Word

English & Tamil Meaning
பொருள்

அகரு akaru
n. <agaru.
Eagle-wood, l.tr., Aquilaria agallocha;
அகில். (பரிபா.12,5.)

அகருமகம் akarumakam
n. <a-kar-maka.
Intransitive verb;
செயப்படுபொருள் குன்றியவினை. (வீரசோ.தாது.2,உரை.)

அகல் 1 - தல் akal-
3 v.intr.[K.agal,M.akaluka.]
1. To leave, vanish;
நீங்குதல், பாயிருளகல (புறநா.25).

2. To separate, part;
பிரிதல். அகன்ற பூங்கொடியை (பாரத.குரு.79).

3. To pass beyond, cross, leap over;
கடத்தல். (திவா.)

4. To increase, develop, grow, progress;
விருத்தியடைதல் (குறள்,170.)

5. To spread, widen, extend;
விசாலித்தல். (புறநா.3,16.)

அகல் 2 akal
n. <அகல்-.
1. Small earthen pot, as having a wide mouth;
சட்டி. காரகற்கூவியன் (பெரும்பாண். 377).

2. Hallow earthen lamp;
விளக்குத் தகழி. திருவிளக்குத் திரியிட்டங் ககல்பரப்பி (பெரியபு.கலிய.15).

3. A measure of capacity;
ஓர் அளவு. (தொல்.எழுத்.170,உரை.)

4. Toothed-leaved tree of heaven. See பெருமரம். (W.)
.

5. Panicled babul. See வெள்வேல்.
(சங்.அக.)

அகல்லியமாமிசம் akalliya-māmicam
n. <a-kalya+.
Meat not dressed;
சமைக்கப்படாத மாமிசம். (சி.சி.பர.சௌத்.29,வேலப்.)

அகல்வட்டம் akal-vaṭṭam
n. <அகல்-+.
Large halo around the sun or moon;
பெரும் பரிவேடம். அகல்வட்டம் பகல்மழை.

அகலக்கட்டை akala-k-kaṭṭai
n. <அகலம்+.
That which lacks width, ordinarily applied to cloth;
அகலக்குறைவுடையது.

அகலக்கவி akala-k-kavi
n. <id.+.
1. Voluminous work of poetry. See வித்தாரகவி.
(இலக்.வி.767,உரை.)

2. Poet who composes a voluminous work;
அகலக்கவி பாடுவோன். (வெண்பாப்.செய்.5,உரை.)

அகலக்கால்வை - த்தல் akala-k-kāl-vai-
v.intr. <அகல்-+.
To go beyond bounds, as in expense;
அளவுகடந்துபோதல். colloq.

அகலத்தேடு - தல் akala-t-tēṭu-
v.intr. <id.+.
To seek escape;
நீங்க வகை பார்த்தல். அவன்றான் அகலத்தேடிலும் (திவ்.திருவாய். பன்னீ.)

அகலப்பா akala-p-pā
n. <அகலம்+
Voluminous work of poetry;
வித்தாரகவி. ஈங்க கலப்பாக்க ளிரண்டாகும் (வெண்பாப்.செய்.5).

அகலம் akalam
n. <அகல்-. [M.akalam.]
1. Width;
குறுக்ககலம். ஆடையி னகலம்.

2. Extent, expanse;
பரப்பு. சென்னியகல முப்பா னிராயிரமாம் (கந்தபு.அண்ட.29).

3. Earth;
பூமி. (அக.நி.)

4. Sky, atmosphere;
ஆகாயம். (பிங்.)

5.Elaborate commentary;
விருத்தியுரை. (தொல்.பாயி.உரை.)

6. Voluminous work of poetry;
வித்தாரகவி. ஆசு மதுரஞ் சித்திர மகலம் (இலக்.வி.763).

7. Breast, chest;
மார்பு. மலைப்பரு மகலம் (புறநா.78).

8. Greatness;
பெருமை. (பரிபா. 4,30.)

அகலவாய்ச்சி akala-vāycci
n. <அகலம்+.
Howel, cooper's tool for smoothing work, as in the inside of a cask;
வாய்ச்சிக்கருவிவகை.

அகலவுரை akala-v-urai
n. <id.+.
Elaborate commentary;
விரிவாக எழுதும் உரை. (இறை.1,14, உரை.)

அகலறை akal-aṟai
n. <அகல்-+.
1. Military camp;
பாசறை. (பட்டினப். 237.)

2. Slope of a hill;
மலைப்பக்கம். (பட்டினப். 237,உரை.)

அகலன் akalaṉ
n. <id.
Member of the untouchable class;
தீண்டாதவன். (சம்.அக.)

அகலி 1 - த்தல் akali1-
11 v.intr. <அகலம்.
To broaden out, enlarge;
பெருகுதல். அகலியா வினையல்லல் போயறும் (தேவா.75,1).

அகலி 2 akali
n.
See அகலியை.
அகலிமெய்க் கேள்வன் (நல்.பாரத. கிருட்டிணார்ச்சுன.99).

அகலிகை akalikai
n. <Ahalyā.
See அகலியை.
(கம்பரா.அகலி.72)

அகலிடம் akal-iṭam
n. <அகல்-+.
Earth, as a wide place;
பூமி. அகலிட நீரேற்றான் (தேவா.533,9).

அகலியம் akaliyam
n.
Tree;
மரம். (பிங்.)

அகலிய akaliya
adj. <அகல்-,
Broad, wide;
அகன்ற

அகலியை akaliyai
n. <Ahalyā.
Ahalyā, wife of Gautama, one of paca-kaṉṉiyar, q.v.;
கௌதமர் மனைவி.

அகலுள் akal-uḷ
n. <அகல்-.
1. Width, breadth;
அகலம். (திவா.)

2. Street;
தெரு. (சிலப்.1,47,உரை.)

3. Town, village;
ஊர். (திவா.)

4. Country;
நாடு. (திவா.)

5. Earth;
பூமி. (ஆ.நி.)

6. Greatness;
பெருமை. (திவா.)

அகவடி aka-v-aṭi
n. <அகம்1+.
Sole of foot;
உள்ளங்கால். அகவடி யங்கை (திருவிளை.உக்கிரபா. 41).

அகவர் 1 akavar
n. <id.
People of a country;
நாட்டில் வாழ்வார். (பொருந.220.)

அகவர் 2 akavar
n. <அகவு-.
Bards who rouse the king from sleep with songs in the morning;
சூதர். நாளீண்டிய நல்லகவர் (மதுரைக்.223).

அகவல் akaval
n. <id.
1. Calling, addressing;
அழைக்கை. (பிங்.)

2. High tone, acute accent;
எடுத்தலோசை. (பிங்.)

3. Rhythm peculiar to akaval metre;
அகவற்பாவுக்குரிய ஓசை. (காரிகை. செய்.1.)

4. One of four chief kinds of metre;
ஆசிரியப்பா. (தொல்.பொ. 393.)

5. Screech of the peacock;
மயிற்குரல். (பிங்.)

6. Dancing;
கூத்தாடல். (பிங்.)

 
14