Word

English & Tamil Meaning
பொருள்

அச்சதந்தெளி - த்தல் accatan-teḷi-
v.intr. <akṣata+.
To sprinkle a mixture of rice and Cynodon grass, as on a newly married couple;
அறுகும் அரிசியும் இடல். Colloq.

அச்சந்தெளி - த்தல் accan-teḷi-
v. intr.
Dial. var. of அச்சதந்தெளி-.
.

அச்சநீலம் acca-nīlam
n. accha+.
Ultramarine;
சுத்தநீலம்.

அச்சபரம் accaparam
n. cf. ikṣupra.
Kans. See நாணல்.
(மலை)

அச்சம் 1 accam
n. <அஞ்சு-. [M. accam.]
Fear, dread, terror;
பயம். (பிங்.)

அச்சம் 2 accam
n.
1. West-Indian peatree. See அகத்தி.
(திவா.)

2. Thinness;
இலேசு. இந்தத் தகடு அச்சமாயிருக்கிறது. Loc.

அச்சம் 3 accam
n. cf. akṣa.
A mineral poison;
காய்ச்சற்பாஷாணாம். (சங்.அக.)

அச்சம் 4 accam
adv. <accha.
Exactly;
சரியாய். அவ னச்சந் தந்தைபோ லிருக்கிறான். Loc.

அச்சமம் accamam
n.
Species of gress. See முயிற்றுப்புல்.
(மலை.)

அச்சமாடல் accam-āṭal
n. <அச்சம்+.
Talking so as to frighten others;
அச்சமுண்டாகப் பேசுகை. அழுக்கா றவாவஞ்ச மச்சமாடலும் (நன். 31.).

அச்சயன் accayaṉ
n. <a-kṣaya.
God, as the imperishable One;
அழிவில்லாத கடவுள்.

அச்சரக்காய்ச்சல் accara-k-kāyccal
n. <அச்சரம்1+
Fever arising from or accompanying thrush, febris aphthosa;
சுரவகை. (W.)

அச்சரசு accaracu
n. <Pkt. accharasa <apsaras.
Celestial nymph, courtesan of Svarga;
அப்ஸரஸ் ஸ்திரீ.

அச்சரம் 1 accaram
n. [T. akṣaramu.]
Thrush, aphthae, parasitic stomatitis, a disease of the mouth. See அட்சரம்
.

அச்சரம் 2 accaram
n. <akṣara.
Letter;
எழுத்து. Vul.

அச்சலச்சலாய் accal-accal-āy
adv.
Repeatedly, successively, as shower after shower;
பாட்டம் பாட்டமாய். மழை அச்சலச்சலாய்ப் பெய்கிறது.

அச்சவுபதை acca-v-upatai
n. <அச்சம்+.
Test of a minister's or officer's honesty by throwing him into circumstances in which he has to maintain his courage amidst fear of death, one of four. upatai. q.v.,;
உபதை நான்கனுள் ஒன்று. (குறள், 501, உரை.)

அச்சன் accaṉ
n. <Pkt. ajja <ārya. [K. acca, M. accan, Tu. ajje.]
Father;
தந்தை. (தொல். சொல் 400, உரை.)

அச்சா accā
int. <U. acchā <accha.
Well done! very good!
மிகநன்று. colloq.

அச்சாணி acc-āṇi
n. < akṣa+āṇi.
Linch pin கடையாணி.
தேர்க்கச்சாணி யன்னார் (குறள், 667).

அச்சாணிமூலி accāṇi-mūli
n.
A hedge-twiner. See வேலிப்பருத்தி.
(மலை.)

அச்சாப்பொங்கா accā-p-poṅkā
n. <அச்சோ+பெண்காள்.
Dance of women round a lamp singing and clapping hands;
பெண்கள் ஆட்டவகை. Brāh.

அச்சாரம் accāram
n. <satyaṅkāra.
Earnest money, advance given to ratify a bargain;
முன்பணம். Colloq.

அச்சாவாகன் accāvākaṉ
n. <acchāvāka.
1. Priest, officiating at some sacrifices as a co-adjutor of hōtr;
யாகத்தில் ஹோதாவுக்குத் துணையாயிருப்பவன்.

2. Stupid dunce;
அசடன். Colloq.

அச்சாறு accāṟu
n. <U.acār.
Pickles;
ஊறுகாய். Parav.

அச்சான் accāṉ
n. <அச்சு2.
Cast taken from a mould;
அச்சிலுண்டாம் உருவம். Loc.

அச்சானம் accāṉam
n. <a-jāna.
Spiritual ignorance;
அஞ்ஞானம். (ஞானா. பாயி. 6,26.)

அச்சானியம் accāṉiyam
n. <id.
1. Unhappiness, painful state of mind, as from a bad omen;
தீக்குறி முதலியவற்றால் நேரும் மன விகற்பம். அங்கேபோக மனசுக்கு அச்சானியமாயிருக்கிறது. Colloq.

2. Inauspiciousness;
அமங்கலம். ஏன் அச்சானியமாய்ப் பேசுகிறாய்? Colloq.

அச்சி 1 acci
n. cf. agasti.
West-Indian pea-tree. See அகத்தி.
(இராசவைத்.)

அச்சி 2 acci
n. <M. acci,
Nāyar woman;
நாயர்சாதிப் பெண்.

அச்சி 3 acci
n. <Malay. achih, 'wood leech'.
1. Achin, the NW. division of Sumatra;
ஒரு தேசம்.. அச்சியிலே போனாலும் அகப்பை யரைக்காசு (தண்டலை. 99).

2. See அச்சிமட்டம்.
.

அச்சி 4 acci
pari.
A fem. suff., as in வேட்டுவச்சி;
ஒரு பெண்பால் விகுதி. (வீரசோ. தத்தி. 5.)

அச்சித்தினை acci-t-tiṉai
n. <அச்சி3+.
Variety of Italian millet, Setaria italica, as from Achin;
தினைவகை

அச்சிநடை acci-naṭai
n. <id.+.
Amble of the Achin pony;
அச்சிக்குதிரையின் கதி.

அச்சிநறுவிலி acci-naṟuvili
n. <id.+.
Scarlet long-flowered sebesten, s.tr., Cordia sebestena;
மர வகை. (மூ.அ.)

 
24