Word

English & Tamil Meaning
பொருள்

அகாரணம் a-kāraṇam
n. <a-kārana.
Absence of cause;
காரணமின்மை. அகாரணத்தெதிர்த்தீர் (காஞ்சிப்பு.தக்கீச.12).

அகாரணன் a-kāraṇaṉ
n. <id.
God, as uncaused;
கடவுள்.

அகாரம் akāram
n. <agāra.
House;
வீடு. (பிங்.)

அகாரியம் a-kāriyam
n. <a-kārya.
Improper act, unworthy deed, criminal or sinful action;
தகாத செய்கை, நாவகாரியஞ் சொல்லிலாதவர் (திவ்.பெரியாழ்.4,4,1).

அகாலபோசனம் akāla-pōcaṉam
n. <a-kāla+.
Untimely meal;
காலந்தவறி யுண்னும் உணவு. (பதார்த்த. 1335.)

அகாலம் a-kālam
n. <akāla.
Inauspicious or unseasonable time;
காலமல்லாத காலம். (ஞானவா.பிரகலாத.61.)

அகாலமரணம் akāla-maraṇam
n. <id.+.
Untimely death;
காலமல்லாத காலத்து நேரும் மரணம்.

அகாலமிருத்து akāla-miruttu
n. <id.+.
See அகாலமரணம்.
.

அகி 1 aki
n. <ahi.
Snake;
பாம்பு. கடியகிப்பிணி தீர்ந்ததன்பின் (சேதுபு. இராமனருச்.30).

அகி 2 aki
n. cf. ayas.
Iron;
இரும்பு. (பிங்.)

அகிஞ்சனன் akicaṉaṉ
n. <a-kicana.
Destitute person;
தரித்திரன். (பிங்.)

அகிஞ்சை akicai
n. <a-himsā.
Harmlessness, abstaining from killing or giving pain;
துனபபஞ்செய்யாமை. (சங்.அக.)

அகிதம் akitam
n. <a-hita.
1. That which is unfit, unsuitable;
தகாதது. (தாயு.எங்குநிறை.1.)

2. Evil, harm;
தீமை. அகித மொருவர்க்கு மெண்ணிலாதோர் (திருவேங்.சத.87).

3. Obstruction;
இடையூறு. இந்தத் தன்மத்துக்கு அகிதம் பண்ணினவன் (S.I.I.ii, 499).

அகிதலம் aki-talam
n. <ahi+.
Serpent world in the nether regions;
நாகலோகம். அகிதலவரவினது (இரகு.யாகப். 79).

அகிதன் akitaṉ
n. <a-hita.
Foe, enemy;
பகைவன். (யாழ்.அக.)

அகிமரால் akimarāl
n. <ahimāra.
Panicled babul. See வெள்வேல்.
(மலை.)

அகிர்ப்புத்தினி akir-p-puttiṉi
n. <ahir-budhnya. (Astrol.)
The third of 15 divisions of night;
இரவு 15 முகூர்த்தத்துள் மூன்றாவது. (விதான.குணா.73,உரை.)

அகிருத்தியம் a-kiruttiyam
n. <a-krtya.
That which ought not to be done, crime;
செய்யத்தகாத செயல்.

அகில் akil
n. <agaru. [M,akil, Heb.ahalim,Gr.agallochon.]
1. Eagle-wood, l.tr., Aquilaria agallocha;
ஒருவகை வாசனை மரம்.

2. The drug agar, obtained from the trunk and branches of eagle-wood when they become gorged with a dark resinous aromatic juice, one of six tūpa-varkkam, q.v.; 3. Blinding-tree. See தில்லை. (L.) 4. Chittagong wood, l.tr., Chickrassia tabularis;
தூபவர்க்கங்களொன்று. (சீவக.534). 3. தில்லை. 4.மலைவேம்பு. (K.R.)

அகிலம் akilam
n. <a-khila.
1. The whole, all;
முழுவதும். (திவா.)

2. Universe;
பிரபஞ்சம் முழுதும். அகிலத்துள்ளதோர் கணங்களும் (கந்தபு.பார்ப்.9)

3. Earth;
பூமி. எந்தைதன் னேவலா லகிலந் துறந்தவாறென (இரகு.சீதைவ.72).

4. Water;
நீர். (பிங்.)

அகிற்குடம் akiṟ-kuṭam
n. <agaru+.
Vessel bearing agar incense;
தூபக்குடம். அகிற்குடம் பரப்பி (சீவக.2391).

அகிற்கூட்டு akiṟ-kūṭṭu
n. <id.+.
Perfume compounded of camphor, agar, sandal, honey, and spices;
ஒருவகை வாசனைக் கலவை. உந்துசந் தனங்கர்ப்பூர முடனெரி காசு செந்தே, னந்தவேலங்க ளென்ப வகிற்கூட்டு (சூடா.12,36).

அகீர்த்தி akīrtti
n. <a-kīrti.
Ill-fame, disgrace;
அபகீர்த்தி.

அகுசலவேதனை a-kucala-vētaṉai
n. <a-kusala+. (Buddh.)
Experience of sorrow;
துக்கவுணர்ச்சி.

அகுட்டம் akuṭṭam
n. cf. krṣṇa.
Black pepper. See மிளகு.
(W.)

அகுடம் akuṭam
n. cf. kaṭu.
Black hellebore. See கடுகுரோகணி.
(மலை.)

அகுணம் akuṇam
n. <a-guṇa.
1. Want of attributes, as a characteristic of the Deity;
நீர்க்குணம்.

2. Bad quality, defect;
தீக்குணம். குணாகுணங்கள்.

அகுணியகில் akuṇiyakil
n.
Cup-calyxed white cedar. See செம்பில்.
(L.)

அகுதார் aku-tār
n. <U. Haq-dār.
Holder of a right, one in whom any property, perquisite or privilege is vested;
உரிமையாளி.

அகுதி akuti
n. <a-gati.
Destitute, helpless person;
கதியிலி. அகுதியிவ டலையின்விதி, யானாலும் விலகரிது (திருப்பு,142). Vul.

அகும்பை akumpai
n.
Species of Trichodesma. See கவிழ்தும்பை.
(மலை.)

அகுலி akuli
n.
See நறுவிலி.
(மலை.)

 
17