Word

English & Tamil Meaning
பொருள்

அகங்கரம் akaṅkaram
n. <aham-kāra.
Self-love, egotism; அ
அகங்காரம். (ஞானவா. வைராக்.85.)

அகங்கரி - த்தல் akaṅkari-
11 v.intr. <id.
To be self-conceited;
செருக்குதல். தம்மு னடிவிழ்ந்தகங்கரித்தான் (பாரத.பதினே.162).

அகங்கரிப்பு akaṅkarippu
n. <id.
Arrogance, haughtiness;
செருக்கு. அகங்கரிப்பு வரிலெவர்க்கு மறங்கெடுக்கும் (பிரபோத. 7,25)

அகங்காரக்கிரந்தி akaṅkāra-k-kiranti
n. <id.+.
(Advaita.) 'Ego-bond', the enslaved state of the soul in which it confuses the tattvas with itself;
தத்துவங்களைத் தானென் றபிமானிக்கும் சீவ பந்தம். (நானாசீ.)

அகங்காரசைதன்னியவாதி akaṅkāra-caitaṉṉiya-vāti
n. <id.+.
One who holds that the vital airs commencing with prāṇa which are the effects of aham-kāra are the soul;
பிராணாதி வாயுக்களே ஆன்மா என்னுங் கொள்கையான். (சி.சி. 2,73,மறைஞா.)

அகங்காரத்திரயம் akaṅkāra-t-tirayam
n. <id.+. (Saiva.)
Three kinds of aham-kāra, viz., தைசதவகங்காரம், வைகரியகங்காரம், பூதாதியகங்காரம், one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.;
புறநிலைக்கருவிவகை (சிவப்.கட்.)

அகங்காரம் akaṅkāram
n. <aham-kāra.
1. Self-love, egotism;
நானென்னும் அபிமானம். (நல்.பாரத.கௌசிக.84.)

2. Conceit, arrogance, haughtiness;
செருக்கு.

3. Anger;
கோபம். Colloq.

4. (Advaita.) Conception of self as being identical with the antah-karaṇa;
அந்தகக்கரணமே ஆத்மாவென்னு மபிமானம்.

5. (Sāṅkhya.) Conception of individuality, one of 25 tattvas;
ஒரு தத்துவம். (குறள், 27, உரை.)

அகங்காரவாதி akaṅkāra-vāti
n. <id.+.
One who holds that antah-karaṇa is the soul;
மனோமய கோசமே ஆன்மா என்னுங் கொள்கையான். (சி.சி.423, மறைஞா.)

அகங்காரான்மவாதி akaṅkārāṉma-vāti
n. <id. ātman+.
One who holds that aham-kāra is the soul;
அகங்காரமே ஆன்மா என்னுங் கொள்கையான்.(சி.சி.4,1.ஞானப்.)

அகங்காரி akaṅkāri
n. <aham-kārin.
1. Proud, conceited person;
செருக்குள்ளவன். என் போற்பகர் வாரிலையென் றெண்ணகங்காரி (முல்லையந். 62).

2. Person of violent temper;
கோபமுள்ளவன்.

அகங்காழ் akaṅ-kāḻ
n. <அகம்+.
Inside solidity, as of trees in the class of exogens;
உள்வயிரம். (W.)

அகங்கிருதி akaṅkiruti
n. <aham-krti.
Self-love, egotism;
அகங்காரம். அகங்கிருதி நிரகங்கிருதி யுறாமல் (வேதா.சூ.148).

அகங்கை akaṅ-kai
n. <அகம்+.
Palm of hand;
உள்ளங்கை. (பிங்.)

அகச்சமயம் aka-c-camayam
n. <id.+. (Saiva.)
Religious sects intimately related to the Saiva Siddhanta, six in number, viz., பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவரவவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம்
அகச்சமயத்தொளியாய் (சிவப்பிர.பாயி.7).

அகச்சுட்டு aka-c-cuṭṭu
part. <id.+.
Demonst. pref. as அ, இ, உ, when they are parts of words with which they are connected, as it;
அவன், இவன், உவன். (நன். 66,உரை.)

அகச்சுவை aka-c-cuvai
n. <id.+. (Nāṭya.)
Emotions caused by the three guṇas, viz., sattva, rajas, and tamas, of three classes;
அகமார்க்கத்துக் குரிய சுவை. (சிலப். 3, 12, உரை.)

அகசியகாரன் akaciya-kāraṉ
n. <hāsya+.
Jester;
விதூடகன்.

அகசியம் akaciyam
n. <id.
1. Mimicry, farce;
பகடிக் கூத்து. (நல். பாரத. இராச. 17.)

2. Ridicule, derision;
ஏளனம்.

அகசு akacu
n. <ahan.
1. Day-time;
பகல். (சூடா.உள்.65.)

2. Day including night;
இராப்பகல் கொண்ட தினம்.

அகஞ்சுரிப்படுத்து - தல் aka-curi-p-paṭuttu-
v.tr. <அகம்+சுரி-+.
1. To compose, console, as the mind;
மனத்தைத்தேற்றுதல். எனக்கோடுகிற தசையை உங்களுக்குச்சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிக்கைக்கு (ஈடு,8,2,2).

2. To cause to diminish, lessen;
குறையச் செய்தல். (ஈடு.4,7,9.)

அகடவிகடம் akaṭa-vikaṭam
n. redupl. of vikaṭa.
1. Fun, humour;
அவன் அகடவிகடமாய்ப் பேசுகிறான். Colloq.

2. Stratagem, chicanery, pettifogging;
தந்திரம். அவன் அகடவிகடமெல்லாம் பண்ணியும் காரியம் நடக்கவில்லை. Colloq.

அகடிதகடனாசாமர்த்தியம் akaṭita-kaṭaṉā-cāmarttiyam
n. <a-ghaṭita- ghaṭanā+.
Ability to effect the impossible;
கூடாததைக் கூட்டுவிக்கும் வன்மை. (வேதா. சூ.56, உரை.)

அகடியம் akaṭiyam
n. <a-ghaṭita.
Injustice;
அநீதி. (W.)

அகடு 1 akaṭu
n. prob. அகம்
1.Interior;
உள் வண்டு ... செழுந்தோட்டகட்டி னடை கிடக்கும் (கூர்மபு.தக்கன்வே.57).

2. Belly;
வயிறு. அகடாரார் (குறள், 936).

3. Middle;
நடு. மதியகடுதோய் (தாயு. சச்சி.6).

4. Impartiality;
நடுவுநிலைமை. அகடுற யார் மாட்டும் நில்லாது (நாலடி.2).

 
8