Word

English & Tamil Meaning
பொருள்

அகவல்விருத்தம் akaval-viruttam
n. <id.+.
Stanza of four lines of equal length, each line containing not less than six feet;
ஆசிரியவிருத்தம். (இலக்.வி.845.)

அகவலன் akavalaṉ
n. <id.+.
Bard of the Pāṇar caste;
பாணன். களம்வாழ்த்து மகலவன் (பதிற்றுப்.43).

அகவலுரிச்சீர் akaval-uri-c-cīr
n. <id.+.
Metrical feet of two syllables each, chiefly found in āciriya-p-pā, viz.,
நேர்நேர் (- -), நிரைநேர் (== -), நிரைநிரை (====), நேர்நிரை (-==). (காரிகை.உறுப்.10).

அகவலைப்படுத்து - தல் aka-valai-p-paṭuttu-
v.tr. <அகம்1+.
1. To cause to fall into a net;
வலையி லகப்படுதல். (சம்.அக.)

2. To bring under one's power;
வசப்படுத்துதல். (திவ்.திருவாய்.6,2,9.)

அகவலோசை akaval-ōcai
n. <அகவல்+.
Rhythm peculiar to akaval metre;
ஆசிரியப்பாவிற்குரிய ஓசை. (இலக்.வி.732,உரை.)

அகவற்சுரிதகம் akavaṟ-curitakam
n. <id.+.
Last member of certain kinds of kali verse. See ஆசிரியச் சுரிதகம்.
.

அகவற்பா akavaṟ-pā
n. <id.+.
One of four chief kinds of verse;
ஆசிரியப்பா.

அகவற்றாழிசை akavaṟṟāḻicai
n. <id.+. தாழிசை.
Variety of akaval verse containing three lines of equal length. See ஆசிரியத்தாழிசை.
(யாப்.வி.75.)

அகவற்றுறை akavaṟṟuṟai
n. <id.+. துறை.
Variety of akaval verse of four lines in which the middle lines may differ in length from the first or last line;
ஆசிரியத்துறை. (யாப்.வி.75.)

அகவற்றுள்ளல் akavaṟṟuḷḷal
n. <id.+. துள்ளல்.
A rhythm in kali metre;
வெண்டளையுங் கலித்தளையுங் கலந்துவருந் துள்ளலோசை. (காரிகை.செய் 1,உரை.)

அகவற்றூங்கல் akavaṟṟūṅkal
n. <id.+ தூங்கல்.
A rhythm in vaci metre;
ஒன்றாத வஞ்சித்தளையான் வருந் தூங்கலோசை. (காரிகை.செய்.1,உரை.)

அகவன்மகள் akavaṉ-makaḷ
n. <id.+.
Female bard of the Pāṇar caste;
பாண்மகள். (குறுந்.298.)

அகவாய் aka-vāy
n. <அகம்+.
Interior, inside;
உள்ளிடம். அகவாயிற் பெருச்சாளி (திவ்.திருமாலை, 7,வ்யா.35).

அகவாயில் aka-vāyil
n. <id.+.
Mind;
மனம். அகவாயி லெண்ணத்தி னேற்ற மறிந்து (குருபரம்.258).

அகவிதழ் aka-v-itaḻ
n. <id.+.
Inner petal of a flower;
உள்ளிதழ். (கலித்.77,7.)

அகவிருள் aka-v-iruḷ
n. <id.+.
Spiritual ignorance, as inner darkness;
அஞ்ஞானம். அகவிருட் பானு (திருவேங்.சத.தனியன்).

அகவிலை 1 aka-v-ilai
n. id.+.
Inner petal of a flower;
உள்ளிதழ். அகவிலை யாம்பல் (தேவா.511,8).

அகவிலை 2 aka-vilai
n. <அஃகம்1+.
Price of grain;
தானிய விலை. நெல்லு மகவிலை குறைந்து (திருநெல்.பு.நெல்லு.4).

அகவு 1 - தல் akavu-
5 v.intr. cf. ā-hvē.
1. To utter sound, as a peacock;
ஒலித்தல். பல் பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ (திருமுரு.122).

2. To sing;
பாடுதல். (பதிற்றுப்.43.)

3. To dance, as a peacock;
கூத்தாடுதல். (பிங்.)

4. To become long, lengthen out; to call, summon;
நெடுமையாதல். (ஈடு, 6,2,9.) அழைத்தல். (பிங்.)

அகவு 2 akavu
n.
Species of Withania. See அமுக்கிரா.
(மூ.அ.)

அகவுநர் akavunar
n. <அகவு-.
1. Dancers;
ஆடுபவர்.

2. Singers;
பாடுபவர். அகவுநர் நாநவில் பாடல் (பரிபா.15,42).

அகவுயிர் aka-v-uyir
n. <அகம்1+.
Indwelling soul;
உடம்பினு ளூயிர். என தகவுயிர்க் கமுதே யென்னும் (திவ்.திருவாய்.2,4,6).

அகவேற்றம் aka-v-ēṟṟam
n. <அகம்1+.
Dearth of grain, rise in the price of grain;
தானியவிலை யுயர்கை. Loc.

அகவை akavai
n. <அகம்1.
1. Inside;
உள்ளிடம். ஆயகானத் தகவையுள் (உபதேசகா.சிவவி. 143).

2. Age within a certain limit; A loc. ending;
உட்பட்ட பிராயம். ஈராறாண்டகவையாள் (சிலப்.மங்கலவாழ்).; ஏழாவதனுருபு. ஆடித்திங்க ளகவையின் (சிலப்.உரைபெறுகட்.3).

அகழ் 1 - தல் akaḻ-
4 v.tr. [K.agaḻ]
1. To excavate, dig out;
தோண்டுதல். அகழ்வாரைத்தாங்கு நிலம்போல் (குறள்,151).

2. To pluck out, as an eye;
பிடுங்குதல். தனதுகண் ணகழ்ந்து (திருக்காளத்.பு.6, 36).

3. To uproot;
அடியோடு களைதல். (சூத.சிவ.13,31.)

அகழ் 2 akaḻ
n. <அகழ்-. [K.agaḻ]
1. Moat;
அகழி. வையையு மொருபுறத் தகழாம் (திருவிளை. திருநகரப்.17).

2. Tank, reservoir;
குளம் நீர்நசைஇக் குழித்த வகழ் (பெரும்பாண்.108).

 
15