Word

English & Tamil Meaning
பொருள்

அகுவைக்கட்டி akuvai-k-kaṭṭi
n.
Veneral tumor in the groin, bubo;
அரை யாப்பு. (சங்.அக.)

அகை 1 - தல் akai-
4 v.intr.
1. To flourish;
செழித்தல். கயமகைய வயனிறைக்கும் (மதுரைக்.92).

2. To sprout;
தளிர்த்தல். கொய்குழை யகைகாஞ்சி (கலித். 74).

3. To burn;
எரிதல். அகையெரி யானாது (கலித். 139,26).

4. To suffer;
வருந்துதல். அகையே லமர்தோழி (சீவக.1524).

5. To delay;
தாமதித்தல். அகையா தெனதாவி தழைக்குமென (சீவக.1379).

6. To be crumpled, broken;
ஒடிதல். அகைந்த வித்துணை மலரெனக் கருளுதி யென்றாள். (பாரத.புட்பயாத். 40).

அகை 2 - த்தல் akai-
11 v.intr. caus. of அகை-.
1. To sprout;
கிளைத்தல். குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த (புறநா. 159).

2. To rise;
எழுதல். (சூடா.)

3. To proceed at intervals;
விட்டுவிட்டுச் செல்லுதல். (தொல்.பொ. 541, உரை.)

1. To trouble, oppress;
வேதனை செய்தல். (சூடா.)

2. To drive, cause to go, send forth;
செலுத்துதல். (சூடா.)

3. To beat;
அடித்தல். (பிங்.)

4. To break;
முறித்தல். (மலைபடு. 429.)

5. To cut into pieces;
அறுத்தல். (சீவக.2766.)

6. To raise;
உயர்த்துதல். (சூடா.)

அகை 3 akai
n. <அகை2-.
Component part;
கூறுபாடு. அகையார்ந் திலங்கும் (சீவக. 2694).

அகைப்பு akaippu
n. <id.
1. Rising, elevation;
எழுச்சி.

2. Result of effort, effect of will;
பிரயத்னத்தாலுண்டானது. அண்டந் திருமாலகைப்பு (திவ்.இயற். 4,37).

3. Esteem;
மதிப்பு. அகைப்பில் மனிசரை (திவ்.இயற். 4,38).

4. Moving with intervals of stopping;
இடைவிட்டுச் செல்லுகை. அகைப்பு வண்ணம் (தொல்.பொ. 541).

அகைப்புவண்ணம் akaippu-vaṇṇam
n. <id.+. (Pros.)
Rhythm produced by varying groups of syllables, as short after long;
ஒருவழி நெடிலும் ஒருவழிக்குறிலும் பயின்று விட்டுவிட்டுச் செல்லுஞ் சந்தம். (தொல்.பொ.541.)

அகோ akō
int. <ahō.
An exclamation of wonder, grief, contempt;
ஆச்சரியம், துக்கம், இகழ்ச்சி என்றிவற்றை யுணர்த்தும் குறிப்புமொழி. மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை யகோவெனவும் (தாயு.மண்டல.1).

அகோதாரை akōtārai
n. prob. ahōdhārā.
Pouring in torrents, as rain;
மிகப்பொழிகை. (W.)

அகோபிலம் akōpilam
n. <Ahō-bila.
Name of a Vaiṣṇava shrine in Karnūl;
சிங்கவேள் குன்றம் என்னுந் திருப்பதி. சொலகோபில நரசிங்கம் (திருச்செந்.பு. 18,43)

அகோரசிவாசாரியர் akōra-civācāriyar
n. <a-ghōra+
Name of a spiritual preceptor, author of Saiva book of ritual;
சைவபத்ததி இயற்றியவருள் ஒருவர்.

அகோரம் akōram
n. <a-ghōra.
1. Fierceness, formidableness;
உக்கிரம். (திருநெல்.பு.சுவேத. 88)

2. Face of Siva which is turned southward, one of five civaṉ-mukam, q.v.;
சிவன்முகத்தொன்று. (சிவதரு.பரிகார.89.)

3. A Saiva mantra;
ஒரு சைவமந்திரம். (சைவச.பொது.324.)

அகோரன் akōraṉ
n. <id.
Siva, as formidable;
சிவன். (சூத.எக்கி.பூ. 33,2.)

அகோராத்திரம் akōrāttiram
n. <ahōrātra.
Day and night;
இரவும் பகலும்.

அகோரி akōri
n.
Species of Hugonia. See மோதிரக்கண்ணி.
(L.)

அகௌரவம் a-kauravam
n. <a-gaurava.
Degradation, dishonour;
அவமரியாதை. அங்கேபோய் அவன் அகௌரவமடைந்தான்.

அங்கக்களரி aṅka-k-kaḷari
n. <aṅka+.
Honours to liberal donors, in a temple;
கோயிலிற் றருமஞ் செய்தோர்க்குச் செய்யும் மரியாதை. Loc.

அங்கக்காரன் aṅka-k-kāraṉ
n. <aṅga+.
1. Dandy, fop;
அழகுபடுத்திக் கொள்வோன். (சம்.அக.)

2. Masquerader;
வேஷதாரி. அங்கக்காரன்றுதிப்பும் (ஒழிவி.துறவு. 19)

அங்கக்கிரியை aṅka-k-kiriyai
n. <id.+. (Nāṭya.)
Gesticulation in dancing;
மெய்யாற் செய்யுங் கூத்துத்தொழில். (சிலப். 3,12,உரை.)

அங்ககணிதம் aṅka-kaṇitam
n. <aṅka+.
Arithmetic;
எண்கணக்கு.

அங்ககாரம் aṅka-kāram
n. <aṅga+.
A mode of dancing;
நாட்டிய வகை. (திருவிளை.கான்மா.9.)

அங்ககீனம் aṅkakīṉam
n. <id.+. hīna.
Bodily defect, deformity;
உறுப்புக்குறைவு.

அங்கசங்கம் aṅka-caṅkam
n. redupl. of aṅga.
Ostentation, foppery;
பகட்டு. அவன் அங்கசங்கமாயுள்ளவன். (Loc.)

அங்கசன் aṅkacaṉ
n. <aṅga-ja.
Kāma, as born in the mind;
மன்மதன். (பிங்.)

அங்கசாதனம் aṅka-aātaṉam
n. <aṅka+
Sign, mark;
அடையாளம். Colloq. (W.)

அங்கசாதனம்பிடி - த்தல் aṅka-cātaṉampiṭi-.
v. intr. <id.+
To find out anything by signs or circumstances, fixing suspicion upon one;
துப்புக் கண்டுபிடித்தல். (w.)

அங்கசாலைக்காரன் aṅka-cālaikkāraṉ
n. <aṅga+.
Village servant who, by order of the headman, assembles the villagers and procures things wanted;
கிராமப்பணி செய்வோன். (R.)

 
18