சொல்
|
அருஞ்சொற்பொருள் |
வீ | ஓர் உயிர்மெய்யெழுத்து ( வ் + ஈ ) ; அழிவு ; சாவு ; நீக்கம் ; மடிவு ; மலர் ; பூந்தாது ; பறவை . |
வீக்கம் | உடலுறுப்பு வீங்குதல் ; புண் முதலியவற்றின் புடைப்பு ; நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய் ; தோல் முதலியன பூரிக்கை ; மிகுதி ; பெருமை ; கூட்டம் ; செருக்கு ; ஆசை ; கட்டு ; இடையூறு ; மூடுகை ; இறுக்கம் ; வேகம் . |
வீக்கமிறங்குதல் | உடலின் மேற்பகுதியிலிருந்த வீக்கங் குறைந்து மெல்லமெல்லக் கீழ்நோக்கி இறங்குகை . |
வீக்கு | கட்டுகை ; இறுகுகை : அடிக்கை ; பெருமை ; மிகுதி ; ஒரு கணிதமுறை . |
வீக்குதல் | கட்டுதல் ; அடக்குதல் ; தடுத்தல் ; அடித்தல் ; நிறைத்தல் ; வேகமுறச் செலுத்துதல் ; உயிரைப் போக்குதல் ; அழித்தல் . |
வீகம் | மோதிரம் ; பூட்டு ; விரைவு ; காற்று ; பறவை . |
வீங்கல் | மிகுதி ; பொருளைப் பெறும்பொருட்டு ஏக்கங்கொள்ளுதல் ; இளைத்திருப்பவர் ; காண்க : வீங்கி ; தூங்குதல் . |
வீங்கி | ஒன்றன்மீது ஏக்கங்கொண்டிருப்பவர் ; மரவகை . |
வீங்குதல் | பருத்தல் ; பூரித்தல் ; வீக்கமுறுதல் ; வளர்தல் ; மிகுதல் ; நெருங்குதல் ; இறுகுதல் ; விறைப்பாய் நிற்றல் ; மேனோக்கிச் செல்லுதல் ; மெலிதல் ; ஏக்கங்கொள்ளுதல் ; தூங்குதல் . |
வீங்கை | ஆடல்வகை ; குதிரைநடை ; ஒருவகை அசைவு . |
வீச்சம் | தீநாற்றம் . |
வீச்சாட்டம் | இடப்பரப்பு ; நன்னிலைமை ; நீளம் . |
வீச்சு | எறிதல் ; சிறகடிக்கை ; அடி ; ஆட்டுகை ; நீளம் ; வேகம் ; ஓட்டம் ; நோய்வகை ; வலிமை ; வீண்பேச்சு ; ஆந்தை முதலியவற்றின் சத்தம் ; விளைவு . |
வீச்சுக்காரன் | செலவுகாரன் ; பெருமைபேசுவோன் . |
வீச்சுக்காரி | செலவுகாரி ; பெருமை பேசுவோள் ; விலைமகள் . |
வீசகணிதம் | காண்க : பீசகணிதம் . |
வீசகரி | வேங்கைமரம் . |
வீசம் | 1/16 பங்காகிய மாகாணி ; விதை ; மூலம் ; முளை ; சுக்கிலம் ; மூளை ; காண்க : பீசகணிதம் ; பீசாட்சரம் ; நெல்லெடைப் பொன் . |
வீசல் | எறிதல் ; வரையாது கொடுத்தல் . |
வீசனம் | சிற்றாலவட்டம் ; விசிறி ; நூல் சுற்றுங்கருவி . |
வீசாட்சரம் | காண்க : பீசாட்சரம் . |
வீசி | அலை ; இன்பம் ; புல்லிது . |
வீசிக்கட்டுதல் | விரிவாகக் கட்டுதல் . |
வீசிநடத்தல் | காலை யெட்டிவைத்து வேகமாக நடத்தல் ; வெகுதொலைவு செல்லுதல் . |
வீசிமாலி | கடல் . |
வீசிவில்லிடுதல் | தேர் முதலியவற்றை நெம்பத் தடிபோடுதல் . |
வீசுகாலேணி | தாங்குகால்கள் இரண்டுள்ள ஏணிவகை . |
வீசுதல் | எறிதல் ; சிறகடித்தல் ; ஆட்டுதல் ; இரட்டுதல் ; சுழற்றுதல் ; அடித்தல் ; விரித்து நீட்டுதல் ; மிகுத்திடுதல் ; வரையாது கொடுத்தல் ; சிந்துதல் ; சிதறுதல் ; களைதல் ; செய்யாதொழிதல் ; காற்று முதலியன அடித்தல் ; பரவுதல் ; தீநாற்றம் அடித்தல் . |
