Word

English & Tamil Meaning
பொருள்

அங்கா 1 - த்தல் aṅkā-
11.v.intr.
To open the mouth;
வாய்திறத்தல். (நன். 76.)

அங்கா 2 aṅkā
n. <அங்கா-.
Opening the mouth;
வாய்திறப்பு. அங்கா முயற்சி (நன்.86).

அங்காகமம் aṅkākamam
n. <aṅga+āgama.
One of the three classes of Jaina Scriptures;
சைனாகமபேதங்களுள் ஒன்று. (சிலப். 10,187,உரை.)

அங்காங்கிபாவம் aṅkāṅki-pāvam
n. <aṅgāṅgī-bhāva.
Relation of the subsidiary or accessory and principal;
அவயவ அவயவிகளது சம்பந்தம். அருவினி லுருவந் தோன்றி யங்காங்கி பாவமாகி (சி.சி. 1,27).

அங்காடி aṅkāṭi
n. [T.K. aṇgadi, M. aṅṅāṭī.]
Bazaar, bazaar street;
கடை. (சிலப். 14,179.)

அங்காடிக்கூலி aṅkāṭi-k-kūli
n. <id.+.
Tax collected from stalls opened in the bazaar;
ஒருவகை வரி. (I.M.P.Tj. 119.)

அங்காடிகூறு - தல் aṅkāṭi-kūṟu-
v.intr. <id.+.
To cry out provisions for sale;
பண்டங்களை விற்குமாறு கூவுதல். (R.)

அங்காடிப்பாட்டம் aṅkāṭi-p-pāṭṭam
n. <id.+.
An ancient tax on stalls opened in the bazaar;
கடைகட்குரிய வரி. (Insc.)

அங்காடிபாரி - த்தல் aṅkāṭi-pāri-
v.intr. <id.+.
To build castles in the air;
மனோராஜ்யம் பண்ணுதல். (சம்.அக.)

அங்காப்பு aṅkāppu
n. அங்கா-,
1. Opening the mouth;
வாய்திறக்கை. (நன். 76).

2. Thirsting;
நீர்வேட்கை. அங்காப் பொழிய வருணனுக்கு (அழகர்கல. 68).

அங்காமி aṅkāmi
adj. <U. hangāmi.
Temporary;
காயமல்லாத. அங்காமி குமஸ்தா (C.G.).

அங்காமிப்பட்டா aṅkāmi-p-paṭṭā
n. <id.+.
Temporary or limited title-deed (R.F);
பட்டா வகை.

அங்காரகம் aṅkārakam
n. <aṅgāraka.
1. Charcoal;
கரி. (W.)

2. Heated charcoal;
தழற்கரி. (சங்.அக.)

அங்காரகன் aṅkārakaṉ
n. <id.
1. Fire;
நெருப்பு. (திவா.)

2.The planet Mars;
செவ்வாய். (திவா.)

3. Pearl with a pink lustre;
செந்நீர்முத்து. (சிலப். 14,195.)

அங்காரசய்யாப்பிரமணம் aṅkāra-cayyā-p-piramaṇam
n. <aṅgāra+sayyā+ bhramaṇa.
Hell wherein one revolves on a bed of fire;
நரக விசேஷம். அங்காரசய்யாப்பிரமண மாநிரயம் (சேதுபு.துராசார. 37).

அங்காரம் aṅkāram
n. <aṅgāra.
Sectarian charcoal mark placed on the forehead by Mādhva Brāhmans;
மாத்துவர் நெற்றியி லணியுங்கரிக்கோடு. ஆங்கதனிடை யங்காரமுந் தீட்டி (பிரபோத. 11,17).

அங்காரவல்லி aṅkāra-valli
n. <id.+.
1. Bushy firebrand teak. See சிறுதேக்கு.
.

2. Green wax flower. See பெருங் குறிஞ்சா.
(மலை.)

அங்காரன் aṅkāraṉ
n. <id.
The planet Mars;
செவ்வாய். (அறப்.சத. 50.)

அங்காரி aṅkāri
n.
Borax. See வெண்காரம்.
(மூ.அ.)

அங்காரிகை 1 aṅkārikai
n. <அம்+காரிகை(=நல்+நாரி).
Indian sarsaparilla. See நன்னாரி.
அங்காரிகை மூலி யாச்சியத்தோ டுண்ண (இராசவைத். 53).

அங்காரிகை 2 aṅkārikai
n. <aṅgārikā.
Sugar-cane. See கரும்பு.
(மலை.)

அங்காலே aṅkālē
adv. <அங்கு.
There;
அங்கே. (J.)

அங்காளம்மை aṅkāḷammai
n. <அம்+ Kāḷī+ [T.aṅkāḷamma.]
Kāḷī in her terrible form, a village goddess;
ஒரு கிராமதேவதை. அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக்கூர் வழியாய் வரும்.

அங்காளி aṅkāḷi
n.
See அங்காளம்மை.
.

அங்கி 1 aṅki
n. <aṅgin.
1. Principal;
அங்கத்தையுடையது. கூறு மங்கியல தங்கமிலை (வேதாரணி.மாகாசமச். 7).

2. Long jacket;
நீண்டசட்டை. அங்கியினை யங்குமெ யணிந்தவரு மானார் (இரகு.தெனு. 28).

அங்கி 2 aṅki
n. <agni.
1. Fire;
நெருப்பு. (பிங்.)

2. Agni;
அக்கினிதேவன். (கந்தபு.பாயிர. 53.)

3. Digestive faculty, gastric fire;
சாடராக்கினி. உடற்காதார மடலங்கி மாந்தல் (தைலவ.பாயி. 1).

4. The third nakṣtra See கார்த்திகை.
(பரி. பா. 7,11.)

5. Sun;
சூரியன். பனிப்பகை யங்கியைப் பழிப்பர் (திருக்காளத்.பு.30,14).

அங்கிசகம் aṅkicakam
n. < hamsaka.
Kind of asceticism. See ஹம்ஸம்.
(சி.சி. 8, 11, மறைஞா.)

அங்கிசம் aṅkicam
n. < amsa.
Part, portion. See அம்சம்.
மாதவப்பட்ட னங்கிச வவதாரமாகி (ஞானவா. முடிவு).

அங்கிசயன் aṅkicayaṉ
n. < agni-caya.
Name of a sacrifice;
யாகவிசேஷம். (பிங்.)

அங்கிசுமாலி aṅkicumāli
n. < Amšumālin.
A diety representing the sun, one of the. tuvātacātittar, q.v.;
துவாதசாதித்தருள் ஒருவன். (பிங்.)

அங்கிட்டு aṅkiṭṭu
adv. அங்கு.
There, yonder;
அவ்விடத்தில். அங்கிட்டுப் பிறந்து (ஈடு, 6,8, 11). vul.

 
21