சொல்
|
அருஞ்சொற்பொருள் |
வி | ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+இ) ; தொழிற்பெயர் விகுதி ; பிறவினை விகுதி ; விசும்பு ; பறவை ; காற்று ; கண் ; திசை ; அழகு ; இன்மை ; எதிரிடை ; மாறுபாடு ; மிகுதி முதலியபொருளுணர்த்தும் ஒரு முன்னொட்டு . |
விக்கல் | தொண்டை விக்குகை . |
விக்கனம் | இடையூறு ; தீது . |
விக்கிதம் | ஐவகைத் தாரைகளுள் ஒன்றான குதிரைநடை . |
விக்கிரகம் | உருவம் ; தெய்வத்திருமேனி ; கடவுளின் அருச்சனாபிம்பம் ; சிலை ; உடல் ; சாயல் ; பகை ; போர் . |
விக்கிரகவணக்கம் | தெய்வ உருவங்களை வைத்துப் பூசிக்கை . |
விக்கிரகாராதனை | தெய்வ உருவங்களை வைத்துப் பூசிக்கை . |
விக்கிரம | அறுபதாண்டுக்கணக்கில் பதினான்காம் ஆண்டு . |
விக்கிரமம் | பேராற்றல் மிகுபலம் ; திறமை ; அடியெடுத்துவைக்கை . |
விக்கிரமன் | வீரன் ; ஓர் அரசன் . |
விக்கிரமி | அரிமா ; வீரன் . |
விக்கிரயச்சீட்டு | விற்பனைப்பத்திரம் , விலை ஆவணம் . |
விக்கிரயம் | விற்பனை . |
விக்கிரயிகன் | விற்போன் . |
விக்கிரேயம் | விற்கப்படும் பொருள் . |
விக்கிள் | காண்க : விக்கல் . |
விக்கினம் | இடையூறு ; தடை ; தீது . |
விக்கினராசன் | விநாயகன் . |
விக்கினவிநாயகன் | விநாயகன் . |
விக்கினேசன் | விநாயகன் . |
விக்கினேசுவரன் | விநாயகன் . |
விக்கு | விக்கல் . |
விக்குதல் | விக்கலெடுத்தல் ; விம்மிநிறைதல் , விக்கி வெளித்தள்ளுதல் . |
விக்குள் | காண்க : விக்கல் . |
விகங்கம் | பறவை ; அன்னம் ; காற்றாடி ; அம்பு ; சந்திரன் ; சூரியன் ; முகில் . |
விகங்கராசன் | கருடன் . |
விகசம் | மலர்ந்தது ; மொட்டை ; மரவகை . |
விகசித்தல் | மலர்தல் . |
விகசிதம் | மலர்ச்சி ; புரசுமரம் . |
விகடக்காரன் | சிரிப்பு விளைவிப்போன் . |
விகடகவி | பரிகாசப்பாடல் ; நகைச்சுவை தோன்றப் பாடுவோன் . |
விகடசக்கரன் | காஞ்சியில் உள்ள விநாயகன் . |
விகடப்பிரசங்கி | நகைச்சுவை மிகும்படி சொற்பொழிவாற்றுபவன் . |
விகடம் | வேறுபாடு ; வரிக்கூத்துவகை ; பயங்கரமானது ; கரடுமுரடு ; நகைச்சுவை ; பரப்பு ; மிகுதி ; அழகு ; பிராந்தி ; உன்மத்தம் ; தொந்தரை . |
விகடன் | செருக்குள்ளவன் ; காண்க : விகடக்காரன் . |
விகடி | நகைச்சுவை விளைவிப்பவர் ; கபடமுடையவர் ; நீர் . |
விகண்டித்தல் | மறுத்தல் . |
விகண்டிதம் | பிரிவு ; வேறுபாடு ; கண்டிப்பின்மை . |
விகண்டை | மறுப்பு ; காண்க : விதண்டை ; பகைமை ; தீய எண்ணம் ; உறுதி . |
விகணிதம் | தீர்ப்பு ; கணிப்பில் அடங்காமை . |
விகத்தனம் | இகழாஇகழ்ச்சி ; தற்புகழ்ச்சி ; புகழ்ச்சி . |
விகம்பிதம் | நடுக்கம் . |
விகமனம் | தீநடத்தை . |
விகர்த்தனன் | சூரியன் . |
விகலம் | குறைவு ; சிதைவு ; கலக்கம் ; காண்க : விகலை . |
விகலன் | குறைவுடையோன் . |
