Word

English & Tamil Meaning
பொருள்

அங்குத்தை aṅkuttai
n. <அங்கு.
1. That place;
அவ்விடம். அங்குத்தை வார்த்தையை. இங்கே சொல்லி (ஈடு).

2. Your worthiness, a term of respect, corresponding to தாங்கள், used chiefly in Saiva mutts;
தேவரீர்.

அங்குரம் aṅkuram
n. <aṅkura.
Sprout;
முளை. அங்குரம்போல் வளர்ந்தருளி (பெரியபு. திருஞா.53).

அங்குரார்ப்பணம் aṅkurārppaṇam
n. <id.+arpaṇa.
Ceremony preliminary to a marriage or other auspicious ceremony, in which certain seeds are placed in vessels for sprouting;
பாலிகை தெளிக்கை. (நெடுநல்.75,உரை.)

அங்குரி - த்தல் aṅkuri-
11 v.intr. <id.
1. To sprout;
முளைத்தல். வித்துட்டங்கியே யங்குரித்து (திருவாத. பு. மந்தி. 7).

2. To originate, to be born;
உற்பவித்தல். குருவுமக் குலத்திலங் குரித்தான் (பாரத. குருகு. 31).

3. To reveal oneself, appear;
வெளிப்படுதல். ஆண்டு மன்றல்பெற் றங்குரித்தார் (பாரத. திரௌபதிமா. 98).

அங்குலம் aṅkulam
n. <aṅgula.
1. Finger;
கைவிரல். கமலங்க ணிகரு மங்குலத் திருக்கை (மருதூ. 48).

2. Inch, a measure of length, as a finger's breadth;
ஒருவிர லகலம். அங்குலத்தளவையாமே (கந்தபு. அண்ட.5)

அங்குலி aṅkuli
n. <aṅguli.
1. Finger or toe;
விரல் (திவா.) அங்குலி யெண்களி னமைத்து (பெரியபு. ஆனாய. 13).

2. Finger-ring, toe-ring;
மோதிரம். மேல்விரல் தனக்கு மங்குலி பொருத்தி (நல். பாரத. திரௌ. 30).

அங்குலிகம் aṅkulikam
n. < aṅgulīka.
Finger-ring;
மோதிரம். அங்குலிக மொன்றுபுன லாழ்தரு கிணற்றில்விழ (பாரத. வாரணா. 51)

அங்குலிதோரணம் aṅkuli-tōraṇam
n. <aṅguli+tōraṇa.
A decorative mark on the forehead drawn with sandal paste or other materials;
தோரணம்போல் நெற்றியிற் றரிக்குங்குறி.

அங்குலியம் aṅkuliyam
n. <aṅgulīya.
Finger-ring;
மோதிரம். (யாழ். அக.)

அங்குஸ்தான் aṅkustāṉ
n. <U. angusthān.
Thimble;
தைப்போர் விரலில் அணியுங் கூடு.

அங்கே aṅkē
adv. <அங்கு.
There;
அங்கு.

அங்கை aṅkai
n. <அகம்+கை.
Palm of hand;
உள்ளங்கை. (தொல். எழுத். 315. உரை)

அங்கோடம் aṅkōṭam
n. <aṅkōṭa.
Sage-leaved alangium. See அழிஞ்சில்.
(சங். அக.)

அங்கோடிங்கோடு aṅkōṭiṅkōṭu
adv. <அங்கோடு+இங்கோடு.
Here and there;
அங்குமிங்கும். (ஈடு, 1,4,9.)

அங்கோலதைலம் aṅkōla-tailam
n. <aṅkōla+.
Oil extracted from aṅkōla seeds for magical purposes;
இந்திர ஜாலவித்தைக்குரிய தைல வகை. (சம்.அக.)

அங்கோலம் aṅkōlam
n. <aṅkōla.
1. Sage-leaved alangium. See அழிஞ்சில்.
(மலை.)

2. Thin sage-leaved Indian linden, m.tr., Grewia excelsa;
மரவகை. (L.)

அங்கோலவைரவன் aṅkōla-vairavaṉ
n. <id.+.
See அங்கோலம், 1.
(மலை.)

அங்கோலை aṅkōlai
n. <id.
Akōla bark;
அழிஞ்சிற் பட்டை. அத்த மதியுதய மங்கோலை (இராசவைத்.270).

அங்ஙன் aṅṅaṉ
adv.
See அங்ஙனம்,
1. நம்மொடு மங்ஙன் குலாவினான் (திருக்காளத். பு. 16, 16).

See அங்ஙனம்,
2. அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிதுபுகல்வேன் (தாயு. சித்தர். 10).

அங்ஙனம் a-ṅ-ṅaṉam
adv. <அ+ஙனம்.
1.There;
அவ்விடம்.

2. In that manner;
அவ்விதம்.

அச்சகம் accakam
n. cf. akṣaka.
Species of Hygrophila. See நீர்முள்ளி.
(மலை.)

அச்சகாரம் accakāram
n. <satyaṅkāra.
Earnest money, a advance payment. See. அச்சாரம் Loc.
.

அச்சச்சுவை acca-c-cuvai
n. அச்சம் +. (Poet.)
Sentiment of fear or terror;
சுவை வகை.

அச்சடி - த்தல் accaṭi-
v. tr. அச்சு2+ அடி-.
To print, as a book, a cloth;
பதிப்பித்தல்.

அச்சடிச்சீலை accaṭi-c-cīlai
n. <id.+.
Chintz;
சித்திரவர்ணம் பதிக்கப்பட்ட சீலை. Colloq.

அச்சடியன் accaṭiyaṉ
n.
See அச்சடிச்சீலை.
.

அச்சடியோலை accaṭi-y-ōlai
n. <id.+.
Stamped ōla;
முத்திரையிட்ட ஓலைப்பத்திரம். Loc.

அச்சடை accaṭai
n. <ajjhaṭā.
Species of Phyllanthus. See கீழ்காய்நெல்லி.
(தைலவ. தைல. 4.)

அச்சடையாளம் accaṭaiyāḷam
n. <அச்சு2+ அடையாளம்.
1. Resemblance, as in bodily features;
அங்க ஒப்புமை. Colloq.

2 Marks of a slave branded on the body;
அடிமை யென்பதைக் காட்டச் சுடுங் குறி. Chr.

அச்சத்தி accatti
n.
Brinjal. See கத்திரி
(மூ.அ.)

 
23