சொல்
|
அருஞ்சொற்பொருள் |
மோ | ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஓ) ; ஒரு முன்னிலை யசைச்சொல் . |
மோக்கம் | வீடுபேறு ; விடுபடுகை . |
மோகப்படைக்கலம் | எதிரியை மயக்கும் படைக்கலன . |
மோகம் | ஆசை ; காமமயக்கம் ; விருப்பம் ; வேட்கை ; மூர்ச்சை ; மாயையால் நிகழும் மயக்கவுணர்ச்சி ; திகைப்பு பாதிரிமரம் ; மோர் ; முருங்கைமரம் ; வாழைமரம் . |
மோகர் | ஓவியர் ; மோகமுடையவர் . |
மோகரம் | பேராரவாரம் ; கடுமை ; மனமயக்கம் . |
மோகரித்தல் | ஆரவாரித்தல் ; மயங்குதல் . |
மோகல¦லை | காமத்தைத் தூண்டும் நடத்தை . |
மோகவிலை | விருப்பத்தின்மேற் கொடுக்கும் அதிகவிலை . |
மோகவுவமை | பொருள்மேலுள்ள வேட்கையால் உவமான உவமேயங்களை மயங்கக்கூறும் உவமையணிவகை . |
மோகன் | மன்மதன் . |
மோகனக்கல் | பூசைக்குரிய பொருள்களை வைக்கும் கல்மேடை ; கோயில் முதலியவற்றின் வாசற்காலின் மேலுள்ள உத்திரக்கல் . |
மோகனச்சுண்ணம் | மயக்கப்பொடி . |
மோகனநாட்டியம் | மகளிர்கூத்து . |
மோகனம் | மயக்கமுண்டாக்குகை ; மனமயக்கம் ; காண்க : மோகனை ; காமனது மோகம் உண்டாக்கும் அம்பு ; ஆசைமிகுகை ; ஒரு பண்வகை ; ஏமாற்றுகை . |
மோகனமாலை | பொன்னும் பவளமுங் கோத்தமாலைவகை . |
மோகனாங்கனை | அழகு முதலியவற்றாற் காண்போரை மயக்கும் பெண் . |
மோகனாங்கினி | அழகு முதலியவற்றாற் காண்போரை மயக்கும் பெண் . |
மோகனை | பிறரை மயங்கச்செய்யும் வித்தை . |
மோகாதி | காமம் , வெகுளி , மயக்கம் என்னும் முக்குற்றங்கள் . |
மோகி | கஞ்சா ; அபின் . |
மோகித்தல் | காமத்தால் மயங்குதல் ; மனந்திகைத்தல் . |
மோகிதம் | காமமயக்கம் . |
மோகிதன் | மோகமுள்ளவன் . |
மோகினி | கண்டாரை மயங்கச் செய்யும் திருமாலின் பெண்வடிவான பிறப்பு ; தன்னைக் காண்பவரை மயக்கும் உருவத்தையுடைய பெண் ; அசுத்தமாயாதத்துவம் ; பெண்பேய்வகை . |
மோங்கில் | திமிங்கிலவகை . |
மோசக்காரன் | வஞ்சகன் . |
மோசகன் | விடுவிப்பவன் ; துறவி ; வெளிவிடுவோன் ; திருடன் ; தட்டான் . |
மோசகி | கிலுகிலுப்பைச்செடி . |
மோசடி | ஏமாற்றம் . |
மோசம் | வஞ்சனை ; கேடு ; தவறு ; முருங்கைமரம் ; வாழைமரம் . |
மோசம்போதல் | வஞ்சிக்கப்படுதல் ; கேட்டுக்குள்ளாதல் ; பிசகுதல் . |
மோசனம் | விடுபடுதல் ; ஒருநெல்வகை . |
மோசாடம் | சந்தனம் ; வாழைப்பழம் . |
மோசித்தல் | பிசகிப்போதல் ; விட்டொழிதல் . |
மோசிமல்லிகை | காண்க : காட்டுமல்லி . |
மோசை | அவுரி ; இலவமரம் ; வாழை ; வசம்பு ; விரலணிவகை . |
