Word

English & Tamil Meaning
பொருள்

அகத்தியர்குழம்பு akattiyar-kuḻampu
n. <Agastya+.
A famous cathartic compound ascribed to Agastya.
ஒருவகைப் பேதிமருந்து. (W.)

அகத்தியல் akattiyal
n. <அகம்+இயல்.
Disposition of the mind;
உள்ளத்தியற்கை. அகத்தியல் முகத்திற் காட்ட. (கம்பரா.விபீடண.141.)

அகத்தியன் akattiyaṉ
n. <Agastya.
1. Name of a sage, author of several Vedic hymns, said to have founded a Brāhman colony in South India, written on medicine, and composed the first Tamil grammar;
ஒரு முனிவர். (கம்பரா. அகத்தியப். 26.)

2. The star Canopus, of which Agastya is the regent;
அகஸ்திய நக்ஷத்திரம். அகத்திய னென்னு மீன் உயர்ந்த தன்னிடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்த (பரிபா.11,11,உரை).

அகத்தியனார் akattiyaṉār
n.
See அகத்தியன், 1
(தொல்.பாயி.உரை.)

அகத்திருத்துவம் a-kattiruttuvam
n. <a-kartrtva.
Divine attribute of not being agent;
செயலின்றி நிற்குங் கடவுட்டன்மை. (வேதா.சூ.47.)

அகத்தீசரறுகு akattīcar-aṟuku
n. <Agastīsā+.
Species of grass, as short in stature like Agastya. See. சிற்றறுகு.
(R.)

அகத்தீடு akattīṭu
n. <அகம் + இடு-
Embracing;
கையால் உள்ளணைக்கை. (அகநா.26,உரை.)

அகத்துவங்கொள் - தல் akattuvaṅ-koḷ-
v.intr.prob. அகழ்-+
To dig for laying foundation;
அஸ்திவாரந் தோண்டுதல். தேவர் தங்கட் கோய்வுறு கோயி லகத்துவங்கொள்க (விதான.நல்வினை.12)

அகத்துழிஞை akattuḻiai
n. <அகம்+உழிஞை. (Puṟap.)
Theme of the victory of besiegers over the besieged;
கோட்டையினுள்ளாரைப் புறத்தார் போர்வெல்லும் புறத்துறை. (பு.வெ.6,22.)

அகத்துழிஞையான் akattuḻiaiyāṉ
n. <id.+.
One within a besieged fort, opp. to புறத்துழிஞையான்;
முற்றகப் பட்டோன். (மதுரைக்.741,உரை.)

அகத்தொண்டர் aka-t-toṇṭar
n. <id.+.
Domestic servants;
வீட்டுப்பணியாளர். ஒருவர் மனையிற் பணிசெய்யும் அகத்தொண்டர்க்குளதாகிய உரிமை. (சி.போ.பா.8,1,பக்.173)

அகதி 1 akati
n.
1. Babul. See வேல்.
(மலை.)

2. Blinding tree. See தில்லை.
(W.)

அகதி 2 akati
n. <a-gati.
One without resources or friends, destitute person;
கதியிலி.

அகதேசி aka-tēci
n. <அகம்+ dēsin.
Mendicant in his own land, opp. to பரதேசி;
உள்நாட்டுப் பிச்சைவாங்கி. (யாழ்.அக.)

அகந்தை akantai
n. <aham-tā.
1. Conceit, arrogance, haughtiness;
செருக்கு. (கந்தபு.கடவுள்.8.)

2. Conception of individuality. See அகங்காரம்.
(கந்தபு.அண்ட.2.)

அகநகர் aka-nakar
n. <அகம்+.
1. Interior of a fortified town;
கோட்டைக்குள் அடங்கிய நகரப் பகுதி. (சிலப்.14,69,உரை.)

2. Women's apartments in a palace;
அந்தப்புரம். அகநகர் கைவிட்டு (மணி.23,57).

அகநகை 1 - த்தல் aka-nakai-
v.tr. <id.+.
To laugh in derision;
இகழ்ச்சிநகை செய்தல். அகநகைத் துரைத்து (சிலப். 16,164).

அகநகை 2 akanakai
n. <id.+.
Derisive laughter;
இகழ்ச்சிச் சிரிப்பு. (சிலப். 16,164,உரை.)

அகநாடகம் aka-nāṭakam
n. <id.+.
Dance, accompanied by gestures expressing love;
நாடகவகை. (சிலப். 3,14,உரை.)

அகநாடகவுரு aka-nāṭaka-v-uru
n. id.+.
Various kinds of musical composition used in aka-nāṭakam;
அகநாடகத்துக்குரிய பாடல்கள். (சிலப்.3,14,உரை.)

அகநாடு aka-nāṭu
n. <id.+.
Interior of a territory;
உள் நாடு. அகநாடு புக்கு (மதுரைக்.149)

அகநாழிகை aka-nāḻikai
n. <id.+. nādikā.
Sanctuary of a Hindu temple;
கர்ப்பக்கிருகம். அகநாழிகைப் பணிசெய்வார் (T.A.S.i,6).

அகநானூறு aka-nāṉūṟu
n. <id.+.
An anthology of 400 love lyrics by about 160 poets, compiled by Uruttira-carumaṉ;
எட்டுத்தொகையுள் ஒன்று.

அகநிலை aka-nilai
n. <id.+.
1. Town;
நகர். அரைசுமேம் படீஇய வகநிலை (சிலப். 5,161).

2. (Mus.) A class of primary melody-types, one of four. cāti-p-perum-paṇ, q.v.;
சாதிப்பெரும்பண் வகை.

அகநிலைக்கொச்சகம் aka-nilai-k-koccakam
n. <id.+. (Pros.)
Variety of koccaka-k-kali;
கொச்சகபேதம். (கலித்.119,உரை.)

அகநிலைப்பசாசம் aka-nilai-p-pacācam
n. <id.+. (Nāṭya.)
Gesture in which the thumb and forefinger are joined at the tip and the other three fingers extended;
சுட்டுவிரல் நுனியிற் பெருவிர லகப்பட மற்றை மூன்றும் பொலிந்து நிற்பது. (சிலப்.3,18, உரை.)

அகநிலைமருதம் aka-nilai-marutam
n. <id.+. (Mus.)
A primary melody-type;
பண்வகை. (சிலப். 8,39.)

அகப்பகை aka-p-pakai
n. <id.+.
Enmity within, hatred among relatives;
உட்பகை. அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப (நீதிநெறி.55).

 
10