; கருமை ; இருள் ; மேகம் ; பாவம் ; தீமை ; தூளி ; புழுதி ; புன்மை ; பால்வீதிமண்டலம் ; மெய்ம்மலம் ; நஞ்சுக்கொடி ; பித்தநீர் ; கோழை ; கண்ணின் காசபடலம் ; வலைவடம் ; குழப்பின மா . |
| மாசுகம் | காண்க : பீர்க்கு ; மிகு இன்பம் . |
| மாசுணம் | பாம்பு ; பெரும்பாம்பு . |
| மாசுதீர்ப்பான் | நாவிதன் . |
| மாசுமறு | குற்றம் . |
|
|