Word

English & Tamil Meaning
பொருள்

அகப்பைசொருகி akappai-coruki
n. <id.+.
Perforated frame for holding ladles, the handles being inserted in the perforations;
அகப்பைகள் சொருகிவைக்குஞ் சட்டம். Colloq.

அகப்பொருட்கோவை aka-p-poruṭ-kōvai
n. <அகம்.+.
Work which treats of love-themes in kaṭṭaḷai-k-kalittuṟai metre;
அகப்பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம். (இலக்.வி.816.)

அகப்பொருட்டுறை aka-p-poruṭṭuṟai
n. <id.+. பொருள்+துறை.
Themes of love-poetry;
அகப்பாட்டுறுப்புள் ஒன்று.

அகப்பொருள் aka-p-poruḷ
n. <id.+.
1. Love-theme;
அகத்திணையாகிய பொருள். புலவோ ராய்ந்த வருந்தமி ழகப்பொருள் (நம்பியகப். 1.)

2. Love-literature;
இன்பவொழுக்கங் கூறும் நூல். (நம்பியகப். 215.)

3. Grammar of Love-poetry;
அகத்திணையிலக்கணம். இறையனாரகப்பொருள்.

4. Sexual pleasure;
காம வின்பம். நீ புறப்பொருளை விரும்பி அகப்பொருளைக் கைவிட்டதிலே (கலித். 15, உரை.)

5. Inner meaning;
உட் பொருள். நான்மறையகப்பொருள் புறப்பொரு ளறிவார் (கம்பரா. இரணிய. 32.)

அகப்பொருள்விளக்கம் aka-p-poruḷ-viḷakkam
n. <id.+.
Name of a grammer of love-poetry. See நம்பியகப்பொருள்.
.

அகம் 1 akam
n. prob. அல்கு-. [K.āge, M.akam.]
1. Inside;
உள்ளிடம். அகம்புற நிறைந்த சோதியாய் (தாயு.சிவன்செ.4.)

2. Mind;
மனம். அகமலர்ந் தீவார் (பதினொ.திருவிடை.மும்.7.).

3. Sexual pleasure;
காம வின்பம். (தொல்.பொ. 1, உரை.)

4. Breast;
மார்பு. புல்லக மகன்றது (சிலப்.30, 16).

5. Agricultural tract;
மருதம். ஆலைக்கரும்பி னகநா டணைந்தான் (சீவக.1613).

6. House;
வீடு (பிங்.)

7. Place;
இடம். (திவா.)

8. Ether;
ஆகாயம். (தைலவ.பாயி.22.)

9. Love-theme:
அகப்பொருள்.

10. Being subordinate, subject;
உள்ளடங்குகை. அகப்பட்டி. (குறள், 1074).

11. An anthology of love-lyrics. See அகநானூறு. -part. A loc. ending;
அகநானூறு. அகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை (தனிப்பா.); ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு. (நன்.302.)

அகம் 2 akam
n.
See அஃகம்.
அகமது குறைவிலாதாய் (நல்.பாரத.வியாசருற்.8).

அகம் 3 akam
n. <aga.
1. Tree;
மரம். (பிங்.)

2. Panicled babul. See வெள்வேல்
(மலை.)

3. Mountain;
மலை. பொற்பக வினாயகன் (திருவாலவா.காப்பு,2.)

4. Earth;
பூமி. (பிங்.)

அகம் 4 akam
n. <agha.
1. Sin:
பாவம். அகமற (இரகு.நாட்டு.32).

2. Impurity, pollution;
ஆசௌசம். அகமற நூற்றெட் டாகுதி (திருவானைக்.கோச்செங்.79)

அகம் 5 akam
n. <aham.
1. I, self;
நான். வளைப்பகம் வகுத்துக்கொண் டிருந்தேன் (திவ்.பெரியாழ்.5,1,5).

2. Egotism;
அகம்பாவம். அகமறு முணர்வுண் டாயும் (ஞானவா.சுகர்.8).

3. Soul;
ஆன்மா. அதுவதுதா னென்னு மகம் (சி.போ.3,6).

அகம்படி akampaṭi
n. <அகம்பு+அடி.
1. Inside:
உள்ளிடம். திருவயிற்றி னகம்படியில் வைத்து (திவ்.பெரியதி.11,6,8).

2. Mind;
மனம். அகம்படிக் கோயிலானை (தேவா. 1204,1).

3. Service in a sanctuary or inner apartments of a palace;
அகத்தொண்டு. அகம்படிப் பெண்டுகள் (I.M.P Tp. 274).

4. Devotees;
அடியார். (ஈடு, 5,8,2.)

அகம்படித்தொண்டு akampaṭi-t-toṇṭu
n. <id.+.
Service, as in a sanctuary;
அணுக்கத்தொண்டு. கோயிலுள்ளா லகம்படித் தொண்டுசெய்வார் (பெரியபு.தில்லை.4)

அகம்படிமை akampaṭimai
n. <id.+.
See அகம்படித்தொண்டு.
அகம்படிமைத் திறலினர் (கோயிற்பு.பாயி.13).

அகம்படியர் akampaṭiyar
n. <id.+.
1. Domestics;
ஊழியஞ்செய்வோர். அவ்வவர்க்குரிய அகம்படியர் (திவ்.திருப்பா,4,72,வ்யா.)

2. Name of an agricultural caste in the Tanjore and Madura districts, as having been in the palace service of chiefs in former times;
ஒரு சாதியார்.

அகம்பன் akampaṉ
n. <a-kampa.
One who is unshaken;
அசைவற்றவன். (ஞானா.48.)

அகம்பாவம் akam-pāvam
n. <aham-bhāva.
Self-esteem, self-conceit, egotism;
நான் என்னும் எண்ணம்.

அகம்பிரமவாதி akam-pirama-vāti
n. <akam+.
One who holds that self is Brahman, Advaitin;
நானே பிரமமென்று வாதிப்பவன்.

அகம்பு akam-pu
n. <அகம்1.
Inside, opp. to புறம்பு;
உள்.

அகம்மியம் akammiyam
n. <a-gamya.
1. The unapproachable, that which is not fit to be approached;
அணுகக்கூடாது.

2. The inconceivable, incomprehensible;
அறியக்கூடாதது. பிரத்தியக்ஷாதி பிரமாண சதுட்டயங்களிலும் அகம்மிய மாதலாலே (சி.சி.அளவை. 1,சிவாக்.)

3. Ten thousand quintillions;
ஒரு பேரெண். (பிங்.)

அகம்மியாகமனம் akammiyā-kamaṉam
n. <a-gamyā+.
Intercourse with a woman who is not fit to be approached;
தகாதவளோடு புணர்கை. அகம்மியாகமனஞ் செய்து பிராயச் சித்தஞ்செய்து சுத்தரானாரையும் (Insc.).

 
12