Word

English & Tamil Meaning
பொருள்

அகடு 2 akaṭu
n. [T.K.agadu.]
Wickedness;
பொல்லாங்கு. (W.)

அகண் akaṇ
n. prob. அண்-.
Nearness;
சமீபம். (சம்.அக.)

அகண்டகாவேரி akaṇṭa-kāvēri
n. <a-khaṇda+.
The undivided Kāvēri, between Erode and its point of bifurcation close to Trichinopoly;
பிரியுமுன் ஒன்றாக வுள்ள காவேரி.

அகண்டதீபம் akaṇṭa-tīpam
n. <id.+.
Lamp that burns perpetually, used in worship;
நந்தாவிளக்கு.

அகண்டதுவாதசி akaṇṭa-tuvātaci
n. <id.+.
The 12th day of the bright fortnight of Mārkkaciram;
வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த துவாதசி.

அகண்டபரிபூரணம் akaṇṭa-paripūraṇam
n. <id.+.
Omnipresence;
சர்வவியாபகம். (சி.சி.பர.பாஞ்ச.1)

அகண்டபரிபூரணன் akaṇṭa-paripūraṇaṉ
n. <id.+.
Omnipresent being, as an emancipated soul, as God;
சர்வவியாபகன். (திருக்கோ. 197,உரை.)

அகண்டம் akaṇṭam
n. <a-khaṇda.
1. That which is indivisible;
பகுக்கப்படாதது. (கோயிற்பு. பதஞ்.65.)

2. The whole;
எல்லாம். (சூடா.)

3. Perfection;
பூரணம். அகண்டவறிவு (ஞானவா. உபசாந்த.34).

4. Perpetually burning lamp;
அகண்டதீபம்.

5. Circular lamp;
வட்டவடிவமான தகழி.

அகண்டன் akaṇṭaṉ
n. <id.
God, as the Undivided One;
கடவுள். (W.)

அகண்டாகண்டன் akaṇṭākaṇṭaṉ
n. <id.+. a-khaṇda.
1. The Supreme Being;
பரம்பொருள். (W.)

2. Dare-devil;
எதற்கும் அஞ்சாதவன். Loc.

அகண்டாகாரம் akaṇṭākāram
n. <id.+. ākāra.
Indivisible form, as of the Absolute;
பகுக்கப்படாத வடிவம். (சி.போ. பா.8,1,பக்.172.)

அகண்டி akaṇṭi
n,
A musical instrument;
இசைக்கருவி வகை. (R.)

அகண்டிதம் akaṇṭitam
n. <a-khaṇdita.
That which is undivided;
கண்டிக்கப்படாதது.

அகண்டிதன் akaṇṭitaṉ
n. <id.
God, as an undivided whole;
பின்னப்படாத கடவுள். அகண்டித னகம்பன் (மதுரைப்.70).

அகண்ணியம் akaṇṇiyam
n. <a-gaṇya.
Dishonour, disgrace;
அவமரியாதை. அங்கே போவது உனக்கு அகண்ணியம். Colloq.

அகணி akaṇi
n. cf. அகம்.
1. Inside, interior;
உள். கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கிற் புறணி நஞ்சு.

2. Palm fibre;
தெங்கு பனை முதலியவற்றின் புறநார். Loc.

3. Agricultural tract;
மருதநிலம். (சூடா.)

4. Paddy-field;
நெல்வயல். அகணியின் கரைபுரளு மெங்கணும் (அரிசமய.குலசே.8).

அகணிதம் akaṇitam
n. <a-gaṇita.
That which is beyond computation;
கணிக்கப்படாதது.

அகணிப்பாய் akaṇi-p-pāy
n. <அகணி +.
Bamboo mat;
மூங்கிற்பாய். Loc.

அகத்தடிமை akattaṭimai
n. <அகம்+அடிமை.
Services of a devoted follower;
அணுக்கத்தொண்டு. அகத்தடிமைசெய்யு மந்தணன் (தேவா.614,6).

அகத்தடியாள் akattaṭiyāḷ
n. <id.+ அடியாள்.
Maidservant of the house;
வீட்டுவேலைக்காரி. அகத்தடியாண் மெய்நோவ (தனிப்பா.i,275,77).

அகத்தமிழ் aka-t-tamiḻ
n. <id.+.
Tamil literature dealing with love;
அகத்திணைபற்றிய தமிழ். (திருக்கோ.70).

அகத்தன் akattaṉ
n. <a-kartā.
One who is not the doer or agent, who does not act;
கர்த்தா அல்லாதவன். அகத்தனில் கத்தன்றன்னில் அமைந்ததே ததனில்நிற்பாய் (ஞானவா.கசன்.4).

அகத்தான் akattāṉ
n. <அகம்.
1. One who is in;
உள்ளிடத்திருப்பவன். (இறை.59,உரை.)

2. Householder;
இல்வாழ்வான். (நாலடி.31.)

அகத்தாழம் akattāḻam
n. <ahan+ தாழ்-.
Evening, as the declining day;
மாலைப்பொழுது. (Insc.)

அகத்தி akatti
n. <agasti.
West Indian pea-tree, s.tr., Sesbania grandiflora;
மரவகை. (பதார்த்த.464.)

அகத்திடு - தல் akattiṭu-
v.tr. <அகம்+இடு-.
To fold in the arms, embrace;
கையால் உள்ளணைத்தல். (திவா.)

அகத்திணை aka-t-tiṇai
n. <id.+.
Love, as a mental experience of lovers, of seven forms viz., குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை;
இன்ப வொழுக்கம். (தொல்.பொ.1, உரை.)

அகத்திணைப்புறம் aka-t-tiṇai-p-puṟam
n. <id.+. (Akap.)
The two forms of love, kaikkiḷai and peruntiṇai, as outside the sphere of akaṉ-ain-tiṇai;
கைக்கிளை பெருந்திணைகள்.

அகத்தியம் 1 akattiyam
n. <Agastya.
Tamil grammar by Agastya, of which little is extant;
அகத்திய முனிவரால் செய்யப்பட்ட தமிழிலக்கண நூல். (தொல்.பாயி.உரை.)

அகத்தியம் 2 akattiyam
adv. [T. agatyamu, K. agatya.] cf. a-gati.
See அகத்தியமாய்.
.

அகத்தியமாய் akattiyamāy
adv.
Without fail, surely, certainly;
தவறாமல்.

 
9