Word

English & Tamil Meaning
பொருள்

அகப்படு - தல் aka-p-paṭu-
v.intr. <id.+. [T.agapadu, M. akappeṭuka.]
1. To be included;
உள்ளாதல். சத்தவிரு டிக்கண மகப்பட... முனித்தலைவரும் (உத்தரரா.வரையெடு.69).

2. To be diminished, shortened;
குறைதல். (தொல்.பொ.446, உரை.)

3. To be entangled;
சிக்கிக்கொள்ளுதல். கொண்டல்வண்ண னகப்படா னெவர்க்கும் (பாரத.கிருட். 174).

4. To be brought under one's influence, to become subordinate;
வசப்படுதல். ஊரெல்லாம் அவனுக்கு அகப்பட்டிருக்கிறது. Loc.

5. To be obtained;
கிடைத்தல். (திருக்கோ. 7.)

அகப்படை aka-p-paṭai
n. <id.+.
Trustworthy attendants;
அந்தரங்க பரிகரம். அகப்படையென்று மிடுக்கரா யிருப்பாரை. (ஈடு,10,1,ப்ர.)

அகப்பணி aka-p-paṇi
n. <id.+.
Confidential service;
அந்தரங்க கைங்கரியம். (திவ்.திருவாய்.10,2,6.)

அகப்பரிவாரம் aka-p-parivāram
n. <id.+.
Domestic servants;
இற்பணியாளர். (சீவக.292,உரை.)

அகப்பற்று aka-p-paṟṟu
n. <id.+.
Attachment to self, self-love, opp. to புறப்பற்று;
யானென்னு மபிமானம். (குறள்,345,உரை.)

அகப்பா aka-p-pā
n. <id.+
1. Fortified wall, wall of a fort or fortress;
கோட்டை மதில். அகப்பா எறிந்த அருந்திறல் (சிலப்.28,144).

2. Mound within inner fortifications;
மதிலுண் மேடை. (பிங்.)

3. Ditch around a fort;
அகழி. (பிங்.)

அகப்பாட்டு aka-p-pāṭṭu
n. <id.+
1. Love-poem;
அகப்பொரு ளமைந்த செய்யுள்.

2. An anthology of love-lyrics. See அகநானூறு.
(கலித். 37. உரை.)

அகப்பாட்டுவண்ணம் aka-p-pāṭṭu-vaṇṇam
n. <id.+. (Pros.)
Rhythm produced by having the last line look like any of the previous lines, as if it were not finishing the verse;
இறுதியடி ஏகாரத்தான் இறாது இடையடி போன்று வருஞ் சந்தம். (தொல்.பொ.536.)

அகப்பாட்டுறுப்பு aka-p-pāṭṭuṟuppu
n. <id.+.
Elements of love-poem, 12 in number, viz.,
திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை. (நம்பியகப். 211.)

அகப்பு akappu
n. <id.
Depth;
ஆழம். (W.)

அகப்புறக்கைக்கிளை aka-p-puṟa-k-kaikkiḷai
n. <id.+. (Akap.)
Lover's paying his addresses to an immature girl who shows no sign of love, as outside the sphere of akaṉ-ain-tiṇai;
காமஞ்சாலா இளமையோள்வயிற் குறுகி ஒருவன் அவள் குறிப்பறியாது. மேன்மேலுங் கூறும் ஒழுக்கம். (நம்பியகப். 241.)

அகப்புறச்சமயம் aka-p-puṟa-c-camayam
n. <id.+. (Saiva.)
Religious sects not intimately related to the Saiva Siddhānta, six in number, viz.,
பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கவாத சைவம். (சி.போ.பா.அவைய.)

அகப்புறத்தலைவன் aka-p-puṟa-t-talaivaṉ
n. <id.+. (Akap.)
Lover in love which is unreciprocated or unequal;
கைக்கிளை பெருந்திணை யொழக்கங்களுக்குரிய தலைவன். (கலித். 108, உரை.)

அகப்புறப்பாட்டு aka-p-puṟa-p-pāṭṭu
n. <id.+.
Poem describing love which is unreciprocated or unequal;
கைக்கிளை பெருந்திணைகளுக்குரிய செய்யுள். (நம்பியகப். 250.)

அகப்புறப்பெருந்திணை aka-p-puṟapperuntiṇai
n. <id.+. (Akap.)
Love between unequals, as outside the sphere of akaṉ-ain-tiṇai;
அகனைந்திணைப் புறமாகிய பெருந்திணை. (நம்பியகப். 243.)

அகப்புறம் aka-p-puṟam
n. <id.+.
1. That which is related to, but is not of the essence;
ஒருசார் தொடர்புகொண்டு புறம்பானது.

2. Unreciprocated or unequal love. See அகத்திணைப்புறம்.
(தொல்.பொ.54, உரை.)

அகப்புறமுழவு aka-p-puṟa-muḻavu
n. <id.+.
Kind of drum of medium grade, some varieties being தண்ணுமை, தக்கம், தகுணிச்சம்;
மத்திமமான வாச்சிகம். (சிலப்.3,27, உரை.)

அகப்பூ aka-p-pū
n. <id.+.
Heart-lotus, used fig.;
இருதய கமலம். அகப்பூ மலைந்து (சீவக.1662).

அகப்பேய்ச்சித்தர் aka-p-pēy-c-cittar
n. <id.+.
Name of a Siddha, author of a poem in which the mind is frequently addressed as aka-p-pēy, 'mind-devil' ;
ஒரு சித்தர்.

அகப்பை akappai
n. [T.agapa,K.agape, M.akappāṉ.]
Ladle, large spoon with long handle, usu. of coconut shell.
(சூடா.)

அகப்பைக்கணை akappai-k-kaṇai
n. <அகப்பை+.
Handle of a ladle;
அகப்பைக்காம்பு. Loc.

அகப்பைக்கின்னரி akappai-k-kiṉṉari
n. <id.+.
Inferior stringed musical instrument shaped like a coconut-shell ladle;
இசைக்கருவி வகை.

அகப்பைக்குறி akappai-k-kuṟi
n. <id.+.
1. Measure of akappai;
அகப்பையளவு. (ஈடு.1,4,6, அரும்.)

2. Marks of cow-dung solution poured from a ladle on heaps of paddy;
நெற்குவியலின்மே லிடும் சாணிப்பாற் குறி. கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக்குறி?

3. Prognostication by observing the position and direction of a ladle let fall perpendicularly, practised by women;
அகப்பைகொண்டு பார்க்கும் நிமித்தவகை. (W.)

 
11