Word

English & Tamil Meaning
பொருள்

அச்சிமட்டம் acci-maṭṭam
n. <id.+.
Achin pony;
அச்சிதேசத்துச் சிறு குதிரை.

அச்சியந்திரசாலை acciyantira-cālai
n. <அச்சு2 +yantra+.
Printing-house;
அச்சுக் கூடம்.

அச்சியர் acciyar
n. <āryā. (Jaina.)
Women ascetics;
ஆர்யாங்கனைகள். அங்கபூ வாதி நூலு ளச்சியர்க் குரிய வோதி (மேருமந். 619).

அச்சிரம் acciram
n. <அல்1 'night'+sisira.
Early dewy season;
முன்பனிக்காலம். (சிலப். 14, 105.)

அச்சு 1 accu
n. <அஞ்சு -.
Fear;
அச்சம். நகை யச்சாக (பரிபா. 3, 33).

அச்சு 2 accu
n. [T. K. M. accu.]
1. Mould;
கட்டளைக்கருவி. அச்சிலே வார்த்த உருவம்.

2. Wire mould;
கம்பியச்சு. கம்பி வாங்கு மச்சென லாயதால் (இரகு. திக்கு. 189).

3. Printing type;
உருக்கெழுத்து.

4. Exact likeness;
சரியொப்பு. கடைமாந்த ரச்சாய் (சேதுபு. வேதா. 16).

5. Sign, mark, print, stamp;
அடையாளம். பவளத் திருமார்பி லச்சிட்டவர்க்கு (ஏகாம். உலா. 211).

6. Weaver's reed instrument for pressing down the threads of the woof;
நெய்வோர் கருவிவகை.

7. Comb-like frame in a loom through which the warp threads are passed and by which they are pressed or battened together;
நெய்வோர் கருவிவகை.

அச்சு 3 accu
n. <akṣa.
1. Axle;
உருள் கோத்தமரம். உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து (குறள், 667).

2. Axle-bolt. See அஞ்சுருவாணி.
(பிங்.)

3. Central pin, or handle of a millstone;
ஏந்திரவச்சு.

4. Support, basis;
ஆதாரம். செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு (வள்ளுவமா. 21).

5. Strength;
வலிமை. வேந்தடர்த்த வச்சு (சீவக. 2777).

6. Original form;
மூலரூபம். சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னவச் சழியும் (சி. சி. 2, 42).

7. Body;
உடம்பு. அச்செடுத்திடு முயிர்கள் (கந்தபு. சூரனமை. 137).

8. Ridge in a field;
செய்வரம்பு. அச்சுக் கட்டின நிலம்.

அச்சு 4 accu
n. <ac.
Vowel;
உயிரெழுத்து. (நன். 146.)

அச்சுக்கட்டி accu-k-kaṭṭi
n. <அச்சு2 +.
1. One who folds and ties cloth in dyeing, whereby any desired figure is printed;
ஆடையில் அச்சுவேலை செய்வோன். (சிலப். 5,17,அரும்.)

2. Indian country surgeon;
நாட்டு ரணவைத்தியன். Loc.

அச்சுக்கட்டு 1 accu-k-kaṭṭu
n. <அச்சு2 +.
1. Weaver's reed;
நெய்வார் கருவிவகை.

2. Folding of cloth in dyeing whereby the desired figure is printed;
அச்சடித்தற்காகச் சீலையை மடிக்கை.

அச்சுக்கட்டு 2 - தல் accu-k-kaṭṭu-
v.intr. <akṣa+.
1. To form a ridge around a field;
செய்வரம்பு கட்டுதல். Colloq.

2. To draw the outline of a picture;
சித்திரமெழுதுமுன் தூலரேகை வரைந்து கொள்ளுதல்.

அச்சுக்கட்டு 3 accu-k-kaṭṭu
n. <id.+.
Field with ridges, lands divided into beds to admit and retain water for the cultivation of paddy (R.F.);
வரம்பு கட்டிய செய்.

அச்சுக்கம்பி accu-k-kampi
n. <அச்சு2 +.
Iron ramrod;
துப்பாக்கிமருந்திடிக்கும் இருப்புக் கருவி. (W.)

அச்சுக்கம்பு accu-k-kampu
n. <id.+.
Wooden ramrod;
துப்பாக்கி மருந்திடிக்கும் மரத்தண்டு. (W.)

அச்சுக்கூடம் accu-k-kūṭam
n. <id.+.
Printing-house;
அச்சியந்திரசாலை.

அச்சுத்தாலி accu-t-tāli
n. <id.+.
Necklace of gold-coins or other stamped pieces;
காசுமாலை. (திவ். திருப்பா. 7. வ்யா.)

அச்சுத்திரட்டு - தல் accu-t-tiraṭṭu-
v.intr. <akṣa+.
To repair a worn axle by adding iron and heating;
வண்டியச்சு உருவாக்குதல்.

அச்சுத்திருத்து - தல் accu-t-tiruttu-
v.intr. <id.+.
To arrange plats in a field in suitable order;
செய்நேர்த்தி செய்தல்.

அச்சுதந்தெளி - த்தல் accutan-teḷi-
v.intr. <a-kṣata+.
To sprinkle a mixture of rice and Cynodon grass, as on a newly married couple;
அறுகும் அரிசியும் இடுதல். மங்கல வச்சுதந் தெளித்து ... வாழ்த்தினர் (சீவக. 2411).

அச்சுதம் 1 accutam
n. <a-kṣata.
Mixture of rice and Cynodon grass, used in benediction or worship;
அறுகும் அரிசியும் கூடியது. வாழிய ரூழியென்னா அச்சுதங் கொண்டு (சீவக. 2494).

அச்சுதம் 2 accutam
n. <a-cyuta.
The imperishable;
அழிவில்லாதது. அச்சுத மனந்தஞ் சாந்தம் (ஞானவா. சிகித். 148).

அச்சுதன் accutaṉ
n. <id.
1. The imperishable one;
அழிவில்லாதவன். அச்சுதனாஞ் சிவன் (கந்தபு. அவைபுகு. 8).

2. Viṣṇu;
திருமால். (திவா.)

அச்சுதன்முன்னோன் accutaṉ-muṉṉōṉ
n. <id.+.
Balabhadra, elder brother of Krṣṇa;
பலபத்திரன். (பிங்.)

அச்சுதை accutai
n. <a-cyutā.
Pārvatī, as the imperishable one;
பார்வதி. (கூர்மபு. திருக்கல். 23.)

அச்சுப்பலகை accu-p-palakai
n. <அச்சு2 +.
Weaver's bar;
நெய்வார் கருவி வகை. (W.)

 
25