Word

English & Tamil Meaning
பொருள்

அங்கிட்டோமம் aṅkiṭṭōmam
n. < agniṣṭōma.
Variety of the jyōtiṣṭōma See அக்கினிட்டோமம்.
அங்கிட்டோமங் கோமேத மிராச சூயம் (உத்தரரா. திக்கு. 117).

அங்கிடுதத்தி aṅkiṭu-tatti
n. <அங்கு+ இடு.+.
One of vagrant habits;
நிலைகெட்டவன். (யாழ். அக.)

அங்கிடுதொடுப்பி aṅkiṭu-toṭuppi
n. < id.+.[T.aṅgudu-tudipi.]
Slanderer, talebearer;
குறளை கூறுவோன். அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு இங்கிரண்டு சொட்டு.

அங்கித்தம்பனை aṅki-t-tampaṉai
n. < agni.+.
Art of suspending the action of fire by magic;
அக்கினித்தம்பனம். (திருவாலவா, 38, 23.)

அங்கிதம் aṅkitam
n. <aṅkita.
1. Sign;
அடையாளம். அங்கிதம் பிறவுமே லறைய நின்றவே (கந்தபு. இந்திரபுரி. 37).

2. Scar;
தழும்பு. இவன் செருவிற் கொண்ட வங்கிதத்து (இரகு. யாகப். 103).

அங்கிதிசை aṅki-ticai
n. <agni+.
The SE. quarter, as under the guardianship of Agni;
தென்கிழக்கு. (திவா.)

அங்கிநாள் aṅki-nāḷ
n. <id.+.
1 The third nakṣatra. See கார்த்திகை.
(பிங்.)

2. The thirteenth nakṣatra. See அத்தம்.
(சூடா.)

அங்கியங்கடவுள் aṅki-y-aṅ-kaṭavuḷ
n. <id.+.
Agni;
அக்கினிதேவன். அங்கியங் கடவுள் அறிகரி யாக (தொல். பொ.142, உரை.)

அங்கியற்பொருள் aṅkiyaṟ-poruḷ
n. <aṅga+ இயல்+.
Natural products of each of the five tracts of land;
ஐந்துநிலக் கருப்பொருள். (வீரசோ. பொருட் 11, உரை).

அங்கியாதானம் aṅki-y-ātāṉam
n. <agni+ādhāna.
Initiatory ceremony of placing the sacred fire on the alter and consecrating it;
யாகத்திற்காக அக்கினியைச் சேர்க்குங் கிரியை. (திருக்காளத். பு. 29, 33.)

அங்கிரசு aṅkiracu
n. <Aṅgiras.
Name of a sage;
ஒரு முனிவர். (மச்சபு. இருடிமான். 57.)

அங்கிரம் aṅkiram
n. <id.
A secondary Purāṇa, one of 18 upa-purāṇam q.v.;
ஓர் உப புராணம்.

அங்கிரமாதிபாஷாணம் aṅkiramāti-pāṣāṇam
n.
A mineral poison;
பிறவிப்பாஷாண வகை.

அங்கிரன் aṅkiraṉ
n.
See அங்கிரசு.
(W.)

அங்கிரா aṅkirā
n.
See அங்கிரசு.
(காஞ்சிப்பு. சத்ததா.2.)

அங்கிரி 1 aṅkiri
n. <aṅghri.
Foot;
பாதம். (பிங்.)

அங்கிரி 2 aṅkiri
n. < aṅghri-pa.
Tree, as drinking water through its roots;
மரம், (பிங்.)

அங்கிலேயர் aṅkilēyar
n. <E. Angles.
The English.
.

அங்கீகரணம் aṅkīkaraṇam
n. <aṅgīkarana.
Assenting, accepting;
உடன்படுகை.

அங்கீகரி - த்தல் aṅkīkari-
11 v.tr. <aṅgī-kar.
To accept, receive, approve;
ஏற்றுக்கொள்ளுதல். சித்தம்வைத் திடவுமங் கீகரித் திடுமகா தேவதேவா (அறப். சத. 100).

அங்கீகாரம் aṅkīkāram
n. aṅgī-kāra.
1. Acceptance, approval;
உடன்பாடு.

2. Hospitality;
உபசாரம். அங்கீகார மனைத்துஞ் செய்தான் (ஞானவா. சிகித். 81.)

அங்கீகிருதம் aṅkīkirutam
n. < aṅgī-krta.
That which is agreed to, accepted;
ஏற்றுக்கொள்ளப்பட்டது. (சங். அக.)

அங்கு aṅku
adv. <அ. [M. annu.]
There, yonder;
அவ்விடம்

அங்குசதாரி aṅkucatāri
n. <aṅgusadhārin.
1. Gaṇēša;
விநாயகன் (W.)

2. Yellow arsenic, arsenic sulphide. See அரிதாரம்.
(W.)

அங்குசபாசதரன் aṅkuca-pāca-taraṉ
n. <aṅguša+.
Gaṇēša, as having a goad and a noose in his hands;
விநாயகன். (சூடா.)

அங்குசபாசமேந்தி aṅkuca-pācam-ēnti
n.
See அங்குசபாசதரன்.
(W.)

அங்குசபாணி aṅkuca-pāṇi
n. <id.+.
1. Gaṇēša, as having a goad in his hand;
விநாயகன். (W.)

2. Kāḷī;
துர்க்கை. (W.)

அங்குசபாதி aṅkuca-pāti
n. <hamsapādikā.
Species of Desmodium. See சிறுபுள்ளடி
(மலை.)

அங்குசபாஷாணம் aṅkuca-pāṣāṇam
n.
A mineral poison,
சரகாண்டபாஷாணம். (மு.அ.)

அங்குசபிசாரி aṅkuca-picāri
n.
Horse-gram;
கொள். (W.)

அங்குசம் 1 aṅkucam
n. cf. amsumatphala.
Plantain. See வாழை.
(மலை)

அங்குசம் 2 aṅkucam
n. <aṅkuša.
1. Hooked instrument, especially elephant goad;
யானைத்தோட்டி. (கந்தபு. விடைபெ. 37.)

அங்குசவி aṅkucavi
n.
Horse gram. See கொள்.
(W.)

அங்குசோலி aṅkucōli
n.
Species of grass. See அறுகு.
(மூ.அ.)

அங்குட்டம் aṅkuṭṭam
n. <aṅgustha.
1. Thumb, great toe;
பெருவிரல். தாளங்குட்டத்தைத் திகழிரதத்தி னூன்றி (வரத. பாகவத. பற்கு.20).

2. Measure of a thumb;
பெருவிர லளவு. அங்குட்டமென்னு மளவிற்றா முருவுவாய்ந்த (பாகவத. சூரிய மண். 20).

 
22