Word

English & Tamil Meaning
பொருள்

அகமகன் aka-makaṉ
n. <அகம்1 +.
Gaṇēša, son of Siva, as found in every house;
பிள்ளையார். (சம்.அக.)

அகமகிழ்ச்சி aka-makiḻcci
n. <id.+.
Joy, inward happiness;
மனக்களிப்பு. (பிரபோத. 27,33)

அகமம் akamam
n. <agama.
Tree;
மரம். (உரி.நி.)

அகமரி - த்தல் akamari-
v.intr. <அகம்1+மரி-.
To die in the womb;
வயிற்றுள் இறத்தல். (ஜீவரட்.207.)

அகமருடணம் akamaruṭaṇam
n. <agha-marṣaṇa.
1. Name of a particular Vedic hymn, as sin-effacing;
வேதமந்திர விசேடம். (சூத.எக்கி.பூ. 42,13.)

2. Ablution, holding the right hand containing water upto the nose while repeating the above Vedic hymn;
அகமருடண மந்திர மோதிச் செய்யும் ஸ்நானம்.

அகமருடம் akamaruṭam
n.
See அகமருடணம். 2.
(பெரியபு.திருஞான.60.)

அகமலர்ச்சி aka-malarcci
n. <அகம்1+.
Joy, happiness, as blossoming of the mind;
மனமகிழ்ச்சி. (திவா.)

அகமலர்ச்சியணி aka-malarcci-y-aṇi
n. <id.+.
Figure of speech in which the excellences and defects of one object are brought out through a reference to the same in another object;
உல்லாசாலங்காரம். (அணியி.69.)

அகமாட்சி aka-māṭci
n. <id.+.
Good qualities and deeds befitting the life of a house-holder;
இல்லறத்திற்குரிய நற்குண நற்செயல்கள். (உபதேசகா.சூராதி. 77.)

அகமார்க்கம் aka-mārkkam
n. <id.+.
1. A high style of singing, difficult to attain;
அருமையிற்பாடல். (பிங்.)

2. Exposition, by gesture and dancing, of the three guṇas, viz., sattva, rajas, tamas;
முக்குணம் பற்றிவரும் மெய்க்கூத்து. (சிலப்.3,12,உரை.)

அகமுகமா - தல் aka-mukamā-
n. <id.+.
To be turned or pointed inward;
உள் நோக்குதல். அகமுகமாந் தொடர்பால் (ஞானவா.சுரகு.12).

அகமுடையாள் aka-muṭaiyāḷ
n.
Fem. of அகமுடையான்.
.

அகமுடையான் akam-uṭaiyāṉ
n. <id.+.
Husband, as master of the house;
கணவன்.

அகமுழவு aka-muḻavu
n. <id.+.
Superior kind of drum, varieties of which are;
மத்தளம், மல்லிகை, இடக்கை, கரடிகை. பேரிகை, படகம், குடமுழா; உத்தமமான வாச்சியம். (சிலப்.3,27, உரை.)

அகமொடுக்கு aka-moṭukku
n. <id.+.
Pole for a creeper;
கொள்கொம்பு. (சம்.அக.)

அகர்க்கணனம் akar-k-kaṇaṉam
n. <ahan+. (Astron.)
Total number of days calculated from the beginning of the kali-yuga until a certain period;
கலியுகாதி தொடங்கிக் குறித்தகாலம்வரை கணித்தெடுத்த தினசங்கியை.

அகர்த்தவியம் a-karttaviyam
n. <a-kartavya.
That which ought not to be done;
செய்யத்தகாதது. கர்த்தவிய வகர்த்தவிய விடய மாயினவால் (சூத.எக்கி.பூ.10,20).

அகர்த்தா a-karttā
n. <a-kartā.
One who is not agent;
கர்த்தாவல்லாதவன். பிரஹ்மலித்தானவன் கர்மத்தில் அகர்த்தா என்னும் புத்தியால் (விசாரசா.)

அகர்த்திருவாதம் a-karttiru-vātam
n. <a-kartr+vāda.
System of thought which denies the existence of a creator;
சிருஷ்டிகர்த்தா இல்லை என்னும் வாதம். (சி.சி.பர.சௌத்.1, உரை.)

அகர்முகம் akarmukam
n. <ahan+mukha.
Early dawn;
வைகறை. ஆறுமடுவில் அகர்முகமப் பாடுநர்க்கு (தைலவ.பாயி.53).

அகரம் 1 a-karam
<அ+கரம் n.
The letter அ.
.

அகரம் 2 akaram
n. cf. amara.
Mercury, quicksilver;
பாதரசம். (W.)

அகரம் 3 akaram
n. <agrahāra.
Brāhman street. See அக்கிரகாரம்.
(ஈடு,10,9,4.)

அகரம் 4 akaram
n. cf. nagara.
Town;
ஊர். (பிங்.)

அகரமேற்று - தல் akaram-ēṟṟu-
v.intr. <அகரம்3+.
To establish a colony of Brāhmans;
அந்தணரைக் குடியேற்றுதல் அகரமேற்றி நன்றிகொடேவதான நல்கி (திருவாலவா.48,22).

அகராதி akarāti
n. <அகரம்1+ ādi.
Dictionary, as giving words arranged alphabetically with meanings;
சொற்களை அகரமுதலாக வரிசைப் படுத்திப் பொருள்விளக்கும் நூல்.

அகராதிக்கிரமம் akarāti-k-kiramam
n. <id.+.
Alphabetical order;
அகரமுதலாகவரும் முறை.

அகராதிநிகண்டு akarāti-nikaṇṭu
n. <id.+.
Name of a thesaurus in verse, as giving the words in alphabetical order, by Citampara-rēvaṇa-cittar, A.D.1594;
ஒரு நிகண்டு நூல்.

அகராதிபடித்தவன் akarāti-paṭittavaṉ
n. <id.+.
1. Very learned person, used ironically;
அதிகங்கற்றவன். Loc.

2. Punster;
சொன்ன கருத்தைவிட்டு வேறு கருத்துக்கொள்பவன். அவன் பெரிய அகராதி படித்தவன், அவனோடு பேசாதே. Loc.

 
13