விகலிதம் | சிந்துகை ; வடிகை ; சரிவின்மை . |
விகலை | நாழிகை ; கலையின் அறுபதில் ஒரு பாகம் . |
விகற்பக்காட்சி | பொருளின் வேறுபாடுகளைக் கண்டறியுங் காட்சி . |
விகற்பத்தின்முடித்தல் | பொருள் விளங்குதற் பொருட்டுப் பலதிறப்பட்ட வாய்பாட்டாற் முடித்துக்காட்டும் உத்திவகை . |
விகற்பம் | வேறுபாடு ; மனமாறுபாடு ; காண்க : விகற்பக்காட்சி ; மனக்கோணல் ; ஐயம் ; தவறு ; ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராமை ; இனம் . |
விகற்பமில்லாக்காட்சி | பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு . |
விகற்பவுணர்வு | பொருளின் வேறுபாடுகளைக் கண்டறியும் உணர்வு . |
விகற்பித்தல் | வேறுபடுத்துதல் ; பகுத்தறிதல் ; மாறுபடுதல் ; ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராதிருத்தல் . |
விகற்பு | வேறுபாடு ; ஓர் இலக்கண விதி ஓர் இடம் வந்து மற்றோரிடம் வாராதிருத்தல் . |
விகாசம் | மலர்ச்சி ; முகமலர்ச்சி ; விரித்தல் . |
விகாதம் | இடையூறு ; கேடு . |
விகாதித்தல் | தடைசெய்தல் . |
விகாய் | ஒரு மரவகை . |
விகாரம் | வேறுபாடு ; காண்க : செய்யுள்விகாரம் ; புணர்ச்சியில் வரும் தோன்றல் , திரிதல் ; கெடுதல் ஆகிய விகாரங்கள் ; மனக்கலக்கம் ; அழகின்மை ; காமம் ; குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் , இடும்பு , அசூயை என எண்வகைப்பட்ட தீக்குணம் ; புத்தாலயம் . |
விகாரவுவமை | உவமானத்தின் வேறுபாடே உவமேயமென்று சொல்லும் உவமையணிவகை . |
விகாரி | விகாரமுடையவன் ; காமுகன் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்துமூன்றாம் ஆண்டு . |
விகாரித்தல் | வேறுபடுத்தல் ; மோகித்தல் . |
விகாரியம் | வேறுபடுத்தப்படுவதாகிய செயப்படுபொருள் . |
விகிதம் | வீதம் ; நட்பு ; விதிமுறை ; தகுதி ; அனுகூலம் ; செயல் . |
விகிர்தம் | காண்க : விகிருதம் ; நகரம் . |
விகிர்தன் | கடவுள் ; மாறுபட்ட செயலினன் . |
விகிர்தி | அறுபதாண்டுக் கணக்கில் இருபத்து நான்காம் ஆண்டு ; வேறுபாடு . |
விகிரம் | சிதறுகை ; இறைக்கப்பட்ட சோறு ; துண்டு ; பறவை ; வெள்ளெருக்கு . |
விகிருதம் | வேறுபாடு ; பொய் ; வெறுப்பு ; அச்சம் ; ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயல் ; தலைவி தலைவனுக்குத் தன் காதலைச் சொல்ல நாணுகை . |
விகிருதன் | மாறுபட்ட செயலினன் ; கடவுள் . |
விகிருதி | வேறுபாடு ; முன்புள்ளதிலிருந்து உண்டானது ; பகுபதவுறுப்பினுள் இறுதிநிலையான உறுப்பு ; அறுபதாண்டுக் கணக்கில் இருபத்து நான்காம் ஆண்டு . |
விகுணம் | குணமின்மை . |
விகுணி | குணமில்லாதவர் ; குணங்கெட்டது ; கள் . |
விகுதி | மாறுபாடு ; முன்புள்ளதிலிருந்து உண்டானது ; பகுபதவுறுப்புகளுள் இறுதியான . |
![]() |
![]() |