மொ முதல் - மொய்கதிர் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
மொ ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஒ) .
மொக்கட்டை முகம் ; மழுக்கமானது .
மொக்கணி குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் பை ; கருவிவகை .
மொக்களித்தல் பயணத்தில் தடைசெய்தல் ; பயணத்தில் தங்குதல் .
மொக்கன் தடித்தவர் ; தடித்தது .
மொக்கு பூமொட்டு ; சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு ; தரையிலிடும் பூக்கோலம் ; குத்துவிளக்கின் தகழி ; மரக்கணு ; காண்க : மொக்கை .
மொக்குதல் ஒருசேர விழுங்கியுண்ணுதல் ; அடித்தல் .
மொக்குமா ஒரு கோலப்பொடிவகை .
மொக்குள் மலரும்பருவத்தரும்பு ; நீர்க்குமிழி .
மொக்குளித்தல் குமிழி உண்டாதல் ; திரளுதல் .
மொக்கை கூரின்மை ; பருமை ; மரத்துண்டு ; அவமானம் ; தாழ்வு ; மதிப்பு ; முகம் .
மொக்கைகுலைதல் இழிவடைதல் .
மொக்கைச்சோளம் ஒரு சோளவகை , மக்காச்சோளம் .
மொக்கைபோதல் அவமானப்படுதல் ; முனைமழுங்குதல் .
மொகமொகெனல் நீரூற்றில் உண்டாகும் ஈரடுக்கொலிக்குறிப்பு ; நீர்க்கொதிப்பின் ஒலிக்குறிப்பு .
மொகுமொகுத்தல் ஒலித்தல் .
மொகுமொகெனல் ஒலிக்குறிப்பு ; நீர்பெருகுதற்குறிப்பு .
மொங்கன் காண்க : மொக்கன் .
மொங்கான் இடிகட்டை ; பெருத்துக் கனத்த பொருள் .
மொச்சட்டங்கொட்டுதல் நாவாற்கொட்டி ஒலித்தல் .
மொச்சியன் ஓவியன் .
மொச்சு தீநாற்றம் .
மொச்சை ஒரு பயறுவகை ; காண்க : மொச்சு .
மொச்சையடித்தல் நாட்பட்ட தயிர் முதலியன தீநாற்றம் வீசுதல் .
மொசித்தல் தின்னுதல் .
மொசிதல் மொய்த்தல் .
மொசுப்பு செருக்கு .
மொசுமொசுக்கை காண்க : முசுமுசுக்கை .
மொசுமொசுத்தல் தினவுக்குறிப்பு ; அடிக்கடி தொல்லைதருதல் .
மொஞ்சகம் பீலி .
மொஞ்சி முலை ; முலைப்பால் .
மொஞ்சிநாற்றம் முலைப்பால் மணம் .
மொட்டம்பு கூரற்ற அம்பு .
மொட்டித்தல் குவிதல் ; அரும்புதல் .
மொட்டு பூவரும்பு ; தேரின் கூம்பு ; ஆண்குறியின் நுனி ; வெறுமை .
மொட்டை மயிர்நீங்கிய தலை ; கூரின்மை ; அறிவின்மை ; வெறுமை ; முழுமையின்மை ; மணமாகாத இளைஞன் ; கையெழுத்திடப் பெறாத மனு .
மொட்டைச்சி மயிரற்ற தலையுடையவள் ; கைம்பெண் ; ஒரு மருந்துப்பொடிவகை .
மொட்டைத்தலை மயிர்நீங்கிய தலை .
மொட்டைதட்டுதல் முழுதும் கொள்ளை கொள்ளுதல் .
மொட்டைப்புத்தி மழுங்கின அறிவு .
மொட்டைமரம் பட்டுப்போன மரம் ; காயாமரம் ; இலை , பழம் முதலியன முற்றும் உதிர்ந்த மரம் .
மொட்டைமாடி கட்டடம் அமையப்பெறாத மேற்றளம் .
மொட்டைமாடு கொம்பில்லாத மாடு .
மொட்டையடித்தல் தலைமுழுதும் மழித்தல் ; முழுதும் கொள்ளையடித்தல் .
மொட்டையன் மொட்டைத்தலையன் ; முழுதும் இழந்தவன் .
மொட்டைவசனம் முடிவில்லா வாக்கியம் ; மெய்ப்பிக்கப்படாத செய்தி .
மொட்டைவண்டி மேற்கூடில்லாத வண்டி .
மொடமொடெனல் காண்க : மொடுமொடெனல் .
மொடு பருமை ; மிகுதி ; விலை முதலியவற்றின் நயம் .
மொடுக்குமொடுக்கெனல் ஒலிக்குறிப்புவகை .
மொடுமொடெனல் உலர்ந்த தோல் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு ; வயிறு இரைதற்குறிப்பு ; விரைதற்குறிப்பு .
மொண்டணி மரக்கணு .
மொண்டல் மொள்ளுகை .
மொண்டி நொண்டி ; சாமைவகை ; முரண்டுசெய்வோன் ; தொந்தரவு செய்பவன் .
மொண்டு முரண்டு ; தொந்தரவு .
மொண்ணன் வழுக்கைத்தலையன் .
மொண்ணை வழுக்கை ; கூர்மையின்மை .
மொத்தம் கூட்டுத்தொகை ; முழுமை ; பொது ; பருமை .
மொத்தளம் கூட்டம் ; கூட்டுத்தொகை .
மொத்தி புடைப்பு ; புத்தியில்லாதவன் .
மொத்தினி நுரை .
மொத்து அடி ; மூடமானவர் ; மூடமானது ; சுறுசுறுப்பில்லாதவர் ; சுறுசுறுப்பில்லாதது .
மொத்துதல் அடித்தல் ; வீங்குதல் .
மொத்தை உருண்டை ; பருமன் ; மூடப்பெண் .
மொதுமொதெனல் விழுங்கல் அல்லது உறிஞ்சல் ஒலிக்குறிப்பு ; திரளுதற்குறிப்பு ; கொழுத்து வளர்தற்குறிப்பு .
மொந்தணி மரக்கணு ; பருமை ; உருண்டை .
மொந்தணியன் பருத்தது ; உருண்டையானது .
மொந்தன் ஒரு வாழைவகை .
மொந்தை சிறு மட்பாண்டவகை ; சிறு மரப்பாண்டவகை ; சிறு பாண்டவகை ; ஒருகட்பறைவகை ; பருத்தது .
மொந்தையுரு நெட்டுரு .
மொப்படித்தல் வெடிநாற்றம் வீசுதல் .
மொப்பு வெடிநாற்றம் ; குட்டி பாலைக் குடியாதபடி ஆட்டின் மடியில் சுற்றிவைக்குந் துணி .
மொய் நெருக்கம் ; கூட்டம் ; இறுகுகை ; பெருமை ; வலிமை ; போர் ; போர்க்களம் ; பகை ; யானை ; வண்டு ; தாய் ; காண்க : மொய்ப்பணம் , மகமை ; அழகு ; அத்தி .
மொய்க்கணக்கு திருமணம் முதலியவற்றில் வழங்கும் அன்பளிப்புகள் குறிப்பு .
மொய்கதிர் முலை ; முலைக்காம்பு ; அடர்ந்த கதிர் .