வீசுவில் | துறப்பணம் இழுக்க உதவும் வில் . |
வீசுவிற்குடம் | துறப்பணக் கூடு . |
வீசேறுதல் | மேலேறுதல . |
வீசை | நாற்பது பலங்கொண்ட எடுத்தலளவை ; உதட்டின் மேற்புறத்து மயிர் . |
வீஞ்சுதல் | சொல்வதற்கு ஒவ்வாமல் போதல் ; மிகுந்தவிலை கேட்டல் . |
வீட்சணம் | பார்வை . |
வீட்சணை | பார்வை . |
வீட்டாள் | மனைவி . |
வீட்டிறப்பு | மேற்கூரையின் தாழ்ந்த பக்கம் . |
வீட்டுக்காரர் | கணவர் . |
வீட்டுக்காரன் | வீட்டுக்குரியவன் ; கணவன் . |
வீட்டுக்காரி | வீட்டுக்குடையவள் ; மனைவி . |
வீட்டுக்காரியம் | குடும்பவேலை . |
வீட்டுக்குடையவன் | வீட்டுக்குரியவன் ; குடும்பத்தலைவன் ; இராசிக்குரிய அதிபதி . |
வீட்டுக்குத்தூரம் | மகளிர் மாதவிடாய் . |
வீட்டுக்குவிலக்கு | மகளிர் மாதவிடாய் . |
வீட்டுத்தெய்வம் | குடும்பதேவதை ; காண்க : மங்கலியப்பெண்டுகள் . |
வீட்டுதல் | கொல்லுதல் ; அழித்தல் ; நீக்குதல் ; தள்ளுதல் . |
வீட்டுநெறி | வீடுபேற்றுக்குரிய வழி . |
வீட்டுப்பெண் | குடும்பத்திலே பிறந்த பெண் ; மகன் மனைவி , மருமகள் . |
வீட்டுமம் | மனவுறுதி , அச்சம் . |
வீட்டுலகம் | மேலுலகம் . |
வீட்டுவாசல் | வீட்டின் முன்புற வாயில் . |
வீட்டுவீரன் | வீட்டிலிருந்து வீரம்பேசி வெளியில் அஞ்சுவோன் . |
வீட்டுவேலை | குடும்பவேலை ; வீடுகட்டுந்தொழில் ; வீட்டில் செய்து கொணருமாறு இடப்படும் வேலை . |
வீடடைத்தல் | சாவு முதலியவற்றால் மரபற்று வீடு மூடிக்கிடக்கை . |
வீடல் | காண்க : வீடுதல் . |
வீடறுத்தல் | வழக்கு முதலியன தீர்த்தல் . |
வீடாரம் | பாசறை ; வீடு . |
வீடாவழி | வீடுவீடாக . |
வீடி | தாம்பூலம் ; காண்க : கொற்றான் . |
வீடிகை | வெற்றிலை ; வெற்றிலைச்சுருள் . |
வீடு | மனை ; விடுகை : விடுதலை ; வினைநீக்கம் ; முடிவு ; அழித்தல் ; படைப்பு ; வீடுபேறு ; துறக்கம் ; இராசி ; சதுரங்கத்தில் காய்கள் இருத்தற்குரிய இடம் ; தேற்றாமரம் ; ஒன்றைக் குறிக்கும் குழூஉக்குறி . |
வீடுகொள்ளுதல் | மீண்டும் பெறுதல் . |
வீடுசெய்தல் | துறத்தல் ; விடுதலைசெய்தல் ; வரி முதலியன விட்டுக்கொடுத்தல் ; படைத்தல் . |
வீடுசேர்தல் | அழிதல் . |
வீடுதல் | கெடுதல் ; ஒழிதல் ; சாதல் ; விடுதல் . |
வீடுதூங்கி | பிறனை அடுத்து மதிப்பிழந்து வாழ்வோன் . |
வீடுநர் | இறப்பவர் . |
வீடுபெயர்தல் | இருப்பிடம் விட்டு வேறிடஞ்செல்லுதல் . |
வீடுபேறு | முத்திநிலை . |
வீடுவாசல் | வீடும் அதைச் சார்ந்த பொருளும் . |
வீடுவித்தல் | அழிவுசெய்தல் . |
வீடெடுத்தல் | வீடுகட்டுதல் . |
வீண் | பயனின்மை ; பயனற்றது ; தேவையற்றது . |
வீண்காரியம் | பயனற்ற செயல் . |
வீண்காலம் | பயனின்றிப் போக்குங் காலம் . |
![]() |
![]() |