Word

English & Tamil Meaning
பொருள்

அங்கம் 2 aṅkam
n. <aṅka.
1. Mark, sign;
அடையாளம்.

2. Symmetry, beauty, as of the body;
அழகு. ஆள் அங்கமாயுள்ளவன். Loc.

3. Place;
இடம். வானங்கத்தவர்க்கு (தேவா. 818,1).

4. Act of a drama;
நாடகநூலினுருப்பு.

5. Drama which has only virtue for its theme;
அறமாத்திரம் பொருளாக வரும் நாடகம். (சிலப். 3,31,உரை.)

6. Species of drama with commonplace characters, the pathetic being the prevailing sentiment, one of ten rūpakam, q.v.;
ரூபகவகை. (சிலப்.பக். 84.)

7. Battle, fight;
போர். தாபதர் தம்மோ டெம்மோ டங்கம்வந் துற்ற தாக (கம்பரா.கும்பக. 15).

அங்கம் 3 aṅkam
n. cf. paryaṅka.
Bed, couch;
கட்டில். அணையங்க மீதே (திருப்பு. 125).

அங்கம்மா aṅkammā
n. [T.aṅkamma.]
Name of a form of Kāḷī. See அங்காளம்மை.
.

அங்கமணி aṅka-maṇi
n. <aṅga+. [K.aṅgamaṇi.]
Dowry which a married girl takes with her;
சீதனம். இதுக்கு அங்கமணி செய்யமாவதே (திவ்.திருமாலை,37,வ்யா.121).

அங்கமாலை aṅka-mālai
n. <aṅga+.
1. Poem describing the members of the body, in veṇpā or veḷi-viruttam metre;
பிரபந்த வகை. (இலக்.வி. 835.)

2. Necklace of bones worn by Siva;
எலும்புமாலை. (தேவா.295,7.)

அங்கயற்கண்ணி aṅ-kayaṟ-kaṇṇi
n. <அம்+.
Mīnākṣī, goddess of the Madura temple, as fish-eyed;
மீனாட்சி. அங்கயற்கண்ணி தன்னொடு மமர்ந்த வாலவாய் (தேவா.868,1).

அங்கயோகம் aṅka-yōkam
n. <aṅga+. (Astrol.)
Situation of the planet Jupiter in one of four positions;
உதயம்,கேந்திரம், மூலத்திரிகோணம், or உச்சம்; யோகவகை. (சங்.அக.)

அங்கர் aṅkar
n. <aṅga.
Inhabitants of Aṅga-dēša, the country about Benares;
அங்கதேசத்தார். அங்கர் மாகத ராரியர் (திருவிளை.திருமண. 74).

அங்கர்கோமான் aṅkar-kōmāṉ
n. <id.+.
Karṇa, as king of Aṅga-dēša;
கன்னன். (சூடா.)

அங்கர்யாரி aṅkar-yāri
n. <E.anchor+cf.T.dāra. (Naut.)
Cattackle for drawing up an anchor;
நங்கூரந் தூக்கியெடுக்கும் கப்பிக்கயிறு.

அங்கரக்கா aṅkarakkā
n. <U.aṅgarkhā <aṅga-rakṣā.
Long coat worn by men, tunic;
நீண்ட சட்டை.

அங்கரங்கவைபவம் aṅkaraṅka-vaipavam
n. <T.aṅgaraṅga+.
All kinds of enjoyment;
சகல அனுபோகங்களும். ஸ்வாமிக்கு அங்கரங்க வைபவத்துக்கு விடுவித்த கிராமம் (S.I.I. i, 71).

அங்கரங்கவைபோகம் aṅkaraṅka-vaipōkam
n.
See அங்கரங்க வைபவம். Colloq.
.

அங்கரட்சிணி aṅka-raṭciṇi
n. <aṅga+rakṣiṇī,
Coat of mail;
போர்க்கவசம். (W.)

அங்கராகம் aṅka-rākam
n. <aṅga+rāga.
Cosmetic for the body, scented cosmetic;
உடம்பிற் பூசப்படும் பரிமளதிரவியம். அங்கராக மணியார மார்ப (பாரத.மணி. 109).

அங்கலாய் - த்தல் aṅkalāy-
prob. அகம்+கலாய்-. 11 v.intr. [T.aṅgalārcu, M. aṅkalāykka.]
1. To lament, grieve, sorrow;
துக்கித்தல். அங்கலாய்ப்பாளே (இராமநா.ஆரணி. 26).

2. To be envious, jealous; To covet, desire greatly;
பொறாமை கொள்ளுதல். ஆடுமறித்தவன் செய்விளையுமா, அங்கலாய்த்தவன் செய்விளையுமா? (Rd. M.) இச்சித்தல். (W.)

அங்கலாய்ப்பு aṅkalāyppu
n. <அங்கலாய்-.
1. Disquiet, mental worry;
கலக்கம். Loc.

2. Becoming disgusted;
அருவருப்புக் கொள்ளுகை. Loc.

அங்கவடி aṅkavaṭi
n. prob. <aṅga+padī. [K.aṅgavadi.]
Stirrup;
குதிரை யங்கவடி. (பிங்.)

அங்கவஸ்திரம் aṅka-vastiram
n. <aṅga+.
Upper cloth;
மேலாடை. Colloq.

அங்கவீனன் aṅka-v-īṉaṉ
n. <id.+. hīna.
One who has bodily defects;
உறுப்புக்குறைந்தவன். (W.)

அங்கன் aṅkaṉ
n. <aṅga.
Son, as born from the father's body;
புதல்வன். (திவ்.இயற். 3,65.)

அங்கனம் aṅkaṉam
n.
Chebulic myrobalan. See கடுக்காய்.
(மலை.)

அங்கனி aṅkaṉi
n.cf. aṅganā.
See கற்றாழை.
(மலை.)

அங்கனை aṅkaṉai
n. <aṅganā.
Woman;
பெண். (திவா.)

 
20