மோட்சம் | வீடுபேறு ; விடுபடுகை ; பதமுத்தி ; வினைத்தொடர்பினின்று முற்றும் நீங்கும் நிலை . |
மோட்சமார்க்கம் | வீட்டுநெறி , வீடுபேற்றிற்குரிய வழி . |
மோட்சவான் | வீடுபேறடைந்தவன் . |
மோட்சவிளக்கு | வீரசைவர் தமது பிணத்தைப் புதைக்கும் மண்மேடு மீது வைக்கும் விளக்கு ; இறந்தவர்பொருட்டு ஏற்றப்படும் விளக்கு . |
மோட்டன் | மூர்க்கன் . |
மோட்டுமீன் | விண்மீன் . |
மோட்டுவலயம் | மாலைவகை . |
மோட்டோடு | வீட்டு முகட்டிலிடும் வளைவோடு . |
மோட்டோலை | கூரைமோடு வேயும் ஓலை . |
மோடம் | மப்புமந்தாரம் ; மூடத்தனம் . |
மோடன் | வளர்ந்தவன் ; மூடன் . |
மோடனம் | காற்று ; அரைக்கை ; அவமானம் ; மாயவித்தை ; மூடத்தனம் . |
மோடி | துர்க்கை ; செருக்கு ; விதம் ; பகட்டு ; பெருமிதம் ; வேடிக்கைக் காட்சி ; பிணக்கு ; வஞ்சகம் ; மொத்தம் ; கண்டதிப்பிலி ; திப்பிலி மூலம் ; மகுடி ; ஓர் ஊதுகுழல்வகை . |
மோடிக்காரன் | பிணக்கங்காட்டுவோன் ; அலங்காரப்பிரியன் ; வஞ்சகன் . |
மோடிடுதல் | ஆறு முதலியவற்றில் மணலால் மேடு உண்டாதல் ; சோரத்தில் கருப்பமாதல் . |
மோடு | மேடு ; உயர்ச்சி ; முகடு ; கூரையின் உச்சி ; பருமை ; பெருமை ; உயர்நிலை ; வயிறு ; கருப்பை ; பிளப்பு ; உடம்பு ; மடமை . |
மோடுபருத்தல் | பிடரியிற் சதை திரண்டிருத்தல் . |
மோணம் | பழத்தின் வற்றல் ; பாம்புப்பெட்டி . |
மோத்தல் | மூக்கால் நுகர்தல் ; மொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் . |
மோத்தை | ஆட்டுக்கடா ; வெள்ளாட்டுக்கடா ; முற்றாத தேங்காய் ; மடல்விரியாத பூ ; மேடராசி . |
மோதகப்பிரியன் | விநாயகன் . |
மோதகம் | அப்பவருக்கம் ; கொழுக்கட்டை ; பிட்டு ; தோசை ; மகிழ்ச்சி ; இணக்கம் . |
மோதகமரம் | பீநாறிமரம் . |
மோதம் | மகிழ்ச்சி ; களிப்பு ; மணம் ; ஓமம் . |
மோதயந்தி | மல்லிகைவகை . |
மோதரம் | காண்க : மோதிரம் . |
மோதலை | கைமாற்றுக்கடன் ; முன்றானை ; போர்முனை . |
மோதவம் | மணம் . |
மோதிரம் | கணையாழி , விரலணி . |
மோதிரமாற்றுதல் | திருமணத்தில் மணமக்கள் கணையாழியை மாற்றிக்கொள்ளுதல் . |
மோதிரவிரல் | சுண்டுவிரலுக்கு அடுத்த விரல் . |
மோது | தாக்கு ; வைக்கோற்கட்டு ; எண்ணெய் வடிக்கும்பொருட்டுச் சேர்த்துக் காய்ச்சும் நீர் . |
மோதுதல் | புடைத்தல் , தாக்குதல் ; அப்புதல் . |
மோதை | வசம்பு . |
மோந்தை | தோற்கருவிவகை . |
மோப்பம் | மணம் ; மூக்கு . |
மோப்பம்பிடித்தல் | காமவிச்சையுடன் ஒருத்தியைத் தொடர்தல் ; நாற்றத்தால் ஒன்றை அறிதல் . |
மோப்பி | கைம்பெண் ; காண்க : மோப்பம் . |
![]() |
![]() |