Word

English & Tamil Meaning
பொருள்

அகழான் akaḻāṉ
n. <id.
Field rat. See அகழெலி.
அகழானெடுத்தல் (W.)

அகழி 1 akaḻi
n. <id. [T.agadta.K. agaḻu.]
Ditch surrounding a fortification, moat;
கோட்டையைச் சூழ்ந்துள்ள கிடங்கு. அகழி சூழ் போகி (சிலப்.13, 183).

அகழி 2 akaḻi
n. cf. அகல்-.
Pot with a large mouth;
வாயகன்ற பாத்திரம். ஓரகழி பெய்ததற்பின் (தைலவ.தைல.94).

அகழெலி akaḻ-eli
n. <அகழ்-+.
Field rat, Millardia meltada;
எலிவகை. (பிங்.)

அகளங்கம் a-kaḷaṅkam
n. <a-kaḷaṅka.
1. Spotlessness;
மாசின்மை. அகளங்க வுருவுடையனாகலின் (செங்கழு.விநா.பிள்.அம்.2).

2. A mineral poison;
சீதாங்கபாஷாணம். (மூ.அ.)

அகளங்கன் a-kaḷaṅkaṉ
n. <id.
1. One free from impurity;
களங்கமற்றவன். அகளங்கன்னக னனாதி (நல்.பாரத.கௌசிக.77).

2. Buddha;
புத்தன். (திவா.)

அகளம் 1 akaḷam
n. cf. அகல்-.
1. Jar;
சாடி. (பிங்.)

2. Large earthen pot;
மிடா. (திவா.)

3. Bucket;
நீர்ச்சால். அகளத் தன்ன நிறைசுனை (மலைபடு.104).

4. Body of the lute, as shaped like a bowl;
யாழின் பத்தர். வகையமை யகளத்து (சிறுபாண். 224).

அகளம் 2 akaḷam
n. <a-kala.
Incorporeity;
நிஷ்களம். அகளமெய் வடிவானந்த... கூத்தன். (காஞ்சிப்பு.திருக்கண்.281).

அகற்சி akaṟci
n. <அகல்-.
1. Breadth;
அகலம். அன்ன மாபெருங் கயிலையி னகற்சியு நிவப்பும் (உபதேசகா கைலை.14).

2. Ascetic life;
துறவறம். அருளொடு புணர்ந்த வகற்சியானும் (தொல்.பொ.76).

3. Separation;
பிரிவு. அயலோராயினு மகற்சி மேற்றே (தொல்.பொ.38).

அகற்பப்பிராணாயாமம் akaṟpa-p-pirāṇāyāmam
n. <a-kalpa+.
Restraint of breath, practised without the use of mantras or meditation;
மந்திர தியானங்களின்றிச் செய்யப்படும் பிராணாயாமம். (சிவதரு.சிவஞானயோ. 66, உரை.)

அகற்பவிபூதி a-kaṟpa-vipūti
n. <id.+.
Sacred ashes found in nature;
இயற்கையிலுண்டான விபூதி. (சைவச.பொது.186,உரை.)

அகற்பன் a-kaṟpaṉ
n. <a-kalpa.
One who is incomparable;
ஒப்பில்லாதவன். கற்பவர்கணற்புலனில் நிற்புறு மகற்பா (சேதுபு.சருவதீ.27.)

அகற்றல் akaṟṟal
n. <அகற்று-.
Magic art of causing a person to quit his place. See உச்சாடனம்.
(திருக்காளத்.பு. 33,23.)

அகற்று - தல் akaṟṟu-
5 v.tr. caus. of அகல்-.
1. To remove, expel, banish;
நீக்குதல். இன்பம் பெருக்கி யிருளகற்றி (திருவாச. 47,11).

2. To widen, broaden, extend;
விசாலமாக்குதல். களிறுசென்று களனகற்றவும் (புறநா. 263).

அகறல் akaṟal
n. <அகல்-.
Extension;
அகலம். (சூடா.)

அகன்மகம் a-kaṉmakam
n. <a-kar-maka.
Intransitive verb;
செயப்படுபொருள் குன்றிய வினை. (பி.வி. 35,உரை.)

அகன்மணி akaṉ-maṇi
n. <அகல்-+.
Large superior gem;
அகன்ற உயர் மணி. (திவா.)

அகன்றிசைப்பு akaṉṟicaippu
n. <அகல்-+இசை2-.
Defect in poetical composition which consists in introducing prose in the course of a verse;
யாப்பு முறையினின்று அகன்று காட்டும் குற்றம். (யாப்.வி.95,பக்.403.)

அகன்னியகனி akaṉṉiyakaṉi
adv. <ahani+ahani.
Daily, from day to day;
அன்றன்று.

அகனைந்திணை akaṉ-ain-tiṇai
n. <அகம்+.
The five forms of love, viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை;
குறிஞ்சி முதலிய ஐந்திணை. (தொல்.பொ.54.)

அகஸ்தியநட்சத்திரம் akastiya-naṭcattiram
n. <Agastya+.
The star Canopus.
.

அகஸ்தியன் akastiyaṉ
n. <Agastya.
Agastya. See அகத்தியன்.
.

அகஸ்மாத் akasmāt
adv. <a-kasmāt.
Causelessly, by chance, unexpectedly;
தற்செயலாய். அவனை அகஸ்மாத்தாய்ச் சந்தித்தேன். Colloq.

அகாடி akāṭi
n. <U. agāri.
1. Front;
முன்.

2.Rope used for tying a horse's forefeet;
குதிரை முன்னங்காற் கயிறு. (W.)

அகாடிபிச்சாடியில்லாதவன் akāṭi-piccāṭi-y-illātavaṉ
n. <id.+. U. pichwāre+.
Person free from all responsibility, as a horse bound neither before nor behind;
கட்டுக்கடங்காதவன். Colloq.

அகாதம் akātam
n. <a-gādha.
1. Great depth;
மிக்க ஆழம். (அஷ்டப்.அழகரக். 15)

2. Water of swimming depth;
நீந்துபுனல். (பிங்.)

3. Excess;
மிகுதி. அகாத விலை.

அகாதிகள் akātikaḷ
n. <aghātin. (Jaina.)
Unobstructive karmas helpful in emancipation, four in number, viz.,
ஆயுஷ்யம், வேதனீயம், கோத்திரம், நாமம்; முத்தி சாதகமாகிய கர்மங்கள். தீர்ப்ப தகாதிகள் (திருநூற்.88)

அகாமவினை a-kāma-viṉai
n. <a-kāma+.
Unintentional action;
அபுத்திபூர்வமான செயல். கிருகபதி யகாம வினையினுக்குப் பரிகாரம் பகர்ந்திடுவர் (சிவதரு.பரிகார.2).

 
16