Word

English & Tamil Meaning
பொருள்

அச்சுப்பூட்டியிழு - த்தல் accu-p-pūṭṭi-yiḻu-
v. intr. <id.+.
To pass the thread through the loom;
தறியூடு நூலைச்செலுத்தல். (W.)

அச்சுரம் accuram
n. cf. ikṣura.
1. Tribulus plant. See நெருஞ்சி.
(மூ.அ.)

2. Horse-radish tree. See முருங்கை.
(W.)

அச்சுருவாணி accuru-v-āṇi
n. <அஞ்சு1+உருவு-+.
Central bolt of a car;
தேரினகத்திற் செறிகதிர். (பிங்.)

அச்சுலக்கை acculakkai
n. <akṣa+ உலக்கை.
Axle of a well-sweep;
துலாவைத் தாங்குங் கட்டை.

அச்சுவசாஸ்திரம் accuva-cāstiram
n. <ašva+.
Hippology;
அசுவசாஸ்திரம்.

அச்சுவத்தம் accuvattam
n. <ašvattha.
Pipal. See அரசு1.
(பிங்.)

அச்சுவத்தாமன் accuvattāmaṉ
n. <ašvatthāman.
Son of Drōṇa. See அசுவத்தாமான்.
.

அச்சுவத்தாமா accuvattāmā
n.
See அச்சுவத்தாமன்.
(பாரத. பதினைந். 27.)

அச்சுவதி accuvati
n. <ašvinī.
The first nakṣatra. See அசுவதி.
மறுவில் அச்சுவதி யாதி யிரே வதி யீறா மாதர் (நல். பாரத. பதினெட். 231).

அச்சுவம் accuvam
n. <ašva.
Horse;
குதிரை. இந்த அச்சுவம் கூர்ச்சரம் (திருவிளை. நரிபரி. 105).

அச்சுவமேதம் accuva-mētam
n. <id.+.
Horse-sacrifice. See அசுவமேதம்.
(உத்தரரா.)

அச்சுவரி accu-vari
n.
An ancient tax;
பழையவரிவகை. (I.M.P. Tn. 104).

அச்சுவன் accuvaṉ
n. <ašva. (Erot.)
Man of horse-like nature, one of three āṭavarcāti, q.v.;
குதிரைச்சாதி ஆடவன். (கல்லா. 5, மயிலேறு.)

அச்சுவினி accuviṉi
n. <ašvinī.
Name of the first nakṣatra, part of Aries;
ஒரு நட்சத்திரம். (திவா.)

அச்சுவினிகள் accuviṉikaḷ
n. <ašvin.
See அச்சுவினிதேவர்.
(பிங். 2,86.)

அச்சுவினிதேவர் accuviṉi-tēvar
n. <id.+.
Twin Vēdic gods who are physicians of heaven;
தேவமருத்துவர். (பிங்.)

அச்சுவினிமதலையர் accuviṉi-matalaiyar
n. <id.+.
Nakula and Sahadēva, the fourth and fifth of the Pāṇdavas;
நகுல சகதேவர். (பிங்.)

அச்சுறு - தல் accuṟu-tal
v.intr. <அச்சு1+உறு-.
To fear, dread;
பயமடைதல். அச்சுறு கின்ற தென் (கந்தபு. தருமகோ. 19).

அச்சுறுகொழுந்தொடர் accuṟu-koḻun-toṭar
n. <akṣa+ உறு -+.
Iron chain put round the neck of a must elephant like a garland and fastened to a tree, calculated to keep it in check;
விசையாதபடி மரங்களி லிரும்பைத் தைத்து யானைக்கழுத்திலே மலைபோலே யிடுவதொன்று. அச்சுறு கொழுந்தொடர் யாப்பழித்து (சீவக. 1836).

அச்சுறுத்து - தல் accuṟuttu-t
v.tr. caus. of அச்சுறு -.
To frighten, intimidate;
பயப்படுத்துதல். அஞ்சி யச்சுறுத்தலும் (தொல். பொ. 114).

அச்சுறை accuṟai
n. <ac+ உறை.
Body, as the sheath of the soul;
உடல். (W.)

அச்சுனிகள் accuṉikaḷ
n. <ašvin.
Twin Vēdic gods. See அச்சுவினிதேவர்.
அச்சுனிகள் தீர்த்தம் (வேதாரணி. தீர்த்த. 27).

அச்செனல் acceṉal
n.
Onom. expr. of swiftness;
விரைவுக் குறிப்பு. அச்செனத் தணந் தேகி (கந்தபு. நகர்புகு. 97).

அச்சேறு - தல் accēṟu-
v.intr. <அச்சு2 +.
To be printed;
அச்சடிக்கப்படுதல்.

அச்சோ accō
int. [M. accō.]
1. An exclamation of pity;
ஓர் இரக்கச்சொல். அச்சோ எனப்ப லிமையோரை யீண்டு சிறைவைத்த பாவம் (கந்தபு. அவைபு. 43).

2. An exclamation of wonder;
ஓர் அதிசய மொழி. அச்சோ ஒருவ ரழகியவா (திவ். பெரியதி.9,2,1).

அச்சோப்பருவம் accō-p-paruvam
n. <அச்சோ +.
Childhood, as the age when the mother seeks her child's embrace, saying அச்சோ அச்சோ.
தாய் குழந்தையை யணைக்க அழைக்கும் பருவம். (திவ். பெரியாழ். 1, 9, பதி.)

அசக்கியம் a-cakkiyam
n. <a-šakya.
That which is impossible or impracticable;
செய்ய இயலாதது. தியானம் புரிதற் கசக்கிய மாதலினால் (சூத. எக்கிய. பூ. 9, 3).

அசக்கு - தல் acakku-
v.tr. caus. of அசங்கு -.
To shake;
அசைத்தல். அகடசக் கரவின் மணியா (கந்தபு. கடவுள்வா.).

அசகசாந்தரம் aca-kacāntaram
n. <aja+gaja+antara.
Wide disparity, as between a goat and an elephant. See அஜகஜாந்தரம்.
.

அசகண்டா acakaṇṭā
n.
Species of Cleome See தைவேளை.
(மலை.)

அசகல்லி acakalli
n. <ajagalla.
A disease of children;
குழந்தைகட்கு வரும் நோய் வகை. (பதார்த்த. 1155.)

அசகல்லிகாரோகம் acakallikā-rōkam
n. <ajagallikā+.
See அசகல்லி.
(பதார்த்த. 1155, உரை.)

அசகாயசூரன் a-cakāya-cūraṉ
n. <a-sahāya+.
Hero able to accomplish great things without assistance;
துணைவேண்டாப் பெருவீரன்.

 
26