Word

English & Tamil Meaning
பொருள்

அசகியம் acakiyam
n. <a-sahya.
1. That which is unbearable;
தாங்கக்கூடாது.

2. Loathing, disgust;
அருவருப்பு.

அசங்கதம் 1 a-caṅkatam
n. <a-saṅgata.
1. That which is inconsistent;
பொருத்தமில்லாதது.

2. Falsehood;
பொய். (W.)

அசங்கதம் 2 a-caṅkatam
n. <a-samhata.
Incompact, open array of an army;
வியூகவகை. (குறள், 767, உரை.)

அசங்கதி a-caṅkati
n. <a-saṅgati.
1. Inconsistency;
பொருத்தமின்மை.

2. Figure of speech in which cause and effect are represented as not co-existent;
தொடர்பின்மையணி. மாறனலங். 203.)

அசங்கதியாடு - தல் acaṅkati-y-āṭu-
v.tr. <id.+.
To ridicule, treat with contempt;
பரிகசித்தல். அந்த மாமுனி யுரைத்ததை யசங்கதி யாடி (செவ்வந்திப்பு. உறையூரழித். 60).

அசங்கம் a-caṅkam
n. <a-saṅga.
Non attachment, freedom from worldly ties;
பற்றின்மை. அயற்சங்கமறல் அசங்கமாகும் (ஞானவா. உற். 47).

அசங்கற்பமாசம் a-caṅkaṟpa-mācam
n. <a-saṅkalpa+. (Astrol.)
Month in which the new moon appears at the beginning or end of the sun's passage from one sign of the zodiac to another;
சங்கிரமணத்தின் ஆதியந்தங்களில் அமாவாசை வர நிகழும் மாதம். (விதான. குணா. 81, உரை.)

அசங்கியம் 1 a-caṅkiyam
n. <a-saṅkhya.
That which is innumerable, unnumbered;
எண்ணிறந்தது.

அசங்கியம் 2 acaṅkiyam
n. <a-sahya.
Uncleanliness;
அசிங்கம். Colloq.

அசங்கியேயம் a-caṅkiyēyam
adj. <a-saṅkhyēya.
That which is innumerable;
எண்ணிறந்தது. அசங்கியேய கிரந்தம்.

அசங்கு - தல் acaṅku-
5 v. intr.
To stir, move, shake;
அசைதல். சங்கர நான்முகர் கைத்தலம் விண்டசங்க (கம்பரா. இராவணன்வதை. 28).

அசங்கை 1 acaṅkai
n. <a-šaṅkā.
Fearlessness, security;
பயமின்மை. அசங்கையனை (தேவா. 683, 9).

அசங்கை 2 acaṅkai
n. <a-saṅkhyā.
Dishonour;
மதிப்பின்மை. (J.)

அசஞ்சத்தி acacatti
n. <a-sam-sakti.
Non-attachment, indifference to worldly things;
பற்றின்மை. (ஞானவா. உற். 47, உரை.)

அசஞ்சலம் a-cacalam
n. <a-cancala.
Steadiness, imperturbability;
சலிப்பின்மை.

அசஞ்சலன் a-cacalaṉ
n. <id.
One who is steady, unmoved;
சலியாதவன். (ஞானா.48,15.)

அசட்டன் acaṭṭaṉ
n. cf. ašraddhā.
Low, mean person;
கீழ்மகன். கள்வராயுழ லசட்டர்க ளைவரை (கம்பரா. திருவவ. 77).

அசட்டாளம் acaṭṭāḷam
n. prob. asraddhālutva. [T. asaddāḷuvu, K. asaddaḷa.]
1.Filthiness;
ஆபாசம். Colloq.

2. Disorder, confusion, muddle;
ஒழுங்கீனம். Colloq.

அசட்டுச்சிரிப்பு acaṭṭu-c-cirippu
n. அசடு1+.
Foolish laughter. Colloq.
.

அசட்டுப்பிசட்டெனல் acaṭṭu-p-picaṭṭeṉal
n. redupl. of அசடு1.
Behaving foolishly, stupidly;
பேதைமை காட்டுகை. Colloq.

அசட்டுவிழி acaṭṭu-viḻi
n. <id.+.
Tell-tale look;
உள்ளக்குற்றத்தை வெளியாக்கும் பார்வை. Colloq.

அசட்டை a-caṭṭai
n. <a-sraddhā.
1. Contempt, disdain, disrespect;
புறக்கணிப்பு. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).

2. Inattention, heedlessness, indifference;
கவனமின்மை. காரியத்தில் அசட்டையாயிருந்துவிட்டான்.

அசடம் a-caṭam
n. <a-jada.
Non-inert, conscious being;
சடமல்லாதது. அசட மநாமயம் (கைவல்ய. சந்தே. 137).

அசடன் 1 acaṭaṉ
n. <a-caṭu. [K. asada.]
1. Foolish, stupid, silly man;
மூடன். அசடரோடுறவாடிகள் (திருப்பு. 625).

2. Low, mean person;
கீழ்மகன். அசடர்பெரியோ ராவரோ (குமரே. சத. 15).

அசடன் 2 acaṭaṉ
n. <a-jada.
One who is not insensible;
சடமல்லாதவன். அசடனாயானந்தத்தைத் தவிர்ந்து (ஞானவா. உபசா. 31).

அசடி acaṭi
n. fem. of அசடன்1. [K. asadi.]
Silly woman.
அசடிகள் கசடிகண் முழுப்புரட்டிகள் (திருப்பு. 243).

அசடு 1 acaṭu
n. <a-caṭu. [K. asadu.]
1. Stupidity;
மௌட்டியம். அறிவுளோர் தமக்கும் யாதோ ரசடது வருமேயாகில் (விவேகசிந். 64).

2.Fool;
மூடன். அந்த அசடு எங்கே? Colloq.

அசடு 2 acaṭu
n. prob. அசடு1. cf. அசறு.
Small splinter, loose, uneven portion of a surface as of a plate of metal or of a finger nail, scab as of a wound;
உலோகமுதலியவற்றிற் பெயரும் பொருக்கு.

அசடுதட்டு - தல் acaṭu-taṭṭu-
v.intr. அசடு+.
1. Ignorance or folly becoming plain;
அறியாமை புலப்படுதல். Colloq.

2. To lose beauty, brightness, as a town;
பொலிவழிதல். அந்த ஊர் அசடுதட்டியிருக்கிறது. Colloq.

அசடுவழி - தல் acaṭu-vaḻi-
v. intr. <id.+.
Ignorance overflowing;
அறியாமைபெருகுதல். அவனிடத்தில் அசடுவழிகிறது. Colloq.

 
27